உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Shrikarsan/திட்டங்கள்/SEPTEMPLATE

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோ.ஸ்ரீகர்சன்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
பதிவேற்றிய படிமங்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்
பதிவேற்றிய படிமங்கள் உருவாக்கிய வார்ப்புருக்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்


விக்கிப்பீடியாவில் உள்ள வார்ப்புருக்களில் கணப்படும் பிழைகளைக் களைந்து அவற்றைச் சீராக்கவும், பயன்மிக்க புதிய வார்ப்புருக்களை உருவாக்கவும், சிக்கல் மிக்க வார்ப்புருக்களை Module மூலம் இலகுபடுத்தவும் ஸ்ரீகர்சனால் உருவாக்கப்பட்ட திட்டமேSEPTEMPLATE ஆகும். இத் திட்டம் செப்டெம்பர் (September) மாதம் ஆரம்பிக்கப்பட்டமையாலும் வார்ப்புரு (Template) தொடர்பானது என்பதாலும் இரண்டையும் இணைத்து SEPTEMPLATE எனப் பெயரிடப்பட்டது.

நிறைவுற்றவை

[தொகு]
இல. வார்ப்புரு / Module நிறைவுற்ற பணி
1 {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} முதற்பக்கக் கட்டுரையை தன்னியக்கமாக இற்றைப்படுத்தும் முகமாக உயர் சிக்கலான நுட்பம் நிறைந்த இவ்வார முதற்பக்கக் கட்டுரை வார்ப்புரு உருவாக்கப்பட்டது.
2 {{Convert}} அதிகம் பயன்படுத்தப்படும் சிக்கல் மிகுந்த வார்ப்புருவாகிய {{Convert}} வார்ப்புரு Module:Convert , Module:Convert/text , Module:Convert/data , Module:Convert/extra ஆகிய Module களின் மூலம் மாற்றீடு செய்யப்பட்டு தமிழில் இயங்கக்கூடிய வகையில் செயலாக்கம் செய்யப்பட்டது. இவ் வார்ப்புரு முன்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் சரியாகத் தொழிற்படாது இருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 {{Userbox}} அதிகம் பயன்படுத்தப்படுகின்ற இவ்வார்ப்புரு Module:Userbox மூலம் மாற்றீடு செய்யப்பட்டு தமிழில் இயங்கக்கூடிய வகையில் செயலாக்கம் செய்யப்பட்டது.
4 {{Infobox football club}} மணியன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஆங்கிலத்திலும் தமிழிலும் அளபுருக்களை (parameters) உள்வாங்கக்கூடியதாக இவ்வார்ப்புரு மாற்றியமைக்கப்பட்டது.
5 {{Coord}} அதிகம் பயன்படுத்தப்படும் சிக்கல் மிகுந்த வார்ப்புருவாகிய {{Coord}} வார்ப்புரு Module:Coordinates என்ற Module மூலம் மாற்றீடு செய்யப்பட்டு தமிழில் இயங்கக்கூடிய வகையில் செயலாக்கம் செய்யப்பட்டது.
6 {{Infobox}} அதிகம் பயன்படுத்தப்படும் (11,111 கட்டுரைகளுக்கு மேல்) சிக்கல் மிகுந்த வார்ப்புருவாகிய {{Infobox}} வார்ப்புரு Module:Infobox என்ற Module மூலம் மாற்றீடு செய்யப்பட்டு தமிழில் இயங்கக்கூடிய வகையில் செயலாக்கம் செய்யப்பட்டது.
7 Module:Chart வண்ணமயமான பட்டியில் விளக்கப்படம் (bar chart) மற்றும் வட்ட விளக்கப்படத்தினை (pie chart) உள்ளிடக்கூடிய Module:Chart என்ற module உருவாக்கப்பட்டது. மேலதிக தகவல்களை Module:Chart பக்கத்தில் காணலாம்.
8 {{தகவல்பெட்டி புத்தகம்}} பூங்கோதை அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஆங்கில விக்கியில் உள்ள வகையில் இவ்வார்ப்புரு மாற்றியமைக்கப்பட்டது.

பயனர் வேண்டுகோள்கள்

[தொகு]

ஏதாவது வார்ப்புருக்களில் மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீங்கள் நினைத்தால் இங்கு தெரிவிக்கவும். நேரமிருக்கும்போது பிழைகளைக் களைய முயற்சிப்பேன்.

மிக்கப் பயனுள்ள பணி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ! இதற்கு ஏதேனும் செய்யவியலுமா? --மணியன் (பேச்சு) 16:40, 5 அக்டோபர் 2014 (UTC)
Y ஆயிற்று மணியன் அவர்களே ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்வாங்கக்கூடியதாக வார்ப்புருவை மாற்றியமைத்துள்ளேன். சோதனை செய்வதற்காக லிவர்பூல் கால்பந்துக் கழகம் கட்டுரையில் தகவற்சட்டத்தை ஆங்கிலத்தில் இட்டேன். சரியாக வேலை செய்கின்றது. மேலதிக மொழிபெயர்ப்பையும் செய்துள்ளேன். உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:28, 6 அக்டோபர் 2014 (UTC)
மிக்க நன்றி ! --மணியன் (பேச்சு) 13:21, 6 அக்டோபர் 2014 (UTC)


வார்ப்புரு:Convert

[தொகு]

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்

இது போன்ற கடின்மான பணியினை ஆற்ற முன்வந்தமைக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் :).

வார்ப்புரு:Convert இது ஆங்கில விக்கியின் பழைய பதிப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. பல இடங்களில் முறிகின்றது. ஆங்கில விக்கியின் தற்போதைய பதிப்பிலிருந்து உருவாக்கியிருந்தால், இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் அனைத்திலும் சோதிக்க வேண்டும். நான் செய்ய வேண்டிய பட்டியலில் பல ஆண்டுகளாய் கிடப்பில் கிடந்தது. ஒரு சில இடங்களில் மீண்டும் முறிவது போல இருக்கிறது. சோதித்து விட்டு வழுக்கள் இருந்தால் பட்டியல் பதிகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:43, 11 அக்டோபர் 2014 (UTC)

சோடாபாட்டில் அண்ணா! Convert வார்ப்புருதான் இத்திட்டத்தை நான் தொடங்க உந்துதலாக இருந்தது. முன்னர் இவ்வார்ப்புருவிற்கு 4000 இற்கும் மேற்பட்ட உப வார்ப்புருக்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்போது அது Module மூலம் இயஙக்கூடிய வகையில் சரிசெய்துள்ளேன். இவ்வார்ப்புருவிலிருந்த அனைத்து வழுக்களையும் ஏறக்குறைய சரிசெய்துவிட்டேன். முக்கியமான அலகுகளைத் (units) தமிழில் மொழிபெயர்த்துவிட்டேன். மொழிபெயர்க்கப்படாத அலகுகள் வார்ப்புருவில் ஆங்கிலத்தில் வெளியீடாகக் (output) காட்சியளிக்கும். ஆனால் இவ்வலகுகளின் பன்மைவடிவத்தில் கள் என்ற பின்னொட்டு (suffix) இணைந்து வரும். உதாரணத்திற்கு Gram மொழிபெயர்க்கப்படாதிருந்தால் பன்மை வடிவத்தில் 2 Gramகள் எனக் காட்சியளிக்கும். பெரும்பாலும் பயன்படுத்தப்படும் அனைத்து அலகுகளையும் மொழிபெயர்த்து தமிழுக்கு ஏற்றவகையில் சரிசெய்துள்ளேன். நேரமிருக்கும் போது அனைத்தையும் மொழிபெயர்க்கின்றேன். பெரும்பாலும் பயன்படுத்தப்படும் அலகு ஏதாவது வார்ப்புருவில் ஆங்கிலத்தில் வெளியீட்டைத் (output) தந்தால் அறியத்தாருங்கள். உங்கள் வாழ்த்திற்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:57, 12 அக்டோபர் 2014 (UTC)