உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Kalaiarasy/தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில பரிந்துரைகள்[தொகு]

முதலில் மிகச் சிறப்பான எழுத்து நடைக்கு பாராட்டுகள். முதல் பத்தியில் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதற்கான விளக்கங்களை இணைக்க வேண்டுகிறேன். இலவசம் என்பதும் யாவரும் பயன்படுத்தலாம், அச்சிடலாம் என்பதும் கூடுதல் கவனத்தினை ஈர்க்க உதவும். மற்ற கலைக்களஞ்சியத்திலிருந்து விக்கிப்பீடியாவை வேறுபடுத்திக் காட்டும். 3ம் பத்தியில் ஆரம்பத்தில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க முயன்ற சிலர் ஒரு சில தொகுப்புக்களுடன் நிறுத்திவிட்டாலும், சிலர் என்பதும் சில என்பதும் அடுத்தடுத்துவருவதை மாற்றயமைக்க வேண்டுகிறேன். படிக்கும் பொழுது நெருடலாக உள்ளது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:26, 19 செப்டம்பர் 2013 (UTC)

பரிந்துரைகளுக்கு நன்றி ஜெகதீஸ்வரன். நக்கீரனும் சில மேலதிக தகவல்கள் கூறியிருந்தார். அவற்றை ஏற்கனவே இணைத்துவிட்டேன். பத்திரிகையில் செப்டம்பர் பதிப்பில் வெளியிடுவதற்காக அவசரப்படுத்தியதால், கட்டுரையை ஏற்கனவே அனுப்பி விட்டேன். மணியனும் மின்னஞ்சல் மூலம் சில பரிந்துரைகள் தந்திருந்தார். ஆனால் நீங்கள் இருவரும் கூறிய திருத்தங்களை மேற்கொண்டுவிட்டு, அனுப்பலாமா எனப் பார்க்கின்றேன். வேறு பத்திரிகைக்கு அனுப்புவதாயினும் உதவும். எனவே திருத்தங்களைச் செய்கின்றேன். நன்றி. --கலை (பேச்சு) 09:24, 19 செப்டம்பர் 2013 (UTC)
பரிந்துரையை ஏற்றமைக்கு நன்றிங்க. உங்களது இக்கட்டுரை செரிவு மிகுந்ததாகவே உள்ளது என்பதால் நீங்கள் அனுப்பிய பத்திரிக்கையை தொந்தரவு செய்ய வேண்டாம். நக்கீரன் மற்றும் மணியன் கூறிய மாற்றங்களை இயலும் பொழுது இங்கும் இயற்றிவிட்டீர்கள் என்றால் சமூக வலைதளங்கள் மற்றும் வலைப்பூக்களில் பரப்புரை செய்ய இக்கட்டுரையை பயன்படுத்துவதற்கும் உதவும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:55, 19 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரை நன்றாக வந்துள்ளது வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 14:22, 20 செப்டம்பர் 2013 (UTC)