பயனர்:ஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன்
என்னைப் பற்றி.......
இலங்கையைத் தாயகமாகக் கொண்ட எனக்கு வாசிப்பதும், பயணிப்பதும் மிகவும் பிடித்தமான பொழுது போக்குகள். இயற்கையை வெகுவாக நேசிக்கும் எனக்கு, நிறைய நட்புகளை உலகெங்கும் வென்றிட வேண்டுமென்ற தணியாத ஆசை மனதில் இருக்கின்றது. சுவிஸ் நாட்டில் 25 வருடங்கள், குவெத்தில் 8 வருடங்கள் என்று வெளிநாட்டு உழைப்பைத் தேடி 30 வருடங்களுக்கு மேல் என் வாழ்க்கை அந்நிய மண்ணில்கழிந்து விட்டது. எழுத்தார்வம் மிக்க நான் எழுதத் தொடங்கி 50 வருடங்கள் நிறைவாகி விட்டன. பதவி ஓய்வு பெற்று தாயகம் திரும்பிய பின்பு, முழுமூச்சாக பல பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். இரு வாரமலர் பத்திரிகைகளில் சுவிஸ் வாழ்வியல் அனுபவக் கட்டுரையும், சமீபத்தைய இஸ்ரவேல் பயணக் கட்டுரையும், வாராவாரம் தொடர்ந்து பிரசுரமாகி வருகின்றன.விளையாட்டுத் துறை, உலக நடப்புகள் போன்றவற்றைப் பற்றியும், எழுதி வருகிறேன். ஒரு நாவல் எழுதி வைத்துள்ளேன். இதை புத்தகமாகப் பிரசுரிக்கும் எண்ணம் உண்டு. ஏற்கனவே “சிதறல்கள்” என்ற பெயரில் சுவிஸ் நாட்டில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தேன். உலகின் பல நாடுகளுக்குப் பயணித்து விட்டேன். மேலும் பல நாடுகளுக்குப் பயணிக்க வேண்டும். அந்தந்த நாட்டு மனிதர்களடன் பழக வேண்டும் என்பதே என் பேரவா. தமிழ், ஆங்கிலம் எனக்கு மிகவும் பிடித்தமான மொழிகள். இரு மொழிகளிலும் ஏராளமாக வாசிப்பதுண்டு. என் எழுத்துப் பங்களிப்பை உங்களுக்கும் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.