உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ssrivarsha

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்கை வேளாண்மை

                                                - நம்மாழ்வார்

"விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை"


"இயந்திர டிராக்டர் மிக  நல்லாத்தான் உழும்; ஆனால்இயற்கை முறையில் விவசாயம் செய்ய சாணி போடாதே’’


இவை தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்அவர்களின் சில பொன்மொழிகள் .


தமிழகத்தில் பல  லட்சக் கணக்கான மக்களின் மனதில்இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நம்மாழ்வார் அவர்கள்.

பாரம்பரிய விதைகள் மேலான காதல்

இந்திய பாரம்பரியமான அனைத்து விதை ரகங்களை மிகஅதிகம் நேசித்தவர் நம்மாழ்வார்.   இந்தியாவின் பலஇயற்கை விவசாய / விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப்புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும்பன்னாட்டு நிறுவனதின் கையில்  2003-ல் மத்திய அரசுஒப்படைத்தது.


இதனை அறிந்த நம்மாழ்வார் அவர்கள் மிக மன வேதனைஅடைந்து  இந்தியாவின் ஆகா சிறந்த பாரம்பரிய விதைகள்நம்மை விட்டு சென்று விட்டது என மனம் வருந்தி கண்ணீர்விட்டு அழுதார் .


பல தலைமுறைகளாக நாம் செய்து வரும் பாரம்பரிய உழவு/ வேளாண்மை முறையான பயிர் சுழற்சி மற்றும்  உழவு மூலம்இயல்பாகவே காற்றில் இருந்து கிடைக்கும் நைட்ரஜன்சத்து நமது மண்ணில் வளம் மற்றும்  நைட்ரஜன் சத்துஅளவை இயற்கையான முறையில் எந்த ரசாயனமும்இல்லாமல் அதிகரிக்கிறது என்று முதன்முதலாக பலருக்குஎடுத்துகாட்டி அனைவருக்கும் நிரூபித்துக்காட்டியவர்நம்மாழ்வார்.


இந்தியாவில் பசுமைப் புரட்சியின் காரணமாக மத்தியமாநில  அரசு உரங்களை பயன்படுத்த விவசாயிகளைஊக்குவித்துக் கொண்டிருந்த நேரத்தில் , நம்மாழ்வார்தமிழகத்தின் பல  கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச்சந்தித்து , இரசாயன உரப் பயன்பாட்டால் மண்ணின்காரத்தன்மை எவ்வாறு கூடும், அப்படி கூடும் பொழுது  அதுஅளவுக்கு அதிகமான தண்ணீரை எப்படி உறிஞ்சுகிறதுஎன்பதை விவசாயிகள் புரியும் படி சிறிய செயல்விளக்கம்மூலம் நிரூபித்துக்காட்டுவார் .


இன்றைக்கு இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம்பற்றிய  ( பஞ்சகாவியம் , பீஜமிர்தம் , அமிர்தகரைசல் )விழிப்புணர்வுதமிழகத்தில்  அதிக அளவு புரிதல் இருபதற்கு அதற்குநம்மாழ்வாரின் மிக முக்கிய பழ செயல்பாடுகளே காரணம்.


மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் கிடைக்கும்பயிர்களால் மண்ணுக்கு, மனிதனுக்கு அதிகமான  கேடுஏற்படும் என்ற காரணத்தை அறிந்து கொண்டு நம்மாழ்வார்அதனை எதிர்த்தார். நமது பாரம்பரிய விதைகளை கொண்டுஉருவாக்கிய ஒட்டுரகங்களை ஆதரித்தார்.


பி.டி ( Genetically Modified) கத்திரியை  நம்மாழ்வாரின்நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன்ஆகியோர் அன்றைய நமது மாநில முதல்வராக இருந்தகருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளைஎடுத்துச் சொல்லி, தமிழகத்தில் BT கத்தரிக்கு  தடைஉத்தரவும் பெற்றனர்.


“கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காகன தோஅல்லது விவசாயிகளுக்கு பயன் தர கூடியதோஅல்ல.இவைகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள்ரசாயன உரங்களை விற்பனை இந்தியாவில் விற்பனைசெய்வதற்கான உணவு அரசியலே,இதனை அரசு  பசுமைப்புரட்சி பெயரில் கலப்பின ஊக்குவிப்பு” என்றார் .


ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின்பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம்இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தத காலத்தில் இத்தாலி நாட்டில் நடந்த அவசர  ( Fast Food ) உணவுக்குஎதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பியநம்மாழ்வார் அவர்களால்  இங்கு ஆரம்பித்து வைக்க பட்டதுதான் இன்றைய  ‘slow food movement’ இன்றைக்கு பலஇடங்களில்  கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியமானசிறுதானிய சாமையும் கம்பு உணவுகள் போட்டிபோடமுடிகிறது .


மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் சோலைக்காடுகள்அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். அதற்கானகாரணமாக அவர் கூறியவை சோலைக்காடுகள் இல்லைஎனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது, மனிதனுக்குச் சோறுஇல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில்வலியுறுத்திவந்தார்.  


வாழ்நாளின் கடைசி வரை இளைஞர்களை அதிகம்நம்பினார் .கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம்இயற்கை வேளாண் ஆராய்ச்சி   பண்ணையில் சுமார் 5,000 அதிகமான இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியைநேரடியாக அவரிடம் முடித்திருக்கிறார்கள்.அந்த பணிஇன்றும் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது .


காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும்பேரழிவுத் திட்டத்துக்கு எதிராக கிராமம் கிராமமாகப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போதே இயற்கை எய்திநார்.


உலகம் முழுக்க மனித இனத்தின் இயற்கைக்கு எதிரானசெயல்பாடுகள் காரணமாக புவியின் வெப்பம்அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உலகம்முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு விளைவுகள்பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.


இதன் பாதிப்புகள் மனிதனை மட்டுமின்றி இந்த உலகில்உள்ள எல்லா உயிர்களையும் பாதிப்படையச் செய்கிறது. மேலும், புவி வெப்பமடைவதால் பகலை காட்டிலும் இரவில்வெப்பம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவை அதிகமா தாக்கி வரும் புயல்கள், பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைபுரட்டிப்போட்ட காட்டுத்தீ, ஆப்பிரிக்காவை அச்சுறுத்தியவெட்டுக்கிளி தாக்குதல், தற்போது உலகமே எதிர்கொண்டுவரும் கொரோனா தொற்று போன்றவையெல்லாம்மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே இருந்ததொடர்புகள் அறுந்து போனதன் விளைவு என்கிறார்கள்விஞ்ஞானிகள்.


அதிகரித்து வரும் பருவநிலை காரணமாக நன்னீர்பற்றாக்குறை, உணவு உற்பத்தி தட்டுப்பாடு, வெள்ளம், புயல்கள் மற்றும் வெப்ப அலைகளின் காரணமாக ஏற்படும்உயிரிழப்புகள் அதிகரிப்பது போன்றவை இருக்கக் கூடும்என்கிறார்கள்.


செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) போன்றவற்றால் இயற்கை முறையில்விவசாயம் செய்யலாம்.


நீரை வீணாக  பயன்படுத்தாமல் பாலித்தீன் மற்றும்பிளாஸ்டிக்கை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டும்.


மரங்களை வெட்டுதலை தடுத்து நிறுத்துவதோடு நம்மால்இயன்றளவு மரங்களை வளர்த்து இப்பூமியைபசுமையானதாக மாற்றவேண்டும்.


இயற்கையைப் பாதுகாப்பது போதுமான அளவுசெய்யப்படாவிட்டால், இந்த பூமியிலிருந்து உயிர்கள்அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை. நினைவில்கொள்ளுங்கள், நாம் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமி இருக்கிறது.


மனிதனுக்கு மட்டும் அல்ல..இயற்கைக்கும் சீற்றம் உண்டு. நாம் இயற்கையை கட்டுப்படுத்த நினைத்தால், அது நம்மைஅழித்து பாடங்கள் கற்பிக்கும்..!


இயற்கையின் கோபம் அறியாமல் மனிதனே மனிதனுக்குஎமனாக மாறுகிறான்..அவனுக்கு அவனே சூனியம்வைத்துக்கொள்கிறான்..! இயற்கையை காப்போம்..! மரங்களை வளர்ப்போம்..! கரிம வாயுக்கள் பயன்பாட்டைகுறைப்போம்..!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ssrivarsha&oldid=3693972" இலிருந்து மீள்விக்கப்பட்டது