உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:துறைவன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவையான தேனீர்…!!

1. அரண்மனைகள்

இந்திய தேசம் பழம்பெரும் தேசம். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் அரசர்களின் கீழ் தான் நடைபெற்று வந்துள்ளன. அக்காலத்திய அரசர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் மிகுந்த கலைநய வேலைப்பாடுடன், கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி, வலிமையான கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர்கள், நான்குப் புறமும் வாயில்கள், உள்ளே அகன்ற வீதிகள், அரசபை மண்டபம், அரசருக்காக ஆலோசனைக்கூடம், அரசர், ராணிகள் மற்றவர்க்கென்று தனித்தனி படுக்கையறைகள், தேரோடும் வீதிகள், குளிப்பதற்னெ நீராழிமண்டபங்கள், யானை குதிரை லாயங்கள், போர்பயிற்சிக் கூடங்கள், வழிப்பாட்டுக் கோயில்கள். காஜானா அறைகள்,ரகசியஆலோசனைக்கூடங்கள், சுரங்கப்பாதைகள் என சிறந்தமுறையில் கட்டப்பட்ட அரண்மனைகள், இந்து, முஸ்லிம் மன்னர்களின் நாடு பிடிக்கும் ஆசையினால் போர்கள் மூண்டுள்ளது. அதற்குப் பின்னர் வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் துண்டாடி, மக்களிடையே பகைமை மூட்டி, மன்னர்களைச் சிறைப் பிடித்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அப்போது, போர்களால் அரண்மனைகளை அழித்தும் சிதைத்தும் மிகுந்தச் சேதத்தை ஏற்படுத்தினர் அதன் எச்சங்களாகவே, இந்தியா முழுவதும் இன்றைக்கும் இருக்கின்ற கோட்டைகளை, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறிசில இடங்களில் அரண்மனைகளை நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து அனுமதிக்கும் காட்சிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரண்மனைகள் சிதைவுற்று யாரும் உள்நுழைந்த காணமுடியாத அளவில் உள்ளன. அங்கே மக்கள் யாவரும் பயத்தோடு தான் சென்று பார்க்கின்றனர். மக்கள் பார்வையிட முடியாத அளவிலும் பல கோட்டைகள் இருக்கின்றன. அக் கோட்டைகளின் உள்ளே முன் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது.யாருக்கும்அனுமதியுமில்லை.இருட்டும்,செடிகொடிகள் புதர்கள் நிறைந்த அவ்விடத்தை வௌவால்களும்,சிறுபறவைகளும்,எலிகளும், ஒணான்களும் இன்ன பிறவிலங்குகளும், குறிப்பாக, வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே,

“ அரண்மனைக்குள் நுழைய அனுமதியில்லை யாருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மட்டும். ” – [ நா.விச்வநாதன் – “ முள்ளில் அமரும்

பனித்துளிகள் ” நூல் பக்கம் 18 ] என தொன்மத்தை நினைவுகூறும் வகையில் ஹைக்கூ கவிதையினைப் படைத்துள்ளார் கவிஞர். ஒரு ஹைக்கூ கவிதையின் அழகியல் என்பது படைப்பாளி தேர்வு செய்யும் கருப்பொருளில் தானிருக்கின்றன என்பது இந்த ஹைக்கூ கவிதையில் அறியமுடிக்கின்றது.* ந.க. துறைவன் கட்டுரை.

தென்னம் பூவே….!! {கஜல்}

உயரமாக வளர்ந்திருக்கும் தென்னம் பூவே உனைத் தழுவிக் கொண்டு ரசிக்கிறேனே கீழே நின்னு. கூட்டத்திலே நீயொருத்தி அழகுடியோ எந்தன் கண்ணே உனைத் தொடுவதற்கு வெட்கமா இருக்குதடி தென்னம் பெண்ணே. சிரிக்கும் போது வெடிக்குதடி தென்னம் பாளை- அந்த சிரிப்பினிலே சொக்கி போயி நிக்கிறேனே இந்தக் காளை. காற்றினிலே ஆடியாடி ஓய்யாரமா அலையுதடிப் பச்சைச் ஓலை எனக்கு வெஞ் சாமரமாய் விசுறுதடி விடியற் காலை. யாரும் பார்க்கக் கூடா தென்றா? சின்னச் சின்ன மஞ்சள் பூவே மறைந்து நீயோ அழகாகப் பூத்திருக்கிறாய் தென்னம் பூவே. உதிர்ந்து வந்து விழுந்து விடு என் இதயத்தின் மேலே உனை நெஞ்சில் அணைச்சி கொஞ்சிடுவேன் தென்னம் பூவே. குலை குலையாய் தொங்குதடி இளநீர்க் காய்கள் உன் மேலே விழுந்துப் புரண்டுத் திரியுதடி சின்னச் சின்ன அணில்கள் உனை வெட்டும் போது துடிக்கும் எனது இதயத்தைப் பாரு உதட்டில் வைச்சிக் குடிக்கும் போது நெஞ்சுக்குள்ளே இறங்குதடி இளநீரு. இளநீரு கொடுத்து எம் மனசை இளக வைத்தாயே - எப்போ என் காதல் வேகத் தாகத்தையே தணிய வைக்கப் போ.கிறாய்?

இந்தத் தோப்புக் குள்ளே விளையாடி கொஞ்சி மகிழ்ந்திடு வோமா? அந்த நிலவைத் தூரப் போகச் சொல்லி ஆணை யிடுவோமா? ந.க. துறைவன் கஜல் கவிதை.

அழகான தும்பிகள்…..!! [சென்ரியு ]

அவசரமாகப் பறக்கின்றன ராணுவ ஹெலிகேப்டர்கள் அழகானத் தும்பிகள்.

நிமிர்ந்துப் பார்த்து விட்டது தோழியைத் தேடி ஒடுகிறது வேலி தாண்டி ஓணான்.

விரும்பி வாங்கினார் விலைக்கு தாயிடமிருந்துப் பிரித்து புசுபுசுப் பூனைக் குட்டி.

முகம் அறியாத நண்பர்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டனர் கோயில் வாசலில் காலணிகள்.

வலி தாங்காமல் கதறி அழுகிறது காதல் கவிதைகள்.

எங்கெங்கோ தேடிக் கண்டுபிடித்தான் பெட்டிக்குள்ளிருந்தது காணாமல் போன விமானம்..

யாரேனும் கொஞ்சம் சிரித்துக் காட்ட முடியுமா? அகம்பாவச் சிரிப்பு.

கோடைத் தாகமோ? தண்ணீர் இல்லாதத் தொட்டியின் மீது காகம். ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

அன்றலர்ந்த மலர்கள்…!! [ சென்ரியு ]

வண்டுகளின் இம்சை பொறுக்காமல் முணுமுணுக்கிறது அன்றலர்ந்த மலர்கள்.

வீரத்திற்கு பெருமை சேர்த்தது வரலாற்று சின்னமாய் வன்னிப் பூக்கள்.

தோப்பில் திருட வந்தவனை துரத்தி துரத்திக் கொட்டியது குளவிகள்.

ஐந்து ரூபாய் விலை கோலி குண்டுப் போல எலுமிச்சம் பழம்.

பசிக்கு அன்னதானம் பார்வைக்கு கண் தானம், உயிர் காக்கும் இரத்ததானம்.

குடும்பத்தில் சண்டை வேடிக்கைப் பார்க்கிறது மூலையில் மறைந்து பூனை.

நோயாளிகளின் தோழிகள் உயிர் மீட்புப் பணியாளர்கள் சிகிச்சைத் தரும் செவிலியர்கள். - ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

அடைக்கலம்…!!.

வாய்விட்டு சொல்லாமல் மனசுக்குள்ளேயே வைச்சி எத்தனையோ பேருக்கு இரகசியமாய் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்திருக்கின்றது மௌனமான – அந்த மறைவான மலைக் குன்றுகள்…!!..

கம்மங் கதிரு…!!

காடுகழனிப் பார்த்து ரொம்ப வருஷமாச்சின்னு காலார நடந்துப் போய் பார்த்து வரலாமுன்னு நினைச்சி புறப்பட்டுப் போனேன். பச்சை பசேல்லுன்னு அங்கே பசுமையான அழகு காட்சி. வரப்பிலே நடந்து போகையில் குருவிங்களெல்லாம் உற்சாகமா தலைக்கு மேலே பறக்கின்றன. வரப்பிலிருந்தவாறே செண்டாக முதிர்ந்த ரெண்டு கம்மங் கதிரை கைநீட்டி பறிச்சி உள்ளங்கையில் வைச்சி நுமிட்டி நுமிட்டி ஊதி ஊதி வாயிலிட்டுச் சுவைத்தேன் பச்சைக் கதிரி்ன் பால்சுவை அத்தனையும் ருசியான தெவிட்டாத தேன்சுவை. செழிப்பான மண்ணின்சுவை. மீண்டும் நடந்தபோது எதிரில் எதிர்ப்பட்டது என் மாணவப் பருவத்து காதலி. அவள் இன்று இரண்டு குழந்தைகளின் தாய். அவளின் அழகு முன்னைவிட மங்கலமாய் பிரகாசிக்கின்றது. அவளை நலம் விசாரித்து அவளுக்கே தெரியாமல் கண்ணீர் வெளியி்ல் சிந்தாமல் வரப்புப் பார்த்து வழிநடந்தேன் பசுமையான நினைவுகளோடு…!! ந.க.துறைவன் கவிதை.