பயனர்:TNSE Thiyagu Ganesh PDK/மணல்தொட்டி
Appearance
கல்லூரி சாலை (College Road) இந்தியாவின் தமிழ்நாடு மாநில தலைநகரான சென்னையின் நுங்கம்பாக்கம் என்ற இடத்தில் அமைந்துள்ள முக்கிய சாலையாகும்.இச்சாலையில் பல முக்கிய கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அமைப்பு[தொகு]
இச்சாலை கிழக்கு மேற்காக சுமார் 1.3 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. மேற்கே ஸ்டெர்லிங் சாலையின் முடிவிலிருந்து தொடங்கி கிழக்கே கிரீம்சு சாலை மற்றும் பாந்தியன் சாலை சந்திக்கும் இடத்தில் கூவம் ஆற்றங்கரையின் அருகே முடிவடைகிறது.
முக்கிய இடங்கள்[தொகு]
இச்சாலையில்
- மகளிர் கிறித்துவக் கல்லூரி
- டிபிஐ வளாகம்
- சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு
- யூனியன் பாங்க் ஆப் இந்தியா
- இந்தியன் ஓவர்சீசு வங்கி
- எச்டிஎஃப்சி வங்கி
- ஸ்டே்ட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை மண்டல தலைமையகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன