பயனர்:Eravi2007/மணல்தொட்டி
{{subst:Biography}} இரவி, இந்தியாவைச் சேர்ந்த ஒரு தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர். சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் திரைக்கதை எழுத்தாளர், இலக்கிய ஆய்வாளர், தமிழ்ப் பேராசிரியர், இலக்கியப் பேச்சாளர் ஆவார். தாம்பரம் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ் நவீன கவிதைகளில் பின் நவீனத்துவத்தின் செல்வாக்கு என்ற தலைப்பில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். சென்னையில் உள்ள வடபழனி வளாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 2015- ஆம் ஆண்டு அவர் தமிழ்த் திரையுலகுக்குள் நுழைந்து, அங்குப் பாடலாசிரியராகவும், விளம்பரப் பாடல் எழுதுபவராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றத் தொடங்கினார். இலக்கியச் சொற்பொழிவாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
அதேநேரத்தில், மிதப்புகள் என்ற யூடியூப் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறார்.