உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Tnse bsenthamaraikannan diet dgl/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடுகி சாய்ந்த எழுத்துக்கள் கடுகி என்ற சிறப்பு பெயர் கொண்டவை சுண்டைக்காய் ஆகும். இவற்றை மலை சுண்டை என்றும் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் மலைகளில் விளையும் செடியாகும்.இவற்றில் ஆனைச் சுண்டை என மற்றொரு பெயரும் உண்டு. இவற்றில் முட்களும் (பரவலாக ), பசுமையான காய்களும் காணப்படும் .சுண்டைக்காயின் சுவை கசப்பு தன்மை கொண்டது. இவை வெப்ப தன்மை கூடாது. இதனுடைய காய் , வேர் , வற்றல் இவை அனைத்தும் பயன்பட கூடியவை. இவை நெஞ்சில் உள்ள கோழையை நீக்கும் மருத்துவ தன்மை கொண்டவை. சுண்டைக்காய் சிறந்த கிருமி நாசினியாகவும், இது பசியை பசியை தூண்டும் சிறப்பையும் கொண்டவை. சுண்டைக்காய் வற்றலை உண்டு வந்தால் வயிறு ஊதல் . வயிற்று வலி, ஏப்பம் போன்றவற்றை போக்கும் தன்மை கொண்டவை. நெஞ்சில் தங்கிய கபம், நுண்புழுவால் உண்டான நோய்கள் , வலி நோய்கள் ஆகியவை நீங்கும்.தீக்குற்றத்தினால் உண்டான சுவையின்மை , வயிற்றுப்புழு, மூலம் ஆகியவை ஒழிந்துவிடும். சுண்டைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சுண்டைக்காய் வற்றல்குழம்பு உண்டால் சளியை முற்றிலும் அகற்றிவிடும்.சுண்டைக்காய் வற்றலைச் சமைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிட்டால் வறட்டு இருமல், சுரம், வயிற்றில் பூச்சிகள், ஆஸ்துமா ஆகியவை விலகும்.பச்சை காய்களைத் தட்டி (விதைகளை நீக்கி ) பருப்புடன் கலந்து வேகா வைத்து சாம்பராகவும் சாப்பிடலாம். சுண்டைக்காயை போதுமான அளவு நன்றாக புளித்த மோரில் போட்டு, கொஞ்சம் உப்பை கலந்து காயாவைத்து நன்கு உலர்த்தி எடுத்து கொண்டு பயன்படுத்தலாம். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வெயிலில் காயா வைத்து எடுத்த சுண்டைக்காயை தேவையான அளவுக்குப் போட்டு வறுத்து , அதை சாதத்தில் கலந்து பிசைந்து சாப்பிடலாம். சளி, இருமலுக்கு மிகவும் நல்லது. சுண்டைக்காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு லேசாக வருது உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவைகளை அளவுடன் கூட்டி சிறிது வருத்துத் துவட்டலாகச் செய்து சுற்றுடன் கலந்து உன்ன மூல வியாதி , அக்னி மந்தம், அஜீரணம் ஆகியவை தீரும்.

 குடலில் சேரும் கழிவுகளை சுண்டைக்காய் சுத்தமாக அகற்றி விடுகிறது. நீங்கள் தினந்தோறும் சுண்டைக்காயை எவ்வாறேனும் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய குடில் தூய்மை பெற்று விளங்கும். குடல் தூய்மையாக இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை, கடல் அளவுக்குப்  பெருகும் என்பதில் ஐயமில்லை.

[1]

  1. 1. தாராபுரம் சுருணி மகன் .(2014).குடலை தூய்மை யாக்கும் சுண்டைக்காய், கல்கண்டுப்ப் 12-13 2.https://ta.wikipedia.org/wiki/ சுண்டைக்காய்