உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 3

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

chat request

Hi Ravi, I dont have access to any chat servers :-(. But I'll contact u thru'mail. will send u phone no. also. --சிவகுமார் 11:01, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி

இப்படி நீக்கச் சொல்லி எனக்கு அலுப்புத் தராமல் விக்கிபீடியா நிர்வாகியாகுங்கள் என என் பேச்சுப் பக்கத்தில் எழுத முன் உங்களுக்கு நன்றிகள். கல்வியியல், திருகோணேச்சரம பக்கங்களையுயும் நீக்கிவிடுங்கள். விக்கிபீடியா நிர்வாகத்தில் எடுக்கும் கவனத்துகு உங்களுக்கு என் பாராட்டுக்கள். --கோபி 18:48, 21 ஆகஸ்ட் 2006 (UTC)

கட்டுரை பெயர்கள்

நான் நாடுகள் பற்றி எனது கவனத்தை செலுத்த உள்ளேன். அதில் ஒரு சின்ன பிரச்சின்னை. எப்படி பக்கங்க்களை பெயரிடுவது என்பட்ட்டு தான்.

  • சின்னம் மாலைதீவுகள் -எதிர்- மாலைதீவுகள் சின்னம்---மாலைதீவுகள் (சின்னம்)
  • கொடி இலன்ங்கை-----இலங்கை கொடி-----இலங்கை (கொடி)

இப்பெயர்கள் நாடுகள் தகவல் சட்டத்தில் இருந்து வருவதால் "இலங்கையின் கொடி" போன்ற பெயரை எடுக்க முடியாது. (ஏ+கா-மாலைதீவுகள்யின் கொடி)--டெரன்ஸ் \பேச்சு 03:14, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

ok i will do it thanks--டெரன்ஸ் \பேச்சு 12:21, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

தொடர்புத் தகவல்கள்

ரவி அவர்களே எனது தொடர்புதகவல்களை உங்களது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தேன் கிடைத்ததா? --ஜெ.மயூரேசன் 08:55, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

இப்போது அழைக்கலாம். --ஜெ.மயூரேசன் 10:31, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

FireFox உலாவி

ரவி, நான் விக்கிபீடியா பக்கங்களை FireFox மூலமாகவே உலாவி வருகிறேன். கடந்த சில நாட்களாக விக்கிபீடியா பக்கங்கள் (தமிழ், ஆங்கிலம் உட்பட) சரிவரத் தெரிவதில்லை. குறிப்பாக Frames தெரியவேயில்லை. எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சினையா? IE இல் ஒழுங்காக வருகின்றது. Firefox, IE ஐ விட தெளிவாகவும் அழகாகவும் முன்னர் இருந்தது. அதனால் firefoxஇல் உலாவுவது எனக்கு பிடித்தமானது.--Kanags 08:54, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

பொதுவாக, தமிழ் விக்கிபீடியா மற்றும் ஆங்கில விக்கிபீடியா தளம் IEல் தெளிவாகத் தெரிவதாக தான் நினைக்கிறேன். firefoxல் சில வார்ப்புருக்கள் கட்டத்துக்கு வெளியே தெரியும். இது firefox பிரச்சினை என்றும் விக்கிபீடியாவில் ஒன்றும் செய்ய இயலாது என்றும் மு.மயூரன் ஒரமுறை என்னிடம் தெரிவித்து இருந்தார். எந்தப் பக்கத்தில் உள்ள frames பிரச்சினை என்று கூறினால், அதை நாம் இங்கு சரிசெய்ய இயலுமா என்று முயன்று பார்க்கலாம். html framesஐ சொல்கிறீர்களா இல்லை வார்ப்புரு borderகளை சொல்கிறீர்களா என விளங்க வில்லை. நன்றி--ரவி 09:22, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, html frames தெரியவேயில்லை. (ஆங்கிலம், தமிழ் விக்கி பக்கங்கள்) ஒரே பக்கத்தில் frames அனைத்தும் ஒன்றின் கீழ் ஒன்றாக வருகின்றது. கடந்த சில நாட்களாகத் தான் இப்பிரச்சினை. விக்கி தவிர மற்றப்பக்கங்கள் ஒழுங்காக வருகின்றன. மயூரன் firefox பாவிப்பவர். அவரிடம் விசாரிக்கிறேன். அவரை சில நாட்களாகக் இந்தப்பக்கம் காணவில்லை:))--Kanags 00:29, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, இப்போது சரியாகத் தெரிகிறது. ஆலோசனைகளுக்கு நன்றி.--Kanags 10:55, 3 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, உங்கள் ஆலோசனைப்படியே சில மாற்றங்களைச் செய்தேன். ஆனாலும் உடனடியாக மாற்றம் தெரியவில்லை. ஒரு சில நாட்களுக்குப்பின் தான் சரியானது:).--Kanags 12:26, 19 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி தமிழை ஒருங்குறியில் பார்த்து நிறுவுததற்காக விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி கட்டுரையை உருவாக்கி இருந்தேன் கூட்வே விக்கிபீடியா font help இல் பயன்படுமாறு இதன் ஆங்கிலத்திலும் கட்டுரை வரைந்துள்ளேன் இதை நீங்கள் நீக்கியுள்ளீர்கள். ஆங்கிலத்தில் கட்டுரையும் உள்ளடக்கமும் இருந்த்து தமிழ் உடைந்தவண்ணம் தோன்றும் பயனர்கள் ஆங்கிலத்தில் கட்டுரையை வாசித்து வேண்டிய மாற்றங்களை கணினியில் செய்வதற்கே ஆகும். --Umapathy 17:30, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

ரவி ஏற்கனவே வந்த 85 வார்ப்ப்ருக்கு மேல் இடமுடியாத பிரச்சினைக்கு தீர்வாகும் என பின்வரும் வார்புருக்களை ஆக்கினேன் அவை பயனளிக்க வில்லை. எனவே அழித்துவிட முடியுமா?

இவற்றுக்கு நான் மட்டுமே பங்களித்தேன், இவை தேவையற்றவை"வார்ப்புரு:நாடுகள் மொழிபெயர்ப்பு" மட்டுமே போதுமானது. i did not wanted do experiments. but for templates i can not use sand box so i tryied solve it failed sorry fo the truble.

ஆங்கில விக்கியில் 200க்கும் மேற்பட்ட வார்ப்புருக்களை இணைக்கிறார்கள் ஏன் நமக்கு முடியவில்லையோ தெரியாது. --டெரன்ஸ் \பேச்சு 03:56, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

சீன வானொலி

ஒலிக்கோப்புகளை கேட்க இயலவில்லை. நல்ல தரமான தளம். --சிவகுமார் 17:39, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்

பார்க்க பேச்சு:நீலிறும்பு --கோபி 18:26, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

Plain Lisiting of Categories

Subcategories are not being organized under alphabahtic order. Please note that. Why? enWpedia seem to organized as such as well. Is this an automatic SW upgrade/downgrade ???!!!--Natkeeran 19:30, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

Ravi, everthing is normal again :-) --Natkeeran 16:21, 25 ஆகஸ்ட் 2006 (UTC)


பணம்

பணம் கட்டுரையில் அட்டிப்படையில் மாற்றங்களை செய்துள்ளேன். மேலும் பல பகுதிகளை ஆங்கில விக்க்கியில் இருந்து மொழிபெயர்க்க எத்தனிக்கிறேன். தெரியாத ஆறு மெல்ல தான் இறங்க வேண்டியுள்ளது!!!!!!!. இப்போதைக்கு அதில் உள்ள வார்ப்புருக்கள் (தரமுயர்த்து,...) அகற்றப்படலாமா? என்பதை பார்க்கவும். --டெரன்ஸ் \பேச்சு 15:17, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

குழப்பம் தீர விளக்கம்

http://ta.wikipedia.org/w/wiki.phtml?title=Special:Categories&limit=500&offset=0 என்ற இணைப்பு முதல்பக்கத்தில் "துறைவரிசை" பட்டியலுக்கான இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. அதை அழுத்தியவுடன் முதலில் தென்படுவது இந்த ஆங்கிலத் தலைப்பு கொண்ட பகுப்புகளே. இது நமது தளத்திற்கு கெட்ட பெயர் பெற்றுத் தரும். அதையே நான் அந்தத் தொகுப்புச் சுருக்கத்தில் சுட்டினேன்.

நாயுருவி பக்கத்தில் கோபி தவறுதலாக இலத்தீனிலுள்ள அறிவியல் பெயரை சாய்வெழுத்திலிருந்து நீக்கினார். அதனால் அவரை நடைக் கையேட்டைப் பார்க்கச் சொன்னேன்.

நேரமின்மை காரணமாக குழப்பம் ஏற்படுத்தும் அளவிற்கு சுருக்கமாகக் கருத்து தெரிவித்தது என் தவறே. கோபியும் மன்னிக்க வேண்டும். -- Sundar \பேச்சு 13:59, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

அவை தவறுதலாக நீக்கப்பட்ட பகுதிகள், தற்போது மீட்டெடுத்துள்ளேன். கோபி எவ்வளவு மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பார் என்பதை இப்பொழுது உணர்கிறேன். :) -- Sundar \பேச்சு 14:18, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

வாழ்த்துக்கள்

விக்கிபீடியாப் பங்களிப்பை பெருமளவில் அதிகரிக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள். உங்கள் மன மாற்றத்துக்கு அடியேனும் காரணம் என அறிந்து மகிழ்ச்சி. கருத்துக் கந்தசாமியாகவும் தொடருங்கள். :-) --கோபி 15:53, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

குறுங் கட்டுரை விரிவாக்கும் போது குறும் பக்கங்களையும் உருவாக்கும்போது வேண்டிய பக்கங்களையும் கவனத்திலெடுப்பது நல்லது. கோபி 19:05, 30 ஆகஸ்ட் 2006 (UTC)

நபர்கள்

லெப்டினென் கேணல் போன்ற அமைப்பு தரங்களை கட்டுரை தலைப்பில் இடுவது ஏற்க கூடியதா? --Natkeeran 20:27, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ்த் திரைப்படம் தமிழ் திரைப்படம் எது சரி?

தமிழில் ழ்த் போன்று சேர்ந்து வருவது இலக்கணத்துக்கு ஆகாது அல்லவா? --Natkeeran 22:31, 8 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ்+திரைப்படம்=தமிட்டிரைப்படம் என வரும் என்றே நினைக்கிறேன். ஆனால் சமகாலப் பயன்பாட்டாளர்களுக்கு விளங்காது :-( ஆனால் தமிழ் திரைப்படம் என்பதை விட தமிழ்த் திரைப்படம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். --கோபி 15:44, 17 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ் இலக்கணம்

நன்றி ரவி, தமிழை ஓரளவுக்கு எழுத கற்றுக்கொண்டாலும் தமிழ் இலக்கணத்தை முறையாக கற்காதது எனது பிழைகளை மேலும் மேலும் உணரும்பொழுதுதான் தெரிகின்றது. குறிப்பாக இலக்கணத்தை விபரிக்கும் சொற்களில் பரிச்சியம் குறைவு. ஆங்கிலத்தையும் தமிழையும் ஒப்பிட்டு கற்பது இரண்டு மொழி இலக்கணங்களையும் கற்க உதவுகின்றது. இன்னும் நிறைய கற்க இருக்கின்றது. --Natkeeran 13:45, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரைகள் விரிவாக்கம்

ரவி, உங்களது கல்வி மற்றும் பிற பணிகள் காரணமாக நேரப் பற்றாக்குறைகள் இருக்கலாம். நான் இடையிடையே குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுக்கிறேனென்றால் மன்னிக்கவும். இப்பொழுது த.வி. யில் ஏறத்தாழ 160 கட்டுரைகள் 512 பைட்டுக்களிலும் சிறியவை. (ஒரு மாதத்தின் முன் 250 வரை இருந்ததாக ஞாபகம்) இந்த எண்ணிக்கையை நூறிலும் குறைவானதாக ஆக்க முடிந்தால் பயனுள்ளதாயிருக்கும் என்பதாலேயே தொல்லை கொடுத்து வருகிறேன். நீங்களும் சிவகுமாரும் விரிவாக்கங்களில் ஈடுபடுவது பயனுள்ளதாக உள்ளது. அவ்வாறே புதிதாக உருவாக்கப்படும் கட்டுரைகள் மிகச் சிறியவையாக இல்லாமலிருப்பதைத் தொடர்ச்சியாக உறுதி செய்து வந்தோமென்றால் நல்லது.

கட்டுரைகள் மிகச்சிறியதாக இருக்கக் கூடாது என்பது கட்டாயமில்லைத்தான். ஆனால் கூகிள் தேடலில் விக்கியில் கட்டுரை இருக்கும் தலைப்பெனில் கட்டாயம் வருகிறது. ஆதலால் தமிழ் இணையத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதவும், பயன்பாட்டை அதிகரிக்கவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை விக்கிபீடியாவால் செய்யமுடியும். எழுதும் கட்டுரைகளை ஓரளவுக்கேனும் விரிவாக எழுதுவது இணையத்தில் தமிழில் தேடுவதை ஊக்குவிப்பதாக இருக்கும். நன்றி. --கோபி 15:42, 17 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி நீங்கள் ஊகிப்பது போல தெரிகின்றது

எஸ்.செல்வராஜ் என்பர் யார் என்பதை அறிவீர்களா? பிற பயனர் கருத்து தெரிவிக்காத சமயத்தில் கட்டுரை இடப்பட்டு 1 வார காலத்தில் நீக்குவது சரியா? அல்லது நான் அதிகம் அலட்டுகின்றேனா:-) --Natkeeran 15:54, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

குறித்த ஓர் இதழில் எழுதுபவர் என்பதைத் தவிர வேறெந்தக் குறிப்பிடப்படும்படியான தகவலும் அவரைப்பற்றி அக்கட்ட்உரையில் இடப்படவில்லை. ஆயினும் delete வார்ப்புருவில் நீக்கப்படும் காலம் (ஒருவாரம் போதுமானது) குறிப்பிடப்படுவது நல்லது. --கோபி 16:15, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
நற்கீரன், கோபி குறிப்பிட்டவாறு, அக்கட்டுரையில் குறிப்பிடத்தக்க தகவல்கள் இல்லை. தவிர, இதுபோல் அடையாளம் காட்டாத பயனர்கள், வெறும் பிறப்பு, வளர்ப்பு தகவல்களுடன் பதிவு செய்யும் கட்டுரைகள் இது காறும் தம்பட்டக் கட்டுரைகளாகவே அமைந்துள்ளன. ஆகவே, இது ஒரு ஊகம் தான். இனி வரும் காலங்களில் வேண்டுமானால் ஒரு வாரம் விட்டு அழிக்கலாம்.--ரவி 18:08, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நல்ல உவமை :-)

உவமை மிக்க நன்று. சுந்தரைப் போன்றே, நீங்களும் நன்றாக உவமை சொல்கின்றீர்கள். பலர் த.வி க.க பல மணித்துளிகளை தருவதன் மூலம் அதன் மேல் உள்ள அக்கறை தெரிகின்றது :-)--Natkeeran 00:45, 25 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி

பல மாதங்களுக்கு முன்னர், தமிழ் விக்கிபீடியாவில் கைவேலையை காண்பித்தது... தமிழாற்றல் சற்று துருப்பிடித்து விட்டது இப்பொழுது. அடிக்கடி பங்களிக்க இனி முயலுகிறேன். சந்திப்போம். Chezhiyan 05:37, 26 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

பின் வரும் வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தை என்ன?
  • saffron
  • Indian flag code

Chezhiyan 05:42, 26 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

அந்த செய்தி

ரவி சில காலங்களுக்கு வெளி வந்த தினமணி செய்தி குறிப்பு உங்களிடம் இருந்தால் scan செய்து சேர்த்து விட இங்குWikipedia:தமிழ் விக்கிபீடியா அறிமுகப்படுத்தல் சேர்த்து விட முடியுமா, நன்றி. அதன் இணைப்பு தற்போது இணையத்தில் இல்லை. --Natkeeran 14:10, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

Wikinews pre-launch

You were curious about the status of the Tamil wikinews. It is currently in the pre-lauanch stage. (meta:New language pre-launch). n:en:user:Bawolff22:42, 13 அக்டோபர் 2006 (UTC)

well I have gone through the link but I don't see Tamil. So far Tamil got highest no of voting than any other language. I would be very happy to see the Tamil version. --Umapathy 02:46, 14 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
I moved it to the pre-launch section as it far exceeds the number of votes needed to start pre-launch. However I know no tamil, so I can not start the pre-launch. If your intreasted in translating, please just create a new section called tamil in meta:new language pre-launch and from there link to the page that is being translated ( something like [[meta:new language pre-launch/ta/<tamil word for main page>]]) . Feel free to ask any questions. n:en:user:Bawolff 21:45, 14 அக்டோபர் 2006 (UTC)

hi

I am en:User:Thamizhan please post ur talk there instead of here my tamil account. Prin 19:00, 18 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, இயலுனுமானவரை மேம்படுத்தவும். நன்றி.


Re:doubts

I would suggest you do not delete the redirects. In english wiki, they are tagged as R from misspelling. It does no harm to leave the redirect in place for alternate spellings. In any case, I will modify the code to only to look at the Translation needed page for new articles. So the bot would never create the same article again.

I am a newbie on Telugu wiki. So I have no idea how they managed to hit 20,000. I do know they use bots liberally. -- Ganeshk 17:32, 23 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

If that is the policy here, then that's fine. It is not a alternate spelling...it is misspelling (incorrect spelling). These redirects help stop someone coming along to create a new article on a wrong name. Now it's up to you weigh these benefits vs deletion. Regards, Ganeshk 17:47, 23 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, சகோதர திட்ட தொடுப்புக்களைக் தாருங்கள்

--Natkeeran 14:29, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டுக் கிராமங்கள் எதிர் தமிழ்நாட்டு கிராமங்கள்? :-0

--Natkeeran 14:49, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

பகுப்பு:தமிழ்நாட்டுக் கட்டிடங்களும் அமைப்புகளும்

பகுப்பு:தமிழ்நாட்டுக் கட்டிடங்களும் அமைப்புகளும் அல்லது பகுப்பு:தமிழ்நாட்டுக் கட்டிடங்களும் அமைப்புக்களும் எது சரி? Buildings and Structures in Tamil Nadu, வேறு பொருத்தமான தலைப்பு தெரிந்தாலும் சுட்டவும். நன்றி. --Natkeeran 16:53, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவில் தற்பொழுது உள்ள கட்டுரைகள்

புரிந்தது. நன்றி புருனோ மஸ்கரனாஸ் 06:59, 22 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

கட்டுரைகளின் எண்ணிக்கை குறித்து ஒரு பதிவு (Register !!!)

ஐ.பி முகவரி

லினக்ஸ் இயங்குதளத்தில் ஐ.பி முகவரியைக் கண்டுபிடிக்க ifconfig என்ற கட்டளையை பயன்படுத்துக இரவி. --Sivakumar \பேச்சு 05:37, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

Put Somewhere in the first page or atleast one click away

Wikipedia:மணல்தொட்டி Thanks. --Natkeeran 19:57, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]