உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கவிப்பிரியா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிவகிரி ஈரோடு மாவட்டம், சிவகிரியில், 1904 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டது. மிகப்பழைமையான பள்ளி. தற்போது இப்பள்ளியில் சுமார் 400 மாணவ மாணவியர் பயில்கின்றனர். 12 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை தமிழ் வழி கல்வி கற்பித்தலும், ஒன்று முதல் மூன்று வகுப்பு வரையிலும் ஆறு முதல் எட்டு வகுப்பு வரையிலும் ஆங்கில வழி கற்பித்தலும் நடைபெற்று வருகின்றது.

சிறப்புகள்[தொகு]

  1. 2012-2013 கல்வியாண்டில் இப்பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவன் இனியன் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பத்தாம் இடம் பெற்றுள்ளான். அரசுப்பள்ளிகளுள் முதலிடம் பெற்றான்.
  2. 2013-2014 கல்வியாண்டில் சிறார் செஞ்சுலுவைச் சங்கம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
  3. சுற்றுச்சூழல் மன்றம், பள்ளி சுகாதாரக்குழு போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன.