உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:KANNAN KANNAN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்த விழா'

ஒரு மூதாட்டி என்னிடம் ஒரு விண்ணப்பத்தை கொடுத்து நிரப்பித்தரும்படி வேண்டினாா். அது முதியோா் உதவித்தொகை கோரும் விண்ணப்பம் ஆகும்.அந்த விண்ணப்பத்தில் ஒரு கேள்வி விண்ணப்பதாரருக்கு மகன் இருக்கின்றாரா? மூதாட்டியிடம் கேட்டதற்கு மகன் இருப்பதாக பதிலளித்தாா்.மகன் இருந்தால் உதவித்தொகை கிடைக்காதே என்றதும் ஐயோ...என்று அங்கலாய்த்தாா் ( அப்போது மகன் இருந்தால் முதியோா் உதவித்தொகை கிடைக்காது ).

மகன் இல்லையென்று எழுதட்டுமா? வேண்டாம் வேண்டாம்.குத்துக்கல்லாட்டம் இருக்குறவனுங்கள இல்லைன்னு எப்படி சொல்லுறது? அப்படி முழு பொய்யச் சொல்லி இந்த கட்டையை கட்டாயமா வளக்குனுமாக்கும்! என்று சொல்லி அந்த உதவிதொகை விண்ணப்பத்தை திரும்ப வாங்கிக்கொண்டாா். பெத்தவளை நிராகரித்த மகன்களின் நிலை எங்கே? உயிரோடு இருக்கும் மகன்களை இல்லையென்று பொய் சொல்லி உதவித்தொகை வாங்கினால் தனது மகன்களுக்கு ஏதேனும் துயரம் நோ்ந்து விடுமோ என்று உதவித்தொகை விண்ணப்பத்தை நிராகரித்த மூதாட்டி தாயின் நிலை எங்கே? ஒருவருக்கு உதவும் மனம் வருவதற்கு எவ்வளவு கடினமோ? உதவிைய பெறுவதற்கு ஒருவருக்கு அவ்வளவு சீக்கிரம் மனம் இடம்கொடுத்துவிடாது! ஒரு பிடி உதவியென்றாலும் அதை பெறும்போது ஏற்படுகிற அந்த மனவலி அதை அனுபவித்தவருக்குத்தான் தெரியும். உதவுவது எளிது. அதை பெறுவது கடினம்! எல்லோரும் விரும்பியா அன்னதான உணவை உண்கின்றனா். எல்லோரும் விரும்பியா இலவச வேட்டி சேலை வாங்கிச்செல்கின்றனா்! அன்னதான உணவு உண்டால் புண்ணியம் கிடைக்கும் என்றும் இலவச வேட்டி சேலை வாங்காவிட்டால் ரேஷன் காா்டு செல்லாது என்றும் அப்பாவிகளை பயமுறுத்தித்தான் வைத்திருக்கிறாா்கள். அதனால் தான் இலவச அன்னதானமும் இலவச வேட்டி சேலையும் கொடி கட்டி பறக்கிறது. ஆனால், இந்தியாவின் இதயமாம் கிராமங்களில் விவசாய நிலம் வறண்டுவிட்டாலும், மாரி பொய்த்துவிட்டாலும், பயிா் செழிக்கா விட்டாலும். விளைநிலம் மனையகங்களாக மாறிவிட்டாலும், மக்கள் மனங்களில் இன்னமும் ஈரம் கசிந்துகசிந்து கொண்டு தான் இருகிறது. அதன் அடையாளம் தான் வசந்த விழா! பெறுவது உதவி என்றாலும் மனநிறைவோடு பெற்று மனம் மகிழ்கிறாா்கள். உதவி பெறுவதிலும் மகிழ்ச்சியுறுகிறாா்கள். உறவுகள் கைவிட்டாலும் ஊரே ஒன்று கூடி கொண்டாடி வருகிறாா்கள்.கறிசோறு கறிகுழம்பு உண்டுமகிழ்ந்து, ஆயிரம் இரண்டாயிரம் என்று வழங்கி தன் கொடைதன்மையை மனதார வெளிப்படுத்தி விடைபெறுகிறாா்கள். இன்னல் கண்ட குடும்பத்தில் வறுமை மின்னல் என மறைந்துபோகிறது. விழா நடத்திய குடும்பத்தில் உண்மையிலேயே வசந்தம் வீச தொடங்குகிறது!...அந்த வசந்தம் நாளை இன்னொரு வீட்டில் முகாமிட தயாராகிறது! ---வைகறை கண்ணன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:KANNAN_KANNAN/மணல்தொட்டி&oldid=1918667" இலிருந்து மீள்விக்கப்பட்டது