நோய்கள் பற்றி நாம் ஒரு அடிப்படைக் கட்டுரை (3-5 வசனங்கள்) எழுதக் கூடியவாறு ஒரு அட்டவணை தாயரித்து தந்தீங்கள் என்றால், அந்த அட்டவணையை கூடாக பூர்த்தி செய்து, தானிங்கி மூலம் கட்டுரைகளை (இதழ்கள்) உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கருத்துக்களைப் இங்கே பகிருங்கள். --Natkeeran23:01, 30 மே 2011 (UTC)[பதிலளி]
அட்டவணையாகவோ, பட்டியலாகவோ செய்யலாம். பட்டியலாகத் தகவல்களைத் தொகுப்பது இலகுவாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் கட்டுரைகள் உருவாக்கத்தில் நேர்த்தி இருக்கும். பின்னர் இந்த தகவல்களைத் தொகுத்து ஒரு தரவுத்தளம் உருவாக்கலாம். அது பின்னர் பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். மேலும் உங்கள் கருத்துக்களைக் அறிந்து. --Natkeeran21:08, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
அப்ப பட்டியலாகவே செய்யலாம், எனினும் நீங்கள் உருவாக்கிய மாதிரியில் சில மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளது, அதனை மையமாக வைத்து எனது பயனர்வெளியில் நேரம் உள்ளபோது ஒன்றை உருவாக்குகிறேன், அதன் பின்னர் உங்களுக்கு அறியத்தருகிறேன்.--செந்தி//உரையாடுக//21:14, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
போட்டிக்காக சின்னமும் பேனர்களும் வடிவமைக்க வேண்டும். தற்போது இதில் பணியாற்றி வருபவர்கள் வடிவமைப்பில் அதிகத் திறமையற்றவர்கள் :-). எனவே வரைகலை அறிந்தவர்களை அணுகி உதவி கேட்டு வருகிறேன். சின்னம் போட்டியின் கூறுகளை விளக்கும்/பிரதிபலிக்கும் ஒன்றாக அமைய வேண்டும். பேனர்கள் டக்கென்று காண்பவரைக் கவர்ந்து சொடுக்க வைப்பவையாக இருக்க வேண்டும். இதற்கு தங்கள் வரைகலை திறன் தேவைப்படுகிறது. சின்னத்தை/பேனர்களை வடிவமைத்துத் தர வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக16:18, 14 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
தாமதமாக பதிலளிப்பது மன்னிக்கவும் (நல்கை வரவு பொறுத்து தேதி பற்றி பதிலளிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்) உங்கள் பதாகை + சின்னம் கண்டேன். அருமை. இது போல இன்னும் சில சின்னங்கள் செய்து விட்டால் அவற்றிலிருந்து ஒன்று தேர்வு செய்துவிடலாம். காலவரையறை december 1 இல் live ஆக வேண்டும் என்று கொண்டிருந்தோம். இப்போது நல்கை எதிர்பார்த்தை விட விரைவாகக் கிடைத்து விட்டதால், சற்று முன்னர் நகர்த்தக் கூடும். இன்னும் ஒரு வாரம் - அக்டோபர் 26 க்குள் தங்களால் ஆன வரை பலவகை சின்னங்கள் + பதாகைகள் உருவாக்கித் தர வேண்டுகிறேன். அக்டோபர் 31 க்குள் இறுதி வடிவத்தை தெரிவு செய்து விடலாம் என எண்ணியிருக்கிறேன். (இன்னும் எதுவும் உறுதிபடுத்தவில்லை, நல்கை முன்கூட்டியே வந்து, முன்னர் போட்டிருந்த காலக்கோட்டைக் கலைத்து விட்டது :-)).--சோடாபாட்டில்உரையாடுக17:14, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி செந்தி, வலப்புறம் உள்ள சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை காமன்சில் பதிவேற்றவேண்டும் (பதிவேற்றும் போது இதை உருவாக்கப் பயன்படுத்திய பிற கோப்புகள் யாவை (நான்கு கோப்புகள்) என்ற விவரம் வேண்டும். அக்கோப்புப் பெயர்களை இணைத்து விட்டால், காமன்சுக்கு நகர்த்தி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக14:27, 1 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மென்பொருள் பயன்படுத்தி தேவையான பகுதி எடுக்கப்பட்டது
ஊடகப் போட்டிக்கு இரு வகையான பதாகைகள் தேவைப்படுகின்றன. 1) விக்கிக்குள் தள அறிவிப்பில் இட வேண்டிய பதாகைகள் 2) விக்கிக்கு வெளியே வலைப்பதிவுகள் போன்ற தளங்களில் இட வேண்டியவை. இது வரை உருவாகியுள்ளவை அனைத்தும் வெளித் தளங்களில் இடப் பொருத்தமானவை. விக்கிக்குள் தள அறிவிப்பில் இட 800 X 180 படவணு (அல்லது அதற்கு அருகில்) உடையவைத் தேவைப்படுகின்றன. இதற்கு முன்னுதராணமாக சென்றவருட நன்கொடைவேண்டுதல் முயற்சியின் சில பதாகைகளை கீழே தந்துள்ளேன். அவை போன்று உங்கள் பதாகைகளை வடிவமைத்துத் தர வேண்டுகிறேன்.
ஊடகப் போட்டி தொடங்கிவிட்டது. தங்கள் பல்கலைக்கழகம் இணையத்தளத்தில் அறிவிப்பு + பதாகை இட்டு உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன். பதாகைகள் / அறிவிப்புகள் வலைவாசல்:ஊடகப் போட்டி பக்கத்துக்கு இணைப்பு தருமாறு அமைய வேண்டும்.
தாங்கள் ஒரு மருத்துவர், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் ஆர்வலர் என்ற முறையில், இவ்வாரக் கூட்டு முயற்சியான மாரடைப்பு கட்டுரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி 23:11, 19 பெப்ரவரி 2012 (UTC)
செய்கின்றேன்..--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 08:30, 20 பெப்ரவரி 2012 (UTC)
செந்தி, விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#Medicine project என்னும் குறிப்பைப் பார்க்கவும். இது மிகவும் பயனுடைய ஒரு திட்டம் போல் தெரிகின்றது. இதற்கு நீங்கள் இயலும்போது உதவமுடியுமா? நானும் பங்களிக்க ஆவலாக உள்ளேன். இப்பொழுது குறுந்தகடு திட்டம் நடக்கின்றது. இதனோடு இதிலும் இயலுமாறு பங்களிக்க முடியுமா என எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 21:01, 24 பெப்ரவரி 2012 (UTC)
நிச்சயமாக, அங்கே எனது கருத்தையும் தகவலையும் இட்டுள்ளேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 10:15, 25 பெப்ரவரி 2012 (UTC)
மிக்க நன்றி. நானும் என்னால் ஆன உதவிகளைச் செய்ய உள்ளேன் (இயலும்போது இயலுமாறு). --செல்வா 14:49, 25 பெப்ரவரி 2012 (UTC)
மாரடப்பு கட்டுரையை கூட்டு முயற்சியுடன் மிகச் சிறப்பாக மேம்படுத்தி உள்ளீர்கள். விக்கித்திட்டம் மருத்துவம் தொடர்பான முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறீர்கள். இதனை முன்னிட்டு இப்பதக்கத்தைத் தங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி இரவி (பேச்சு) 21:08, 9 மார்ச் 2012 (UTC)
தங்கள் வாழ்த்துக்கு நன்றி, செந்தி. இடையில் சில ஆண்டுகள் நேரடியாக இலங்கையில் இருந்து பங்களிப்போர் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். தற்போது தங்களைப் போன்ற பயனர்கள் இணைந்து பங்களிப்பது மிகவும் தெம்பாக இருக்கிறது. நன்றி--இரவி (பேச்சு) 09:56, 14 மார்ச் 2012 (UTC)
செந்தி, ஆழ்மனப்பதிவறிவு என்ற தலைப்பில் உள்ள கட்டுரை எதனைப் பற்றிக் கூறுகிறது எனத் தெரியுமா? இக்கட்டுரைக்கான ஆங்கில இணைப்புத் தெரியவில்லை. இக்கட்டுரையில் உள்ள தகவல்களுக்கு ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தன்னாய்வு போல் தெரிகிறது. இதனை எவ்வாறு மேம்படுத்தலாம்.--Kanags\உரையாடுக12:19, 22 சூலை 2012 (UTC)[பதிலளி]
எனக்குத் தெரியவில்லை. செல்வசிவகுருநாதன் கூறிய mindset ஓரளவு பொருந்துகின்றது போலத் தென்படுகின்றது. மேற்கொண்டு தகவல் கிடைத்தால் அறியத்தருகின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ--16:15, 22 சூலை 2012 (UTC)[பதிலளி]
இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.
வணக்கம் செந்தி. முடிந்தால், இலங்கையில் மருத்துவ நூல்கள்/மருத்துவத் தமிழ்/தமிழ் மருத்துவம் பற்றிய ஒரு கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. நன்றி. --Natkeeran (பேச்சு) 19:58, 26 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:37, 13 மார்ச் 2013 (UTC)
தகவல் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. மிக்க தேவையானதொரு சந்திப்பு. இலங்கையில் விக்கி பற்றிய அறிவை அனைவருக்கும் பரப்ப இது நிச்சயமாக உதவும். சில பத்திரிகை ஊடகங்களுக்கும் இது பற்றி அறியத்தந்தால் நன்று எனக் கருதுகிறேன். இலங்கையில் நான் வசிப்பதில்லையால் மேற்கொண்டு கூற முடியாமல் உள்ளது. வாழ்த்துகள்!--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 00:33, 16 மார்ச் 2013 (UTC)
எழுத்துரு பிரச்சினை தொடர்பாக பல்வேறு உலாவிகளின் திரைக்காட்சிகளை நீங்கள் இட்டிருந்தது பயனுள்ளதாக இருந்தது. ஒரு வலைவடிவமைப்பாளராக இருந்தும் இது என் மண்டையில் தோன்றாமல் போய் விட்டது :( இணைய எழுத்துரு நிறுவிய பிறகும் சில உலாவிகளில் தமிழ் தெரியவில்லை. இது ஏன் என்று ஆராய வேண்டும். இரவி (பேச்சு) 17:26, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]
செந்தி, மிக்க நன்றி. நான் பதிவு செய்யலாம் என்றே போனேன். ஆனால் "Not have free access to Cochrane reports through your local library, university, institution, organization, or country" என்று அங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பல்கலைக்கழகத்தின் வழி இலவச அணுக்கம் எனக்கு உண்டு என்பதால் பதிவு செய்யவில்லை. வேறு பல பயனர்கள் பயன்பெற இயலும். சுந்தருக்கு ஆர்வம் இருக்கும் என நினைக்கின்றேன். காப்புரிமை மீறாமல் ஏதும் நான் பகிர முடியும் என்றால் சொல்லுங்கள் கட்டாய உதவ அணியம். --செல்வா (பேச்சு) 00:04, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:05, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம், செந்தி. பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:25, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி. ஆனால், எவ்வளவு தூரம் நான் செயற்படுவேனோ தெரியவில்லை...முன்னர் போன்று இப்போது விக்கிக்கு பங்களிப்பு குறைவுதான். நேரமின்மை ஒரு காரணம். "பொறுப்பு" ஒன்றை ஏற்றுவிட்டு பொறுப்பில்லாமல் இருக்க முடியாது.. விக்கியில் இணைய முன்னரேயே தொடங்கிய எனது தனிப்பட்ட இணையம் ஒன்றும் அதனுடன் தொடர்புடைய புதிய இணையம் ஒன்றும் ஒற்றை மரமாக நின்று பராமரிக்கவேண்டி உள்ளது. எனினும் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை.
ஏற்கனவே (முதற்பக்க அறிமுகத்தில்) நான் கூறியது போன்று தமிழ் விக்கியை வளர்த்தெடுக்க நிச்சயம் உதவுவேன்.
தமிழ்விக்கியில் கொக்ரேன் அணுக்கம் கிடைத்தவுடன் மீண்டும் எழுதுவோம் என்றிருந்தேன், இதோ கிடைத்து விட்டது; இவ்வேளையில் ஒரு சந்தேகம்! நான் எனது இணையதளத்தில் (காப்புரிமை அற்ற, பொது உரிமத்தில்) எழுதுவதை இங்கு மீண்டும் பிரசுரித்தல் விக்கியின் கொள்கைக்கு ஒப்பானதா? --செந்தி--ஃ உரையாடுக ஃ--01:05, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
செந்தி, நிருவாகப் பொறுப்பு ஏற்பதன் மூலம் உங்களுக்குச் சில கூடுதல் அணுக்கங்கள் கிடைக்கும். பக்கங்களை நீக்கலாம். நீக்கிய பக்கங்களை பார்க்கலாம் / மீட்கலாம். இரு பக்கங்களை வரலாற்றோடு இணைக்கலாம். தவறான தொகுப்புகளை இலகுவாக முன்னிலைப்படுத்தலாம். விசமப் பயனர்களைத் தடுக்கலாம். பக்கங்களைக் காக்கலாம். இவையனைத்தையும் விக்கிப்பீடியாவின் கொள்கைகளையும் விக்கிச் சமூகத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும். வழமையான பங்களிப்புகள் போலவே இவற்றையும் உங்களால் இயன்ற போது செய்யலாம். கட்டாயம் இல்லை. ஒரு நிருவாகி என்ற முறையில் உங்கள் உரையாடல்களும் செயல்பாடுகளும் மற்ற பயனர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இன்னும் சில பயனர்களிடம் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளேன். எனவே, அனைவருக்கும் பதில் தர அவகாசம் தந்து வரும் திங்களன்று உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன்.
http://blog.ravidreams.net/cc-by-sa-3-0/ பக்கத்தில் உள்ளது போல் உங்கள் தளத்தில் ஒரு அறிவிப்பு இடுங்கள். உரிமம் குறித்த தகவலைத் தளத்தின் அடிப்பகுதியில் அனைத்துப் பக்கங்களிலும் தெரியுமாறு இடுங்கள். அதன் பிறகு அவற்றை விக்கிப்பீடியா நடைக்கு ஏற்ப இங்கு நீங்கள் இடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. --இரவி (பேச்சு) 04:46, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உங்களின் சிறப்பான பங்களிப்புக்களுக்கு நன்றி. 30 மேற்பட்ட சக பயனர்களால் நீங்கள் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்பட்டு அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 18:09, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவிய தமிழ் விக்கிபீடியாவின் தூண்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ--01:46, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் நண்பரே, தாங்கள் வலைவாசல்:மருத்துவம் என்பதை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். வடிவமைப்பு சிறப்பாக உள்ள அந்த வலைவாசலில் மேலும் சிறப்புக் கட்டுரைகள் மற்றும் சிறப்புப் படங்களை இணைத்தும், தலைப்புகளை முழுமை செய்தும் வழங்கிட வேண்டுகிறேன். இது நமது விக்கிப்பீடியாவில் முதல் பக்கத்தில் வலைவாசல் காட்சிபடுத்தும் பணிக்கு உதவும். அத்துடன் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை வாசிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்யவும் ஏதுவாக இருக்கும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:22, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நிச்சயமாக...வேறு பல பணிச்சுமைகளால் எனது ஒவ்வொரு வேலையும் பிற்போடப்படுகின்றது..மீண்டும் விக்கிக்காக நேரத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் இருக்கின்றேன்..விரைவில் அதனை முழுமைப்படுத்த முயற்சிக்கின்றேன். நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி..:) --செந்தி--ஃ உரையாடுக ஃ--17:00, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
கோரிக்கையை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி நண்பரே. விக்கிப்பீடியா பணிச்சுமையை குறைக்க தங்களுடைய மருத்துவ துறைசார் நண்பர்களையும் விக்கிப்பயனர் ஆக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். :-) நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:07, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இதில்தான் சிக்கலே உள்ளது. தமிழில் எழுதுவது என்றால் பலருக்குக் கசக்கின்றது; பலருக்குத் தமிழில் படிக்கவே வெறுப்பாக உள்ளது. எனினும் இதற்காக முயற்சி செய்துகொண்டுதான் உள்ளேன். ஒருநாள் "தமிழில் மருத்துவம்" முழுமை பெறும்! --செந்தி--ஃ உரையாடுக ஃ--17:12, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு எந்தன் வாழ்த்துகள் நண்பரே. {{User wikipedia/Administrator}} வார்ப்புருவை தாங்கள் விரும்பினால் பயனர் பக்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். சிறப்பாக செயல்படுகின்றவர்களுக்கு நிர்வாக அணுக்கம் கிட்டும் என்பதை பிற பயனர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:17, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
வேலைப்பளு, கண்ணில் சிறு கோளாறு காரணமாக நீண்ட நேரம் கணினியில் செய்யும் வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளேன். --⚕சி.செந்தி⚕(உரையாடுக) 02:22, 1 செப்டம்பர் 2014 (UTC)
New sign-up page for the Medical Translation Project
This is a friendly reminder that the sign-up page at the Medical Translation Project (previously Translation Task force) has been updated. This means everyone has to sign up again. Using the new page it will be easier for us to get into contact with you when there is work available. Please check out our progress pages now! There might be work there already for you.
We are also very proud to introduce new roles and guides which allows people to help who don't have medical knowledge too!
We need language knowledgeable Wikipedians (or not yet Wikipedians) who indicate on our progress tables which articles should and should not be translated!
வணக்கம் Drsrisenthil/பழைய உரையாடல்கள்/தொகுப்பு 2!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
I am sorry for the delayed response. I have done translating into Tamil. If you have time, could you please update it?. Thank you for the consideration. --☤சி.செந்தி☤(உரையாடுக)06:33, 24 மே 2016 (UTC)[பதிலளி]
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பிறகு, தங்கள் பதிவுகளைக் காண்கின்ற பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வருக! நீங்களும், தங்களைச்சார்ந்தவர்களுக்கும் நலமாக இருப்பீர்களென்றே எண்ணுகிறேன்.--த♥உழவன்(உரை) 00:37, 25 பெப்ரவரி 2017 (UTC)
நன்றி, த.உழவன். நேரமின்மையால் பதிவுகள் இடமுடியாதுள்ளது. --☤சி.செந்தி☤(உரையாடுக) 00:42, 25 பெப்ரவரி 2017 (UTC)