பயனர்:Rameshta/யானைக் காலால் இடறி மரணதண்டனை

யானைக் காலால் இடறி மரணதண்டனை என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த பொதுவான மரண தண்டனை முறை ஆகும். பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றும் சமயத்தில் உடலை நசுக்குவதற்கு, உடலைத் துண்டாக்குவதற்கு அல்லது சிறை தண்டனைக் கைதிகளைத் துன்புறுத்துவதற்காக ஆசிய யானைகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காகப் பயன்படுத்தப்படும் யானைகள் நன்கு பயிற்சி பெற்றதாகவும் திறமை வாய்ந்ததாகவும் இருந்தன. அவை மரணதண்டனைக் கைதிகளை உடனடியாகக் கொல்லும் திறனையும் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு அவர்களை துன்புறுத்தும் திறனையும் படைத்தவையாக இருந்தன. ஆட்சியாளர்களின் வரையறையற்ற ஆற்றலைக் குறிப்பிடுவதற்காகவும், காட்டு விலங்குகளை அடக்குவதற்காகவும் அரச குடும்பத்தினர் யானைகளைப் பயன்படுத்தினர்.
திகிலான பயணத்தில் ஆர்வம் கொண்ட ஐரோப்பிய பயணிகள் யானைகள் காலால் இடறி மரணதண்டனை வழங்கப்படுவதைப் பார்ப்பதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர். மேலும் அக்கால பத்திரிகைகளிலும் ஆசிய வாழ்க்கைக் குறித்த பதிவுகள் பலவற்றிலும் இது குறித்த பதிவுகளை வெளியிட்டனர். இறுதியாக, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியப் பேரரசுகள் இந்தப் பகுதிகளில் குடியேற்றத்தை மேற்கொண்ட போது இந்தப் பழக்கம் ஒடுக்கப்பட்டது. இத்தகைய தண்டனையானது முதலில் ஆசியாவில் மட்டும் இருந்தது எனினும் ரோம் மற்றும் கார்த்தாக் போன்ற மேற்கத்திய ஆட்சியாளர்களால் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டது. அவர்கள் குறிப்பாக கலகம் செய்கிற போர் வீரர்களுக்கு எதிராக இம்முறையைப் பயன்படுத்தினர்.
பண்பாட்டு அம்சங்கள்
[தொகு]ரோமானியப் பேரரசில் மரணதண்டனைக்காகப் பயன்படுத்தப்பட்ட சிங்கங்கள் மற்றும் கரடிகள் போன்ற மற்ற காட்டு விலங்குகளைக் காட்டிலும் யானைகள் அறிவுக்கூர்மை கொண்டவையாகவும், எளிதாக பழக்கப்படுத்தக்கூடிய பண்பையும் பல திறமைகளைக் கொண்டவையாகவும் இருந்ததால் அவை முக்கியத்துவம் பெற்றன. குதிரைகளைக் காட்டிலும் யானைகள் எளிதில் கட்டுப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. ஒரு குதிரைக்கு போரிடுவதற்கான பயிற்சியளிக்கப்படும் போதும் அது எதிரி வீரர்களை விருப்பத்துடன் நசுக்கித் தாக்காது. மாறாக அது அவர்களைத் தாவிச் செல்லும். யானைகள் எதிரிகளை நசுக்கித் தாக்கும். இதனால் ஹனிபால் போன்ற படைத்தளபதிகளின் காலத்தில் போர் யானைகள் பிரபலமடைந்தன. சிறைக் கைதிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு யானைகளுக்கு பலவிதங்களில் பயிற்சியளிக்கப்படலாம். கைதியை குறிப்பிட்ட காலத்திற்கு துன்புறுத்தி மெதுவாக சாகும்படி செய்வதற்கு அல்லது ஒருவரின் தலை மீது ஏறி அவரை உடனடியாக கொல்லும் விதத்தில் ஒரு யானைக்கு பயிற்சியளிக்கப்படலாம்.
வரலலற்றில், பாகன் அல்லது மாவுத்தனின் நிலையான கட்டுப்பாட்டின் கீழ் யானைகள் இருந்தன. இதனால் ஆட்சியாளர்களால் இறுதி நிமிடத்தில் தற்காலிகமாக தண்டனையை நிறுத்திவைக்கவும் இரக்கமுடைய பண்புகளை வெளிப்படுத்தவும் முடிந்தது.[1] பல்வேறு ஆசியப் பேரரசுகளில் இது போல கடைசி நேரத்தில் இரக்கப்பட்டு விடுதலை செய்த நிகழ்ச்சிகளின் பதிவுகள் இருக்கின்றன. சியாம் அரசர்கள் அவர்களது யானைகளுக்கு தண்டனை வழங்கும் நபர்களை "மெதுவாக தரையில் உருட்டும் படி பயிற்சியளித்திருந்தனர். இதனால் அந்த நபருக்கு மோசமான காயம் ஏற்படாதிருக்கும்". முகலாயப் பேரரசர் அக்பர், "'கலகக் காரர்களை' திருத்தும் நோக்குடன் பயமுறுத்தி தண்டிப்பதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்தினார். அதாவது விடுதலை செய்வதற்கு முன்பு கைதிகளை இவ்வாறு பயமுறுத்தி பின் அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தார்" என கூறப்படுகிறது.[1] தண்டனைக் கைதியை மன்னித்து விடுதலை செய்வதற்கு முன்பு ஐந்து நாட்கள் யானைகள் மீது தூக்கி எறிந்து இதுபோன்ற தண்டனையை அக்பர் நிறைவேற்றியதற்கான பதிவுகள் இருக்கின்றன.[2] சில நேரங்களில் யானைகள் கடுமையான சோதனை வகை தண்டனைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. அதாவது இந்த முறையில் தண்டனை பெற்ற குற்றவாளி அந்த யானையை சமாளித்து வென்றுவிட்டால் அவர் தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்படுவார்.[1]
இந்த முறையின் மூலம் அரசர்களின் பொதுவான அதிகாரத்திற்கும் அப்பால், வாழ்வோ மரணத்தையோ வழங்குவதற்கு யானைகள் பயன்படுத்தப்பட்டன. யானைகள் பலகாலங்களாக அரசர்களுக்குரிய பெருமையைப் பறைசாற்றும் சின்னங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன (தற்போதும் கூட தாய்லாந்து போன்ற சில இடங்களில் வெள்ளை யானைகள் பெருமதிப்பு கொண்டவையாக இருக்கின்றன). ஆட்சியாளர்கள் மிகவும் சக்தி மிக்க ஒரு உயிரினத்தை அவர்களது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்து தலைமை தாங்கி செயல்படும் திறம் படைத்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு பறைசாற்ற இதனைப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வாறு ஆட்சியாளர்கள் காட்டு விலங்குகளின் மீது அறநெறி சார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த ஆதிக்கத்தை செலுத்தி வந்ததாகக் கருதப்படும்படி காண்பிக்கப்பட்டது, இது மக்களிடையே அவர்களுக்கு இருந்த பயபக்தியையும் மரியாதையையும் அதிகரித்தது.[1]
பயன்படுத்தப்பட்ட பகுதிகள்
[தொகு]உலகின் பல பகுதிகளில், மேற்கத்திய மற்றும் ஆசியப் பேரரசர்களிடையே யானையைப் பயன்படுத்தி நசுக்கும் பழக்கம் காணப்பட்டது. பண்டைய காலத்திற்கு முன்பிருந்தே இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டதற்கான பழங்காலப் பதிவுகள் இருக்கின்றன. இந்நடைமுறை அக்காலம் தொட்டு நன்கு பயன்படுத்தப்பட்டு 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.
ஆசிய யானைகளைக் காட்டிலும் ஆப்பிரிக்க யானைகள் குறிப்பிடத்தக்களவில் பெரியவையாக இருந்த போதும், ஆப்பிரிக்க ஆட்சியாளர்கள் போர் அல்லது சடங்குகளில் யானைகளை அதிகளவில் பயன்படுத்தவில்லை. ஆசிய யானைகளைப் போல ஆப்பிரிக்க யானைகளை பழக்கப்படுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சில பண்டைய ஆட்சியாளர்கள் யானைகளைப் பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் தற்போது அழிந்துவிட்ட சிற்றினமான வட ஆப்பிரிக்க லாக்சோடாண்ட்டா (ஆஃப்ரிக்கானா) பாராவோயன்சிஸ் (போர் யானைகள் ஒரு மீள்பார்வை என்ற கட்டுரையைப் பார்க்கவும்) வகையினைப் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பயன்படுத்தப்படும் யானைகள், உலகில் ஆசிய யானைகள் வாழ்ந்துவரும் (அல்லது வாழ்ந்து வந்த) பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் இருந்தன.
ஆசிய அரசுகள்
[தொகு]மேற்காசியா
[தொகு]இடைக்காலத்தில் பைசாண்டியர்கள், சாசனித்துக்கள், செல்ஜக் மற்றும் திமுரிட் பேரரசுகள் உள்ளிட்ட பல்வேறு மேற்காசியப் பேரரசுகளில் யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்கும் பழக்கம் நடைமுறையில் இருந்தது.[1] தனது அந்தப்புரத்தில் 3,000 மனைவிகள் மற்றும் 12,000 பெண் அடிமைகளைக் கொண்டிருந்த சாசனித்த அரசன் கோஸ்ராவ் II (Khosrau II), கிறிஸ்துவ அரேபியரான நா'ஆமனின் (Na'aman) மகள் ஹாடிகாவை (Hadiqah) மனைவியாக அந்தப்புரத்திற்கு அனுப்ப ஆணையிட்ட போது, ஒரு ஜோரோஸ்ட்ரியனின் அந்தப்புரத்திற்கு தன் மகளை அனுப்ப நா'ஆமன் மறுத்ததால் யானையை மிதிக்க விட்டு அவர் கொல்லப்பட்டார்.
இந்த நடைமுறையானது முஸ்லீம் மன்னர்கள் ஆட்சி செய்த மத்திய கிழக்கு நாடுகளிலும் இருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டு யூதப் பயணியான ராப்பி பெடாச்சியா ஆஃப் ராட்டிஸ்போன் (Rabbi Petachiah of Ratisbon), செல்ஜக்கியர்காள் ஆண்ட வடக்கு மெசபட்டோமியாவில் (தற்போதைய ஈராக்) தங்கியிருந்த போது இவ்வாறு மரணதண்டனை விதிப்பதைக் குறித்து கூறியதாவது:[3]
“ | At Nineveh there was an elephant. Its head is not protruding. It is big, eats about two wagon loads of straw at once; its mouth is in its breast, and when it wants to eat it protrudes its lip about two cubits, takes up the straw with it, and puts it in its mouth. When the sultan condemns anyone to death, they say to the elephant, "this person is guilty." It then seizes him with its lip, casts him aloft and slays him. | ” |
தெற்காசியா
[தொகு]இலங்கை
[தொகு]
இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த முறையில் மரணதண்டனை வழங்குவதற்காக யானைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஆங்கிலேய மாலுமியான ராபர்ட் நாக்ஸ் (Robert Knox), இலங்கையில் சிறைப்பட்டிருந்த போது அவர் பார்த்த, யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்கும் பழக்கம் குறித்து 1681 ஆம் ஆண்டில் விவரித்து எழுதியிருக்கிறார். அவர் பார்த்த யானைகளின் தந்தங்களில் "மூன்று முனைகளைக் கொண்ட கொக்கிகளுடன் கூடிய கூரிய இரும்பானது" இணைக்கப்பட்டிருந்ததாக நாக்ஸ் கூறியிருந்தார். யானை அதன் தந்தங்களைப் பயன்படுத்தி தண்டனை பெறும் நபரின் உடலைக் குத்தி கொன்ற பிறகு "அந்த உடலின் ஒவ்வொரு உறுப்பாக தூக்கி எறிகிறது".[4]
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான ஜேம்ஸ் எமர்சன் டெண்ணன்ட் (James Emerson Tennent), "யானையானது தனது தந்தங்களைப் பயன்படுத்தாது. ஆனால் தரையில் கிடத்தப்பட்டிருக்கும் மரணதண்டனைக் கைதியைக் கால்களால் மிதிக்கும். பின்னர் அதன் துதிக்கையின் திடீர் இயக்கத்தின் மூலமாக உடலின் உறுப்புக்களை பிய்த்து எடுக்கும் என இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்படும் போது அதை நேரில் பார்த்த இலங்கைத் தலைவர் நம்மிடம் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டார்.[5] நாக்சின் புத்தகத்தில் இந்த முறையில் மரணதண்டனை வழங்குவதை துல்லியமாக விளக்கும் "யானைக் காலால் இடறி மரணதண்டனை" (மேலே காண்க) என்ற புகழ்பெற்ற ஓவியம் இடம் பெற்றிருக்கிறது.
1850 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு குறிப்பேட்டில், பிரிட்டிஷ் தூதராக இருந்த சர் ஹென்றி சார்லஸ் சர் (Henry Charles Sirr), கண்டியின் கடைசி அரசனான ஸ்ரீ விக்ரம ராஜசின்ஹா குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவதற்கு யானைகளைப் பயன்படுத்தியதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். 1815 ஆம் ஆண்டு கண்டிப் பேரரசானது பிரிட்டிஷாரால் கவிழ்க்கப்பட்ட பிறகு யானைகளைப் பயன்படுத்தி உடலை நசுக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் மன்னர் பயன்படுத்திய யானை தொடர்ந்து இருந்து வந்தது, மேலும் அது தன் பழைய பழக்கங்களை நினைவு வைத்திருந்ததாகத் தெரிந்தது. ஹென்றி அதுகுறித்து கூறியதாவது:[6]
“ | During the native dynasty it was the practice to train elephants to put criminals to death by trampling upon them, the creatures being taught to prolong the agony of the wretched sufferers by crushing the limbs, avoiding the vital parts. With the last tyrant king of Candy, this was a favourite mode of execution and as one of the elephant executioners was at the former capital during our sojourn there we were particularly anxious to test the creature's sagacity and memory. The animal was mottled and of enormous size, and was quietly standing there with his keeper seated upon his neck; the noble who accompanied us desired the man to dismount and stand on one side. The chief then gave the word of command, ordering the creature to 'slay the wretch!' The elephant raised his trunk, and twined it, as if around a human being; the creature then made motions as if he were depositing the man on the earth before him, then slowly raised his back-foot, placing it alternately upon the spots where the limbs of the sufferer would have been. This he continued to do for some minutes; then, as if satisfied that the bones must be crushed, the elephant raised his trunk high upon his head and stood motionless; the chief then ordered him to 'complete his work,' and the creature immediately placed one foot, as if upon the man's abdomen, and the other upon his head, apparently using his entire strength to crush and terminate the wretch's misery. |
” |
இந்தியா
[தொகு]இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக மரணதண்டனை வழங்க யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்து மற்றும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் வரி ஏய்ப்பு செய்பவர்கள், போராளிகள் மற்றும் எதிரிப்படை போர் வீரர்கள் ஆகியோரை "யானையின் காலடியில் இட்டு" மரணதண்டனை வழங்கினர்.[1] கிமு 200 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட மனு தர்மம் அல்லது மனு நீதி சாஸ்திரத்தில், எந்தெந்த குற்றங்களுக்கு யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என விவரிக்கப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு உடைமை திருடப்பட்டு, "அது தொடர்புடையவராக அரசருக்கு யாரைப் பற்றியேனும் தெரியவந்தால் அவருக்கு யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்."[7] எடுத்துக்காட்டாக 1305 ஆம் ஆண்டில் டெல்லியின் சுல்தான், மங்கோலிய சிறைவாசிகளை பொதுமக்கள் மத்தியில் யானையை வைத்து அவர்கள் மீது ஏற்றி மரணதண்டனையை நிறைவேற்றினார்.[8]

முகலாயர்கள் காலத்தில், "குற்றவாளிகளை யானைக்கு அடியில் போட்டு மிதிக்கச் செய்து கொல்வது பொதுவான மரணதண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது."[9] படைத் தலைவர் அலெக்ஸாண்டர் ஹேமில்டன் (Alexander Hamilton) 1727 ஆம் ஆண்டு எழுதிய ஒரு குறிப்பில், முகலாய மன்னர் ஷாஜகான் அவரது எதிரிப் படைத் தலைவனை எப்படி "யானைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்குவதற்கு ஆணையிட்டார் என்பதை விவரித்திருந்தார். அது மிகவும் வெட்கக்கேடான கொடூரமான மரணமாகக் கருதப்பட்டதாகவும் எழுதியிருக்கிறார்.[10] முகலாயப் பேரரசர் உமாயூன், அவரது ஆட்சியைப் பற்றி ஓர் இமாம் விமர்சித்ததாக தவறாகக் கருதி அவருக்கு யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்க ஆணையிட்டார்.[11] சில அரசர்கள் இந்த வகை மரணதண்டனையை அவர்களது பொழுதுபோக்குக்காகவும் நிறைவேற்றி வந்தனர். மற்றொரு முகலாயப் பேரரசரான ஜஹாங்கீர் அவரது கேளிக்கைக்காக பெருந்திரளான குற்றவாளிகளுக்கு இத்தகைய மரணதண்டனை வழங்கி ஆணையிட்டார். இது போன்ற மரணதண்டனைகளைப் பார்த்தவரான பிரெஞ்சு பயணி ஃபிராங்கோயிஸ் பெர்னியர் (François Bernier), இது போன்ற கொடூரமான தண்டனையை வழங்கி அரசர் மகிழ்வதைக் கண்டு அவர் அடைந்த பீதியினைப் பதிவு செய்திருக்கிறார்.[2] முகலாயர்கள் யானைகளை வைத்து தலையை நசுக்கி மரணதண்டனை வழங்கும் முறையை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், டெல்லியில் முகலாய சுல்தான் ஆட்சிப் பகுதியில் யானைகளுக்கு "அவற்றின் தந்தங்களில் இணைக்கப்பட்ட கூரிய தகடுகளைக் கொண்டு" குற்றவாளிகளை துண்டு துண்டாக்குவதற்கும் பயிற்சியளித்தனர்.[1]
பிற இந்திய ஆட்சியாளர்களும் யானைக் காலால் இடறி மரணதண்டனை விதிப்பதை மேற்கொண்டனர். பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மராத்திய சத்ரபதி சம்பாஜி, மராத்திய அதிகாரி அனாஜி டட்டோ (Anaji Datto) உள்ளிட்ட பல சதிகாரர்களுக்கு இவ்வகை மரணதண்டனை விதித்து ஆணையிட்டார்.[12] மற்றொரு மராத்தியத் தலைவரான சாந்தாஜி, இராணுவ வீரர்களின் அத்துமீறலுக்காக இந்த தண்டனையை விதித்தார். அப்போதைய வரலாற்றாசிரியர் காஃபி கான் (Khafi Khan), "மிகவும் சிறிய குற்றம் செய்ததற்கெல்லாம் சாந்தாஜி ஒருவரை யானையின் காலடியில் தூக்கி வீசிக் கொல்வார்" என்று தெரிவித்தார்.[13]
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால எழுத்தாளர் ராபர்ட் கெர் (Robert Kerr), கோவாவை ஆண்ட அரசர் குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்க, எப்படி குறிப்பிட்ட யானைகளை வைத்திருந்தார் என்பதை விளக்குகிறார். "மரண தண்டனை நிறைவேற்ற ஒரு குற்றவாளியை யானையின் முன் கொண்டு வந்து நிறுத்திய பின், அதன் பாதுகாவலர் குற்றவாளியை உடனடியாக அழித்துவிட விரும்பினால், அது உடனடியாக அவனது தலையை நசுக்கிக் கொன்றுவிடும். ஆனால் அவர் அவனைத் துன்புறுத்த விரும்பினால், குற்றவாளிகள் தண்டனைக்குரிய சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கும் போது அது குற்றவாளியின் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக பிய்த்து எறியும்" என்று குறிப்பிட்டார்.[14] இயற்கை ஆர்வலர் ஜியார்ஜஸ்-லூயிஸ் லெக்லெர்க், காம்டே டெ பஃப்போன் (Georges-Louis Leclerc, Comte de Buffon) இந்த நோக்கம் சார்ந்த இணங்கும் தன்மை யானைகளுக்கு இருப்பதை வைத்து, அவை எளிமையான, இயல்பான உள்ளுணர்வு மட்டும் கொண்ட விலங்காக இல்லாமல் மனிதர்களைப் போன்று பகுத்தறியும் திறன் கொண்டதாக இருந்தது என்று அவர் கருதுகிறார்.[15]
இது போன்ற மரணதண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டன. அது அவர்களுக்கு அத்துமீறி நடத்தல் கூடாது என்று உணர்வதற்கான ஒரு எச்சரிக்கை விடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டன. இதற்காகப் பயன்படுத்தப்படும் யானைகள் பெரும்பாலும் பெரியதாக இருந்தன. அவற்றின் எடை பெரும்பாலும் ஒன்பது டன்களுக்கும் அதிகமாக இருந்தது. இந்த வகை மரணதண்டனைகள் மிகவும் கோரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிகழ்த்தப்பட்டன, கிடைத்துள்ள பதிவுகளைப் பார்க்கையில், பெரும்பாலும் அவை அப்படித்தான் இருந்துள்ளன. சில நேரங்களில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப் பயன்படுத்தப்படும் அதே யானையை வைத்து பொதுமக்கள் மத்தியில் துன்புறுத்தவும் செய்யப்பட்டனர். 1814 ஆம் ஆண்டு பரோடாவில் நிகழ்ந்ததாக இது போன்றதொரு துன்புறுத்தல் மற்றும் மரணதண்டனை குறித்த பெர்சி குட்டிக்கதை ஒன்றும் இருக்கிறது. அது பின்வருமாறு:
“ | The man was a slave, and two days before had murdered his master, brother to a native chieftain, called Ameer Sahib. About eleven o'clock the elephant was brought out, with only the driver on his back, surrounded by natives with bamboos in their hands. The criminal was placed three yards behind on the ground, his legs tied by three ropes, which were fastened to a ring on the right hind leg of the animal. At every step the elephant took, it jerked him forward, and every eight or ten steps must have dislocated another limb, for they were loose and broken when the elephant had proceeded five hundred yards. The man, though covered in mud, showed every sign of life, and seemed to be in the most excruciating torments. After having been tortured in this manner for about an hour, he was taken to the outside of the town, when the elephant, which is instructed for such purposes, was backed, and put his foot on the head of the criminal. | ” |
மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு யானைகளைப் பயன்படுத்தும் பழக்கம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதி காலம் வரையிலும் தொடர்ந்தது. 1868 ஆம் ஆண்டு மத்திய இந்தியாவின் மீது நிகழ்ந்த படையெடுப்பு சமயத்தில், லூயிஸ் ரூஸ்லட் (Louis Rousselet) ஒரு குற்றவாளிக்கு யானைக் காலால் இடறி மரணதண்டனை விதித்தது குறித்து விவரித்திருக்கிறார். தண்டனை பெற வேண்டிய நபரை பீடத்தின் மீது தலையை வைக்கக் கட்டாயப்படுத்தும் காட்சியும் பின்னர் யானை தனது காலினால் அந்த நபரின் தலையை நசுக்கும் காட்சியும் அடங்கிய மாதிரிச்சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. மரஞ்செதுக்கு ஓவியமாக உருவாக்கப்பட்டிருந்த அந்த மாதிரிச்சித்திரமானது பயணம் மற்றும் சாகசச் செயல்கள் பற்றிய பிரபலாமான பிரெஞ்சு இதழான லெ டூர் டு மாண்டேவில் (Le Tour du Monde) வெளிவந்தது. அத்துடன் ஹார்பர்'ஸ் வீக்லி (Harper's Weekly) போன்ற வெளிநாட்டு இதழ்களிலும் வெளிவந்தது.[17]
இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் வளர்ச்சியால் யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்கும் பழக்கம் குறைந்து இறுதியில் முடிவுக்கு வந்தது. காஷ்மீரில், ஐரோப்பியர்களின் வருகையில் இருந்து, "பல பழைய வழக்கங்கள் மறைந்தன. அதில் யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்கும் பயங்கரமான பழக்கமும் ஒன்று. இந்தப் பழக்கம் அந்தப் பகுதியில் 'கங்கா ராவ்' (Gunga Rao) என்ற பாரம்பரியப் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது" என எலனோர் மாட்டோக் (Eleanor Maddock) என்பவர் 1914 ஆம் ஆண்டில் குறிப்பிட்டிருக்கிறார்.[18]
தென்கிழக்கு ஆசியா
[தொகு]தென்கிழக்கு ஆசியாவில் யானைகள் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு பரவலாக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் பழங்காலம் தொட்டே பர்மாவிலும்[19], இந்தோ சீன தீபகற்பத்தின் ஒரு பகுதியில் இருந்த சம்பா பேரரசிலும் இம்முறை பயன்படுத்தப்பட்டது.[20] சியாமில் மரணதண்டனைக் கைதியை யானைகள் மிதித்து கொலை செய்வதற்கு முன்னர் அவர்களைத் தூக்கி காற்றில் வீசுவதற்கு அவற்றுக்கு பயிற்சியளிக்கப்பட்டிருந்தது.[1] ஜான் கிராஃபர்ட் (John Crawfurd) அவரது இதழில் 1821 ஆம் ஆண்டில் அவர் பிரிட்டிஷ் தூதராக கொச்சின்சீனா பேரரசில் (தற்காலா தெற்கு வியட்னாம்) பணியாற்றிய போது அங்கு பயன்படுத்தப்பட்ட யானைக் காலால் இடறி மரணதண்டனை விதிக்கும் முறை குறித்து எழுதியிருக்கிறார். "மரணதண்டனை பெற இருக்கும் கைதி மரத்தில் கட்டப்பட்டிருப்பார். மன்னருக்கு விருப்பமான யானை அந்த நபரைத் துரத்தி, அவரை நசுக்கிக் கொல்லும்" என ஜான் அவரது அனுபவத்தை நினைவுகூருகிறார்.[21]
மேற்கத்தியப் பேரரசுகள்
[தொகு]ரோமானியர்கள், கார்தாகினியர்கள் மற்றும் மெகடோனிய கிரேக்கர்கள் மரணதண்டனை விதிப்பதற்கு அவ்வப்போது யானைகளைப் பயன்படுத்தி வந்தனர். அதே சமயம் அவர்கள் போர்ப்படை நோக்கங்களுக்காக போர் யானைகளைப் பயன்படுத்தி வந்தனர். இதில் ஹனிபல் காலம் மிகவும் பிரபலமானதாகும். கடமை தவறியவர்கள், போர்க் கைதிகள் மற்றும் போர்க் குற்றவாளிகள் போன்றோர் யானைகள் மூலமாக கொல்லப்பட்டதை பழங்கால வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கின்றனர். கிமு 323 ஆம் ஆண்டில் மகா அலெக்சாண்டர் இறந்த பிறகு மெகடோனை ஆண்ட பெர்டிக்காஸ் (Perdiccas), பாபிலோன் நகரத்தில் மிலேச்சரை ஆதரித்த எதிர்ப்பாளர்களை யானையினடியில் தூக்கி வீசிக் கொலை செய்தார்.[22] ரோமானிய எழுத்தாளரான குவிண்டஸ் கர்ட்டியஸ் ரூஃபஸ் (Quintus Curtius Rufus) அவர் எழுதிய மகா அலெக்சாண்டரின் சுயசரிதையில் (Historiae Alexandri Magni) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "எதிர்ப்பாளர்களில் சிலர் நகர முடியாமல் பலவீனமாகவும் தன் இரக்கத்தை எதிர்பார்த்திருந்ததையும் பெர்டிக்காஸ் கண்டார். அவர் அலெக்சாண்டரின் இறப்புக்குப் பிறகு நடந்த முதல் கூட்டத்திலிருந்து வந்த அவர், மிலேச்சர்களை ஆதரித்தவர்களில் 300 பேரை அமைப்பிலிருந்து வெளியேற்றி, அனைத்து படைவீரர்களின் முன்னிலையில் அவர்களை யானைகள் மீது வீசிக் கொலை செய்தார். அவர்கள் அனைவரும் யானைகளின் காலடியில் பட்டு நசுங்கி இறந்தனர்..."[23]
அதே போல, கிமு 167 ஆம் ஆண்டில் மன்னர் பெர்சியஸ் (Perseus) தோற்கடிக்கப்பட்ட பிறகு, படைத்தளபதி லூசியஸ் ஏமிலியஸ் பாலஸ் மெக்கடோனிகஸ் எப்படி அவரது எதிர்ப்பாளர்களை யானைகள் மீது தூக்கி எறிந்து மிதிக்கவிட்டு கொலை செய்தார் என்பதை ரோமானிய எழுத்தாளர் வெலரியஸ் மேக்சிமஸ் (Valerius Maximus) விவரித்தார். மேலும் அவர், "உண்மையில் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு இந்த வகையிலான தீவிரமான மற்றும் எதிர்பாராத தண்டனைகள் தேவையாக இருக்கின்றன. ஏனெனில் இராணுவத்தின் பலத்தை இப்படித்தான் உறுதியுடன் நிலைக்கச் செய்ய முடியும், இது இல்லா விட்டால் ஆட்சி கவிழக்கூடும்" எனவும் கூறினார்.[24]
சில இடங்களில் நேரடியாக பொது மக்களைக் கொல்வதற்கும் யானைகள் பயன்படுத்தப் பட்டதற்கான பதிவுகள் இருக்கின்றன. இது போன்றதொரு உதாரணத்தை ஜோசபஸ் (Josephus) குறிப்பிட்டிருக்கிறார். மேலும் எகிப்திய யூதர்களுடன் தொடர்புடைய 3 மெக்காபீஸ் என்ற கட்டளைக்குப் புறம்பான புத்தகத்தில் (டியூட்டரோகனானிக்கல் புத்தகம்) இது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும் அது கேள்விக்குரியதாக இருக்கிறது. தாலமி IV பிலொபேட்டர் (Ptolemy IV Philopator) (கிமு 221 முதல் 204 வரை ஆண்டவர்) எகிப்திய யூதர்களை அடிமைப்படுத்துவதற்கும், டயனைசஸ் சின்னம் கொண்டு அவர்களைக் குறிப்பிடவும் முயற்சித்தார். அதற்கு பெரும்பாலான யூதர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அவர் அவர்களை சுற்றி வளைத்து யானைகளை வைத்து மிதிக்கவிட்டு கொல்வதற்கு ஆணையிட்டார் என 3 மெக்காபீஸில் விவரிக்கப்பட்டிருக்கிறது.[25] தேவதூதர்களின் செயலின் காரணமாக தாலமி யூதர்களை மன்னிக்கும் விதமாக நடந்து கொண்டதால் இது போன்ற திரள் மரணதண்டனையானது தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.[26][27]
தற்காலத்தில் யானையினால் ஏற்பட்ட மரணங்கள்
[தொகு]தற்போது எந்த நாட்டிலும் யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்கப்படுவது இல்லை எனினும், தற்போதும் எதிர்பாராத விதமாக யானைகளால் மரணங்கள் ஏற்படுகின்றன. அவை பின்வரும் மூன்று பிரிவுகளின் கீழ் நிகழ்கின்றன:
- காட்டு யானைகள் : ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் மனிதர்களும் யானைகளும் அதிகம் நடமாடும் பகுதிகளில் தற்போதும் யானைகளால் மரணங்கள் நிகழ்கின்றன. இலங்கையில் மட்டுமே காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் சண்டையில் ஆண்டுக்கு 50 இலிருந்து 100 பேர் வரை இறக்கின்றனர்.[28]
- பழகிய யானைகள் : 1926 ஆம் ஆண்டில் பர்மாவில் பிரிட்டிஷ் காலனிய அரசுக்கான காவல்துறை அதிகாரியாக ஜியார்ஜ் ஆர்வெல் (George Orwell) பணியாற்றிய சமயத்தில் "மதம் பிடித்த" ஒரு பழகிய யானை ஒரு மனிதனை மேலே கால் வைத்து மிதித்துக் கொன்ற சம்பவத்தைப் பார்த்திருக்கிறார். ஜியார்ஜ் தனது பிரபலமான "ஷூட்டிங் ஆன் எலிஃபண்ட்" (Shooting an Elephant) என்ற கட்டுரையில், "யானையின் காலானது அந்த மனிதனின் பின்புறத்தில் உராய்ந்து, ஒருவர் முயலின் தோலை உரிக்கும் போது தோல் தனியாக முழுவதும் பிரிந்து வருவது போல, அவனது தோல் உரிந்து வந்தது" என இந்த சம்பவம் குறித்து விவரித்திருக்கிறார்.
- அடைத்து வைக்கப்பட்டுள்ள யானைகள் : விலங்கியல் பூங்காக்கள் மற்றும் வேடிக்கை விளையாட்டுக்கான அரங்குகளில் சிறைப்பட்ட யானைகளால் நசுக்கப்பட்டு அதன் பாகன்கள் உயிரிழப்பதும் முக்கிய, தொழில் சார்ந்த தீங்காக இருக்கிறது.[29] 1990களில் இருந்து யானைகளுக்கும் அதன் பாகன்களுக்கும் இடையில் வேலியிடப்பட்ட அடைப்பு உருவாக்கப்பட்டு இருவரும் "பாதுகாப்பான தொடர்பில்" இருக்கும் வசதிகள் மேற்கொள்வதற்கு அச்சம்பவங்கள் வழிவகுத்தன.[30]
குறிப்புதவிகள்
[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Allsen, p. 156.
- ↑ 2.0 2.1 Schimmel, p. 96.
- ↑ Benisch, A. (trans). "Travels of Petachia of Ratisbon". London, 1856.
- ↑ Knox, Robert. "An Historical Relation of the Island Ceylon". London, 1681.
- ↑ Tennent, p. 281.
- ↑ Sirr, Sir Charles Henry, quoted in Barrow, George. "Ceylon: Past and Present". John Murray, 1857. pp. 135–6.
- ↑ Olivelle, p. 125.
- ↑ Jack Weatherford-Genghis Khan, p.116
- ↑ Natesan, G.A. The Indian Review , p. 160
- ↑ Hamilton, p. 170.
- ↑ Eraly, p. 45.
- ↑ Eraly, p. 479.
- ↑ Eraly, p. 498
- ↑ Kerr, p. 395.
- ↑ Buffon, Georges Louis Leclerc. "Natural history of man, the globe, and of quadrupeds". vol. 1. Leavitt & Allen, 1857. p. 113.
- ↑ Ryley Scott, George. "The Percy Anecdotes vol. VIII". The History of Torture Throughout the Ages. Torchstream Books, 1940. pp. 116–7.
- ↑ Harper's Weekly , February 3, 1872
- ↑ Maddock, Eleanor. "What the Crystal Revealed". American Theosophist Magazine , April to September 1914. p. 859.
- ↑ Chevers, p. 261.
- ↑ Schafer, Edward H. "The Golden Peaches of Samarkand: A Study of T'ang Exotics". University of California Press, 1985. p. 80. ASIN: B0000CLTET
- ↑ Crawfurd, John. "Journal of an Embassy from the Governor-general of India to the Courts of Siam and Cochin China". H. Colburn and R. Bentley, 1830. p. 419.
- ↑ Fox, Robin Lane. "Alexander the Great". Penguin, 2004. p. 474. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-008878-4
- ↑ Curt. 10.6-10 (registration required)
- ↑ Futrell, Alison (Quoted by) (ed.). "A Sourcebook on the Roman Games". Blackwell Publishing, 2006. p. 8.
- ↑ 3 Maccabees 5
- ↑ 3 Maccabees 6
- ↑ Collins, p. 122.
- ↑ "People–Elephant Conflict: Monitoring how Elephants Use Agricultural Crops in Sri Lanka" Smithsonian National Zoological Park. Retrieved on February 29, 2008.
- ↑ "Accidents with Elephants" Elephant Magazine . Retrieved on February 29, 2008.
- ↑ Tim Desmond and Gail Laule (1994). "Converting Elephant Programs to Protected Contact" (PDF). Active Environments, Inc. Retrieved May 3, 2010.
மூலங்கள்
[தொகு]- Allsen, Thomas T. "The Royal Hunt in Eurasian History". University of Pennsylvania Press, May 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-92151-1.
- Chevers, Norman. "A Manual of Medical Jurisprudence for Bengal and the Northwestern Provinces". Carbery, 1856.
- Collins, John Joseph. "Between Athens and Jerusalem: Jewish Identity in the Hellenistic Diaspora". Wm. B. Eerdmans Publishing Company, October 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-4372-7
- Eraly, Abraham. "Mughal Throne: The Saga of India's Great Emperors", Phoenix House, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7538-1758-6
- Hamilton, Alexander. "A New Account of the East Indies: Being the Observations and Remarks of Capt. Alexander Hamilton, from the Year 1688 to 1723". C. Hitch and A. Millar, 1744.
- Kerr, Robert. "A General History and Collection of Voyages and Travels". W. Blackwood, 1811.
- Olivelle, Patrick (trans). "The Law Code of Manu". Oxford University Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280271-2
- Schimmel, Annemarie. "The Empire of the Great Mughals: History, Art and Culture". Reaktion Books, February 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86189-185-7
- Tennent, Emerson James. "Ceylon: An Account of the Island Physical, Historical and Topographical". Longman, Green, Longman, and Roberts, 1860.