உள்ளடக்கத்துக்குச் செல்

பயணப்பாதை ஒளிப்பதிவுக் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயணப்பாதை ஒளிப்பதிவுக் கருவி (Roadtrip Video Recorder) எனும் இப்பதிவுக்கருவியினை பயணிக்கும் வாகனங்களின் முற்பகுதியில் பொருத்திவிட்டால் அது தானாகவே முழுமையான பயணத்தினையும் பதிவுசெய்துவிடும். இக்கருவியானது 8x உருப்பெருக்கம், 120 டிகிரி கோணத்தை உள்ளடக்கக் கூடிய வில்லையினைக் கொண்டிருப்பதுடன் 270 டிகிரியில் காட்சிகளைப் பதிவு செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது. மேலும் 640 x 480 நுணுக்கத்தில் காட்சிகளை பதிவுசெய்யும் திறனைக் கொண்டுள்ளது. அதேநேரம் வாகனத்தில் ஏற்படும் திருப்பங்களுக்கு ஏற்ப தனது நிலையினையும் மாற்றக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.