உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE SENTHILKUMARI NIL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடி[தொகு]

தேயிலை சாகுபடி நீலகிரி மாவட்டத்தில் 1859 முதல் 1869 வரை உள்ள காலங்களில் தொடங்கப்பட்டாலும், குறைந்த அளவிலேயே இத்தொழில் இருந்தது என அறிய முடிகிறது.

நீலகிரி தேயிலை தோட்டம்

"நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் பகுதியில் மேன் என்பவர் தேயிலை சாகுபடியில் கண்ட வெற்றியே இம்மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். 1859ம் ஆண்டிக்கும் 1869ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் தேயிலை தோட்டங்கள் அமைக்க பெருமளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன." என்ற செய்தியால் தேயிலை சாகுபடி குறைவாக இருந்தது என்பதை அறியலாம். 1869ம் ஆண்டு வரை மொத்தமாக 200 முதல் 300 ஏக்கர் பரப்பில் மட்டும் தேயிலை பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதகையில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் 1869ம் ஆண்டு18 சாகுபடியாளர்கள் மட்டுமே, அவர்களது உற்பத்தி பொருளான தேயிலையை மாதிரிக்காக காட்சியில் வைத்திருந்தார்கள்.

புல் வெளிகளாக இருந்த பகுதிகளெல்லாம் படிப்படியாக தேயிலை பயிரிடுவதற்காக பயன்படுத்தப்பட்டன. பெருமளவில் அனைவரும் தேயிலை சாகுபடி செய்தமையால் சாமை, ராகி, கிழங்கு வகைகளை விட பொருளாதார வகையில் அதிக பணம் ஈட்டும் தொழிலாக மாற்றம் அடைந்தது. இதனால் மலை மாவட்ட மக்கள் தவிர சமவெளிகளிலிருந்தும் தொழிலாளர்கள் நீலகிரியில் குடியேறினார்கள். தேயிலை தொழிற்சாலைகள் பெருமளவில் தொடங்கப்பட்டன. தேயிலைத்தூள் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறுகின்றனர். சாகுபடிக்கு தேவையான ஆலோசனைகளை உபாசி நிறுவனம் வழங்கி வருகின்றது.[1]

  1. ஆரி. (2013). குறிஞ்சித்தேனில் படுகர்களின் வாழ்வியல். அக்‌ஷயா. p. 126.