பயனர் பேச்சு:Drsrisenthil/பழைய உரையாடல்கள்/தொகுப்பு 3
விக்கிமீடியா வியூகம் 2017
[தொகு]தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:29, 10 ஏப்ரல் 2017 (UTC)
போட்டி
[தொகு]தொடர்பங்களிப்பாளர் போட்டியில், அறிவியல் துறை தொடர்பான பல முக்கிய கட்டுரைகளையும் விரிவாக்குதல் வேண்டும். அவ்வாறு இருக்கும் போது தாங்களும் அவற்றை விரிவாக்க விரும்புவதை ஆலமரத்தடியினில் அறிந்துகோண்டேன். மகிழ்ச்சி! அப்படியாயின் தாங்களும் அப்போட்டியில் பங்குபற்றலாமே? மாதம் 5 கட்டுரைப்படி 30 கட்டுரைகளினை 6 மாதங்களில் இலகுவில் விரிவாக்கலாம். ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல் போட்டியில் பங்குபற்றுவதாகவும் அமையும். கட்டுரைகளை விரிவாக்குவதாகவும் அமையும். போட்டியில் நிச்சயம் பங்குபெறுவீர்கள் என நம்புகிறேன். இன்ரே பதிவு செய்யுங்கள்.நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:49, 21 ஏப்ரல் 2017 (UTC)
- நன்றி ஸ்ரீஹீரன், வழங்கப்பட்ட கட்டுரைகளை விரிவாக்குவதைவிட விருப்பமான கட்டுரைகளை விரிவாக்குவது என்பதை நான் விரும்புகிறேன் என்பதாலும் தற்போது கிடைக்கும் நேரம் பின்னர் கிடைக்குமோ எனும் ஐயத்தாலும் அப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை. எனினும் தங்கள் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி எனது பெயரைப் பதிவு செய்கின்றேன்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 15:45, 21 ஏப்ரல் 2017 (UTC)
Nikolai Noskov
[தொகு]Vanakam dear Drsrisenthil! Can you make in Tamil-language an article about singer (Nikolai Noskov)? If you make this article, I will be very grateful! Thank you! -- 92.100.167.46 07:27, 22 ஏப்ரல் 2017 (UTC)
- Hello anonymous user 92.100.167.46, I will create the article. I will be happy if you reveal yourself. :) --☤சி.செந்தி☤ (உரையாடுக) 16:40, 26 ஏப்ரல் 2017 (UTC)
15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு
[தொகு]அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:11, 26 ஏப்ரல் 2017 (UTC)
சிறிது நேரத்தின் பின்னர் நிச்சயமாக இடுகின்றேன்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 16:56, 26 ஏப்ரல் 2017 (UTC)
விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!
[தொகு]--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:12, 30 ஏப்ரல் 2017 (UTC)
பதில்
[தொகு]இங்கு உங்கலுக்கு உங்களுக்கு செய்தி ஒன்று ஊல்லது உள்ளது. அருள்கூர்ந்து பதில் இட வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:32, 6 மே 2017 (UTC)
துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு
[தொகு]வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு
[தொகு]போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
- ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
- ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
- 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
- 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:12, 21 மே 2017 (UTC)
Wikiproject Medicine
[தொகு]வணக்கம் செந்தி, மேற்படித் திட்டத்தின் கீழ் அடையாளம் காட்டாத பயனர் ஒருவர் "விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT" என்ற பெயர்வெளியில் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். உ+ம்: Simple puerperal infections. இவற்றைக் கவனித்து பொதுவெளிக்கு நகர்த்த முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:32, 22 மே 2017 (UTC)
- தகவலுக்கு நன்றி Kanags, Simple puerperal infections தவிர்ந்த ஏனைய கட்டுரைகள் ( special:Contributions/46.51.201.186) ஏற்கனவே உள்ளன. மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு உள்ளது. குறிப்பிட்ட ஐ.பி பயனர் மேலும் இக்கட்டுரையை விரிவாக்குவாரா என்று தெரியாது. அவருக்கு உரையாடல் பக்கத்தில் செய்தி அனுப்பியுள்ளேன் (பயனர் பேச்சு:46.51.201.186). என்ன செய்யலாம்? --☤சி.செந்தி☤ (உரையாடுக) 16:01, 22 மே 2017 (UTC)
- குறிப்பிட்ட ஐந்து கட்டுரைகளும் ஆங்கில விக்கியில் பொதுவெளிக்கு இதுவரை நகர்த்தப்படவில்லை போல் தெரிகிறது. பார்க்க: en:Wikipedia:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections. ஏன் அவ்வாறு? இத்திட்டத்தின் கீழ் தமிழில் வேறு ஏதாவது கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளனவா? --Kanags \உரையாடுக 01:33, 27 மே 2017 (UTC)
- இத்திட்டம் (விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு) மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் உட்பட சில பயனர்களால் இங்கு செயற்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் ஆ.வியில் உள்ளதா என்பதை அறியேன், பார்க்கவேண்டும். அங்கு அக்கட்டுரை (en:Postpartum infections) ஏற்கனவே வேறு பெயரில் உள்ளது. இவை simple English விக்கிக்காக எழுதப்பட்டவை போலத்தென்படுகின்றது. ஏனெனில் கட்டுரை முன்னர் simple உள்ளது.
Kanags, மேலுள்ள அட்டவணையைப் பார்த்தீர்களானால் அனைத்துக் கட்டுரைகளும் ஆ.வியில் இருப்பதையும் நான்கு கட்டுரைகள் இங்கு இருப்பதையும் பார்க்கலாம். --☤சி.செந்தி☤ (உரையாடுக) 02:05, 27 மே 2017 (UTC)
- தெளிவுபடுத்தியமைக்கு நன்றி செந்தி. புதியவர் எழுதியிருக்கும் நான்கு கட்டுரைகளும் இணைப்பதற்குத் தகுதியானவையா எனச் சரிபார்த்து இணைப்பு வார்ப்புருக்களை இடலாமா?--Kanags \உரையாடுக 02:18, 27 மே 2017 (UTC)
- ஆம், அவரது மொழிபெயர்ப்பு நன்றாகவே உள்ளது, எனினும் கட்டுரைகளை இணைப்பது சிரமமாக இருக்கலாம். விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தலாம். - செந்தி
- நல்ல தகவல்கள் அந்தக் கட்டுரைகளில் இருந்தால், இணைப்பிற்கு முயற்சி செய்யலாம் எனத் தோன்றுகிறது. நான் நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். ஆனால் முதலில் பொதுவெளிக்கு அவற்றை நகர்த்த வேண்டுமா?--கலை (பேச்சு) 12:52, 27 மே 2017 (UTC)
- ஆம், அவரது மொழிபெயர்ப்பு நன்றாகவே உள்ளது, எனினும் கட்டுரைகளை இணைப்பது சிரமமாக இருக்கலாம். விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தலாம். - செந்தி
- நகர்த்தாமலேயே இணைக்கலாம் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 12:55, 27 மே 2017 (UTC)
- ஏற்கனவே இங்கு இல்லாதபடியால், விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections எனும் கட்டுரையை சிறிது திருத்தம் செய்த பின்னர் பொதுவெளிக்கு நகர்த்தலாம். மற்றையவை உங்களது கூற்றுப்படி நல்ல தகவல்கள் இருப்பின் இணைக்கலாம். --☤சி.செந்தி☤ (உரையாடுக) 16:08, 27 மே 2017 (UTC)
உதவி...
[தொகு]வணக்கம். பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#மருத்துவம் என்பதனைக் கவனித்து, தங்களால் இயன்ற பங்களிப்பினை தர வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:44, 28 மே 2017 (UTC)
- முயற்சிக்கின்றேன். ஒரு கட்டுரை விலங்கு மருத்துவத்தில் உள்ளது, பெயர் மாற்றவேண்டி இருக்கும்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 16:43, 28 மே 2017 (UTC)
உதவி தேவை
[தொகு]நோய்கள் தொடர்பான இந்த வார்ப்புருவில், அறிகுறிகள், காரணிகள், இடர்கள், சிகிச்சைகள் போன்றனவும் தெரிய வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்? நான் வார்ப்புருவில் அவற்றை இணைத்துப் பார்த்தேன். ஆனால் கட்டுரையில் இணைக்கும்போது, அவை தெரியவில்லையே?--கலை (பேச்சு) 10:37, 28 மே 2017 (UTC)
- கலை, இதற்குப் புதிய வார்ப்புரு உண்டு - வார்ப்புரு:Infobox medical condition (new)
{{Infobox medical condition (new) | name = <!--{{PAGENAME}} by default--> | synonym = | image = | image_size = | alt = | caption = | pronounce = | specialty = <!-- from Wikidata, can be overwritten --> | symptoms = | complications = | onset = | duration = | types = | causes = | risks = | diagnosis = | differential = | prevention = | treatment = | medication = | prognosis = | frequency = | deaths = }}
- பயனர்:Drsrisenthil/மணல்தொட்டி இங்கே பாருங்கள் இரண்டையும் ஒப்பிட்டுள்ளேன்.
---☤சி.செந்தி☤ (உரையாடுக) 16:38, 28 மே 2017 (UTC)
- பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் கட்டுரையில், அந்த மேலதிக விடயங்களை இணைத்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை தெரியவில்லையே. ஏன்? நீங்கள் அதை மாற்றிவிடுவீர்களா? நன்றி.--கலை (பேச்சு) 16:51, 28 மே 2017 (UTC)
- நீங்கள் பழைய வார்ர்புருவைத்தான் இட்டுள்ளீர்கள் ஆனால் மேலே புதிய வார்ப்புருவின் ஏதுமற்ற "Infobox medical condition (new)" மட்டுமே உள்ளது. புதிய வார்ப்புருவில் எதோ நிரல் பிழை உள்ளது போலும், நான் புதிதாய் இடும்போது பிழைகள் காட்டுகின்றன. நான் இதனைச் சரிசெய்ய முயற்சிக்கின்றேன்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 16:54, 28 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
[தொகு]போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:
- 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
- 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
- ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
- ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
- 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:00, 31 மே 2017 (UTC)
நீரிழிவு நோய்
[தொகு]நீரிழிவு நோய் கட்டுரையை போட்டிக்காக மணி.கணேசன் அவர்கள் விரிவாக்கியுள்ளார். தயவுசெய்து அதனைப் பார்த்து உங்கள் கருத்தைக் கூற முடியுமா?--கலை (பேச்சு) 21:05, 12 சூன் 2017 (UTC)
- "222.165.168.122" ஐ.பி பயனர் கட்டுரை தொடங்கும் போது கட்டுரையின் அமைப்பைக் கேள்வி / பதில் வடிவில் உருவாக்கியுள்ளார். இது தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்துள்ளது. இது முதலில் சீர்திருத்தப்படவேண்டும். இக்கட்டுரை இன்னும் அழகாக மற்றும் அறிவியல் விளக்கங்கள் சேர்த்து எழுதப்படவேண்டும். மிகவும் தேவையான கட்டுரை!
கலை, இந்த உணவுவகைகள் நீரிழிவைக் கட்டுப்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் தேவை அல்லவா?. வலைப்பதிவுகளை (மேற்கோள் 6, 7) ஆதாரம் காட்டுதல் கூடாது என்பதைத் தெரிவிக்கவேண்டும். இதே போன்று http://www.valaitamil.com/12-best-foods-for-diabetics_11023.html எனும் இணையதளத்திலும் எழுதப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெறல் நல்லது. பல உணவுவகைகள் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம், அவற்றுக்கு சித்த மருத்துவத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம். இவை மேற்கத்தைய மருத்துவத்துடன் தாக்குப் பிடிக்காமல் எங்கோ ஒளிந்து இருக்கலாம்.
// நீரிழிவு நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள்,நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்திட பரிந்துரைக்கும் முதன்மையான பதினைந்து வகை உணவுகளாவன.// என்று கூறப்பட்டு, பின்னர் இயற்கை இனிப்பு, மதுபானம் கூடாது என்று எழுதப்பட்டு இருப்பது முரணாக உள்ளது.
ஆதாரமின்றிய சந்தர்ப்பத்தில் "குறிப்பிட்ட உணவு வகைகள் நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன என்று நம்பப்படுகிறது" என்று எழுதலாம். ஆனால் //ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை, 100 மி.லி.தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து// என்று எழுதுவது சரியல்ல. மொத்தத்தில் எழுதப்பட்டதை வேறுவிதமாக எழுதல் வேண்டும். (எனக்கு நேரமிருந்தால் உதவி செய்யமுடியும் - ஆனால் தற்போதைக்கு எனக்கு நேரமில்லை). அடுத்து, மணி.கணேசன் அவர்களுக்கு வசனத்தின் இறுதியில் வரும் முற்றுப்புள்ளிக்கும் அடுத்த வசனத் தொடக்கத்துக்கும் இடையே இடைவெளி தேவை என்பதை கனக்சு சுட்டிக்காட்டி இருந்தார். இக் கட்டுரையிலும் இவ்வழு தென்படுகின்றது. --☤சி.செந்தி☤ (உரையாடுக) 06:05, 13 சூன் 2017 (UTC)
துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு
[தொகு]வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு
[தொகு]வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
தலைவலி கட்டுரை
[தொகு]தலைவலி கட்டுரையை பார்வையிட்டு, திருத்தங்கள் தேவைப்படின் கூற முடியுமா? --கலை (பேச்சு) 06:15, 26 சூன் 2017 (UTC)
- கலை, மேலோட்டமாக பார்த்ததில் தலைவலி கட்டுரையில் பதிப்புரிமையுள்ள விடயங்கள் உள்ளன. வளர்சிதைமாற்றம் கட்டுரை "வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவு வகைகள்" பகுதி முற்றிலும் நீக்கப்படுதல் நன்று, இதுவும் ஆனந்த விகடனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபரது கட்டுரைகள் அனைத்தும் இவ்வாறு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறிப்பிட்டும் அவர் கேட்பதாக இல்லை. எனக்குப் போதிய நேரமில்லை. பின்பு உரையாடுகின்றேன்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 21:46, 5 சூலை 2017 (UTC)
Alkali என்பதன் தமிழாக்கத்தில் உதவி தேவை
[தொகு]☤சி.செந்தி☤, Alkali என்ற சொல்லை எவ்வாறு மொழிபெயர்ப்பது? காரம் என்றா? Base என்பது முன்னதாக காரம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே? ஆலோசைன வழங்கவும். தமிழ்நாடு அரசு பாடநுால்களில் ஏற்கெனவே ஆல்கலி என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. உங்களது மேலான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 17:56, 11 திசம்பர் 2017 (UTC)
மகாலிங்கம், தாமதமான பதிலுக்கு மன்னிக்க. அமிலம் (காடி) [Acid] - காரம் [Base] என்பதுவே சரியான முறை எனக் கருதுகின்றேன். Base-க்கு மூலம் என்றும் வழங்கப்படுகின்றது. Alkali என்பது காரத்தின் ஒரு பிரிவு என்பதாலும் அது நீரில் கரையும் காரம் என்பதாலும் நீர்க்காரம் எனலாம். செல்வா அவர்களிடம் உதவி கோரலாம்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 04:51, 3 சனவரி 2018 (UTC)
☤சி.செந்தி☤, மிக்க நன்றி. நான் அந்தக் கட்டுரையை ஆல்கலி (காரம்) என்ற பெயரில் மாெழிபெயர்த்துள்ளேன். தாங்கள் சொல்லியபடி நீர்க்காரம் என்பதும் சரியாகவே இருக்கும் என நினைக்கிறேன். தேவைப்படின் கட்டுரையின் தலைப்பை மாற்றிக்கொள்ளலாம். மிக்க நன்றி.மகாலிங்கம்
- நீர்க்காரம் என்பது சரியாக இருக்கும். ஆக்ஃசுபோர்டு ஆங்க்கில அகரமுதலியில் இதன் சொற்பிறப்பியல் கீழ்க்காணுமாறு தரப்பட்டுள்ளது:
///< post-classical Latin alkali (from 13th cent. in British sources; earliest in sal alkali alkali salt) < Arabic al-qali , al-qaly soda ash, soda, potash < al the + qali , qaly , colloquial variants of qily soda ash, soda, potash ( < qalā to fry, bake, roast). Compare Middle French, French alcali saline substance extracted from the calcined ashes of plants (mid 13th cent. in an apparently isolated attestation;../// (நன்றி OED).
வேதியியலில் நாம் கொள்ளும் பொருள் சற்றேறக்குறைய 1800 முதல் உள்ளது. இதன் பொருளாக OED தரும் பொருள் OED: "A substance having the characteristics exemplified by soda, i.e. a caustic or acrid taste, the power of neutralizing or effervescing with acids, and of forming soaps with oils; a water-soluble base, esp. a soluble hydroxide such as those of sodium, potassium, and ammonium. Also as a mass noun: any matter of this kind, esp. as used in industrial or synthetic processes. Contrasted with acid."
கடைசியில் உள்ள "Contrasted with acid" என்றிருப்பதால் "காரம்"தான், ஆனால் ஒருவகையான காரம் அல்லது நீரில் கரையும் உப்பனையப் பொருள் (" a water-soluble base, esp. a soluble hydroxide such as those of sodium, potassium, and ammonium").--செல்வா (பேச்சு) 17:01, 4 சனவரி 2018 (UTC)
நன்றி செல்வா. --☤சி.செந்தி☤ (உரையாடுக) 20:24, 16 சனவரி 2018 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
[தொகு]அன்புள்ள செந்தில்,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி.--இரவி (பேச்சு) 19:07, 18 மார்ச் 2018 (UTC)
தங்கள் மடலுக்கு நன்றி, இரவி. தமிழில் அறிவியல் ஓங்கி நிற்கவேண்டும் என்பதுவே எனது அவா. சிற்சில காரணங்கள், சூழ்நிலைகளால் எழுதுவது தடைப்பட்டது. மீண்டும் நேரத்தை ஒதுக்கி எழுதவேண்டும் என்று மிக்க ஆவல். என்னால் இயன்றவரையில் பங்கெடுக்கின்றேன். இன்றே பங்கெடுக்கின்றேன், ஒவ்வொருதடவையும் தங்களது தூண்டுதலால் மீண்டும் எழுத்துலகுக்கு வர முடிகின்றது, அதற்கு மாபெரும் நன்றி. --☤சி.செந்தி☤ (உரையாடுக) 19:31, 18 மார்ச் 2018 (UTC)
- மிக்க மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்புகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 06:49, 19 மார்ச் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்
[தொகு]வணக்கம்.
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.
இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.
நன்றி.
- முன்பு போன்று விக்கிக்கு நேரத்தை ஒதுக்குவது மிகவும் கடினமாக உள்ளது. என்னால் முடிந்தவரை எழுதுகின்றேன்.
- முன்பு நடந்த போட்டியில் ஒருவர் எழுதிய கட்டுரையை மற்றவர் அவரது அனுமதியில்லாமல் தொடர்வது இருந்தது. இதுவே இப்போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வத்தைக் குறைத்தது. இது இப்போதும் நிகழ்கின்றது. ஒரு கட்டுரையை விரிவு படுத்தத் தொடங்கி இருக்கின்றேன் என்றால் அதனை முடித்துத் தருவது எனது கடமை. இதற்குள் வேறொருவர் அதனைத் தொடர்வது என்பது விக்கியைப் பொறுத்தவரை சரி எனினும், ஒன்றை எழுதத் தொடங்கும்போது இக்கட்டுரையை இவ்வாறு வளர்த்தெடுக்கவேண்டும் என்று கட்டமைத்த எண்ணங்களைச் செயற்படுத்த முடியாமல் போகின்றது.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 17:16, 6 மே 2018 (UTC)
உங்களின் பங்களிப்பிற்கு சகபோட்டியாளராக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எழுதத் தொடங்கி இருக்கும் கட்டுரைகளில் தொகுக்கப்படுகிறது எனும் வார்ப்புருவைச் சேர்த்தால் இவ்வாறு நிகழாது என அறிகிறேன். நான் தங்களைப் போன்ற வழமைகள் அறியாதவன். ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். தற்போதைய நிலவரத்தின்படி நாம் பஞ்சாபியை விட 4 கட்டுரைகளே பின்தங்கியுள்ளோம். எனவே குழுவாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றிபெறலாம் என்பது என் எண்ணம். வாழ்க வளமுடன். நன்றிDsesringp (பேச்சு) 07:49, 8 மே 2018 (UTC)
தங்கள் கருத்துக்கு நன்றி. வார்ப்புரு நீண்டநாட்களுக்குப் போட முடியாது. இதில் எனது பிழையும் உண்டு - தொடங்கிவிட்டு ஒரு மாதமாக எழுதாமல் விட்டது, ஆனால் நேரம் கிடைக்கவில்லை. நீங்கள் சரியாகத்தான் கூறி உள்ளீர்கள்.. :) நான் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கின்றேன். --☤சி.செந்தி☤ (உரையாடுக) 00:06, 9 மே 2018 (UTC)
நன்றி நண்பரேDsesringp (பேச்சு) 03:51, 9 மே 2018 (UTC)
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!
[தொகு]வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)
வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது
[தொகு]வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.
நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி
மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!
[தொகு]வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி
வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!
[தொகு]வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி
வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்
[தொகு]வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி