பயனர்:Mujeebu2000
எச்.முஜீப் ரஹ்மான்(செப்டம்பர் 28,1971) தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். தமது படைப்பிலக்கியத்தாலும்,ஆய்வுகளாலும் பல வாசகர்களைக் கவர்ந்துள்ளார்.இவரது முதல் கதை உப்பாவைச் சொல்லும் கலை பலராலும் கவனிக்கப்பட்டது.கதை,நாவல்,விமர்சனம்,ஆய்வு,குறும்படம்,சூபித்துவம் பல் தளங்களில் பயணித்து வருகிறார்.
வாழ்க்கைக்குறிப்பு
[தொகு]இவரது தந்தை வித்வான் ஹசன் சாஹிப் 1965 ல் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகரான பத்மனாபபுரம் நகரில் குடியேறினார். தாயார் கதிஜா பீவி.இவரின் சகோதரர்கள் மூன்று பேராவார்.கோட்டைக்ககம் வடக்கு தெருவில் வலியவீட்டில் 25 வயது வரைவாழ்ந்து பின்னர் தக்கலையில்குடியமர்ந்தார்.பள்ளிப்படிப்பை கல்குளத்திலும் பின்னர் தக்கலையிலும் முடித்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜில் இளநிலை,முதுநிலை பட்டங்களை பெற்றார்.பின்னர் குஜராத்திலும்,பம்பாயிலும் சிலவருடங்கள் பணிபுரிந்து சவுதி அரேபியாவுக்கு சென்று பணி புரிந்தார்.சவூதியிலும் பின்னர் அபுதாபியிலும் பதிநான்கு வருடங்கள் பணிபுரிந்து விட்டு தற்போது நேசணல் இஞ்சினியரிங் காலேஜில் பேராசிரியராக பணிபுரிகிறார்.இவருக்கு மிசிரியா என்ற மனைவியும் ஆதில்,ஆதிரா என்ற குழந்தைகளும் உள்ளனர்.
படைப்புகள்
[தொகு]1990 களில் இருந்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் இணைந்து செயல்பட்டுவருகிறார்.இவரது முதல்கதை காலச்சுவடு இதழும் கதா அமைப்பும் இணைந்து நடத்திய போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது.புதியகாற்று,தாமரை,செம்மலர்,உயிர்மை,உயிர் எழுத்து,தீராநதி என்று எல்லா இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.சுந்தர ராமசாமி,பொன்னீலன்,தோப்பில்முகமதுமீரான் ,ஹெச்.ஜி.ரசூல்,ஜெயமோகன் போன்ற எழுத்தாளார்களின் ஊக்கத்தின் பேரில் கதை எழுத துவங்கினார்.இவரது முதல் சிறுகதை தொகுப்பு தேவதைகளின் சொந்தக்குழந்தை புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.எம்.ஜி.சுரேஷ் இந்த தொகுப்பை பின்நவீனகதைகள்[1] என்றே குறிப்பிட்டார்.2005 க்கு பின்னர் 2007 ல் இவரது முதல் நாவல் தேவதூதர்களின் கவிதைகள் வெளிவந்தது.தமிழின் முதல் பின்னை நாவல் இது தான்.அதன் பின்னர் 2014 ல் புதுஎழுத்து பதிப்பகத்தால் மகாகிரந்தம்[2] நாவல் வெளியிடப்பட்டது.அதன் பின்னர் 2015ல் ஒரு சூபியின் சுயசரிதை என்ற சிறுகதை தொகுப்பு வெளியானது.2016ல் நான் ஏன் வஹாபி அல்ல?[3] என்ற ஆய்வு நூல் 800 பக்கங்களில் கீற்று வெளியீட்டகத்தால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.பின் நவீனத்துவம்[4],மார்க்சியம்[5],பின்காலனியம்,[6]நாட்டாரியல்[7] போன்ற கோட்பாடுகளில் தேர்ச்சியுடைய இவர் பல்வேறு கருத்தரங்குகளில் பேசி வருகிறார்.முறையே தொடர்ச்சியாகப் பல நூல்கள் வெளிவரத் தயாராக அச்சில் இருக்கிறது.விஷயம் என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.ஏலாதி,கரிசிலாங்கண்ணி உள்ளிட்ட சிற்றிதழ்களில் ஆசிரியராக இருந்துள்ளார்.தற்போது திணை[8] என்ற காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிவருகிறார்.கறுத்தவாவு என்ற இலக்கிய கூடுகை நிகழ்வை சில வருடங்கள் நடத்தினார்.ஏலாதி இலக்கிய விருது [9]படைப்பிலக்கியத்துக்காக அளிக்கப்பட்டது.அதில் அறக்கட்டளை உறுப்பினராக இருந்து வருகிறார்.ஏலாதி சிந்தனை பள்ளியின் ஸ்தாபகராகவும் சூஃபி பள்ளியின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார்.
எச்.முஜீப் ரஹ்மானின் நூற்கள்:
1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)
2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)
3) மகாகிரந்தம் (நாவல்)
4) நான் ஏன் வஹாபி அல்ல? (ஆய்வு)
5)மறுவாசிப்பு,மறுசிந்தனை,மறுவிளக்கம் (கட்டுரை)
6) தியரி (ஆய்வு)
7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை
8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)
9) வெறுமொரு சலனம் ( கவிதை)
10)பின் நவீன கவிதைகள்
11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்
12) ஒரு சூபியின் சுய சரிதை
( சிறுகதை)
13) நவீன தமிழ் அகராதி
14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )
15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)
16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)
17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)
18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)
19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)
20) சூபி நூற்களில் சூபித்துவம்
( மதிப்புரை)
21) சூபி பேரகராதி
22) ஹமவோஸ்த் (ஆன்மீகம்)
23) தீர்க்கதரிசி (நாவல்)
24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)
25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல
( கட்டுரை)
அங்கீகாரங்கள்:
முதல் கதை கதாவிருது பெற்றது.முதல் தொகுப்பு தேவதைகளின் சொந்தக்குழந்தை தமிழ்நாடுகலை இலக்கிய பெருமன்றத்தால் சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டது.மதுரை புதியகாற்று இவரது சிறுகதை ஒன்றுக்கு விருது வழங்கியது.மகாகிரந்தம் ஜெயந்தன்படைப்பிலக்கிய விருதை[10] பெற்றது.திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டிற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இவரது படைப்புகளுக்காக கவுரவ விழா எடுக்கப்பட்டது.
இலங்கையில் காத்தான்குடியில் விசேட பிரதிநிதியாக சூபிச மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.தக்கலை ஞானமாமேதை பீர்முகம்மது அப்பா ஆண்டுவிழா[11] மேடையில் இவர் உரைநிகழ்த்தியுள்ளார்.ஞானப்புகழ்ச்சிக்கு உரை எழுதி வருகிறார்.இலங்கை,தமிழ்நாட்டு பல்கலைகழகங்களில் சூபியிசம் குறித்து இவர் சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.இஸ்லாமிய மாநாடுகளிலும்,கருத்தரங்குகளிலும் இவரது பேச்சுகள் முக்கிய இடம் வகிக்கிறது.நூற்றுக்கும் அதிகமான இஸ்லாமிய,சூபியிச கட்டுரைகளை எழுதியுள்ளார்.வஹ்தத்துல் உஜூத்[12] என்ற சூபியிச கொள்கையும் கலிமா குறித்தும் அதிகம் பேசுகிறார்.இவரது உரைகள் பல யூடூபில் காணக்கிடக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.poornachandran.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/
- ↑ http://vaamukomu.blogspot.in/2016/09/blog-post_16.html?m=1
- ↑ http://keetru.com/%E2%80%A6/2014-03-08-12%E2%80%A6/32191-2017-01-11-06-44-47
- ↑ பின்நவீனத்துவம்
- ↑ மார்க்சியம்
- ↑ https://mobile.twitter.com/jamalanjahir/status/708688083898802177
- ↑ http://www.jeyamohan.in/9361#.WV3V2d9X7qA
- ↑ https://panmai2010.wordpress.com/2015/04/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/
- ↑ http://old.thinnai.com/?p=606082510
- ↑ http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/29296-2015-5
- ↑ http://cinema.maalaimalar.com/Devotional/Worship/2017/04/13111054/1079735/Beer-Muhammad-Dargah-festival.vpf
- ↑ http://www.mailofislam.com/wahdatul_wujood_endral_enna.html