பயனர்:ஜெ. ஜனனி/மணல்தொட்டி
தேவகி கோபிதாசு Devaki Gopidas | |
---|---|
பாராளுமன்ற உறுப்பினர் ராஜ்ய சபா | |
பதவியில் 1962–1968 | |
தொகுதி | கேரளா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1918 |
இறப்பு | 1973 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேவகி கோபிதாசு (Devaki Gopidas) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] தேவகி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1962 - 1968 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவில் கேரளாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3][4][5]
கல்வி
[தொகு]தன்னுடைய பள்ளிப் படிப்பை கோட்டயத்திலும், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் கல்லூரிக் கல்வியையும் முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது காங்கிரசு கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். பின்னர் கொல்கத்தாவில் சட்டம் பயின்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]1918 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி கோட்டயம் மாவட்டம் காரப்புழாவில் ஓர் ஈழவர் குடும்பத்தில் அரங்கசேரி நாராயணன் மற்றும் டி.கே.நாராயணி ஆகியோருக்கு மகளாக தேவகி கோபிதாசு பிறந்தார்.[6]ஆலப்புழா மாவட்டம் வேழப்பிரா கிராமத்தைச் சேர்ந்த கோபிதாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு கொல்கத்தாவில் குடியேறினார்.
இறப்பு
[தொகு]1973 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று 65 பேருடன் பறந்த இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த 48 பேரில் இவரும் ஒருவராவார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Is CPI paying mere lip service to gender equality?". www.onmanorama.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. p. 145. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. pp. 470–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-513-5. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
- ↑ India. Parliament. Rajya Sabha. Parliamentary Debate. p. 3879. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
- ↑ Sadasivan, S. N. (2000). A Social History of India (in ஆங்கிலம்). APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-170-0.
- ↑ Reporter, Our Staff (2004-06-01). "Win back people's trust: Chandy tells politicians" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/win-back-peoples-trust-chandy-tells-politicians/article27620075.ece.