உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Meera Laxman

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Meera Laxman, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:38, 21 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

தூரிகை சிந்திய எண்ணத் துளிகள்

[தொகு]

அமைதியின் அழகில் லயிக்கும் மனதிற்கு ஆர்ப்பாட்டங்கள் அர்த்தமற்றே தெரிகிறது

ஓடும் நதி தனக்கு மட்டுமே சொந்தமென அதன் கரையோர மரம் நினைத்தல் அர்த்தமற்றது.

‪#‎சில_மனங்களும்_சில_மனிதர்களும்‬

நிதர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாமல் கண்டும் காணாதுபோல கடந்துவிடுகிறோம் சுவடில்லாமல்

சில நிகழ்வுகளை மறக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே நம்மையறியாமல் நினைவு அடுக்குளின் மேலெழுப்பி விடுகிறோம்.

உருவம் தேடா உணர்வின் தொகுப்பாய் - மனதுள் உருண்டோடும் சந்தோஷ சிலிர்ப்புக்கள் தான் பெயர் கொண்டதா அன்பென்று !!

வெளிச்சம் பயத்தை ஏற்படுத்த தொடங்கும் வரை பாதைகள் எளிமையாகவே இருந்தன இருளின் மீதான அனுமானங்களும்

ஈடுபாடில்லாமல் செய்ய முற்படும் செயல்களுக்கு காலத்தை காரணம் காட்டி தப்பித்துக்கொள்ளவே விழைகிறது மனம்

புறக்கணித்தலைப் போலொரு கொடிய வன்முறை வேறொன்றும் இல்லை... ‪#‎அன்பு_செய்வோம்‬

வலியில் துடிக்கும் உயிரின் மதிப்பு பொருள் தேடலில்… பொசுங்கிப் போகிறது

எதிர்பார்ப்புகளும், இயலாமையும் ஒரே கோட்டில் நிற்கும்பொழுது வாழ்க்கை கசந்து விடுகின்றது

நல்வரவு...

[தொகு]

வணக்கம்! விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் சிறுசிறு திருத்தங்களை செய்யத் தொடங்குங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:00, 21 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Meera_Laxman&oldid=1769576" இலிருந்து மீள்விக்கப்பட்டது