உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பாய் கவிஞர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாம்பே கவிஞர்கள் (Bombay Poets)(அல்லது, பாம்பே கவிஞர்கள் குழு) என்பது சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், உரைநடை மற்றும் வசனம் இரண்டையும் உள்ளடக்கிய இந்திய ஆங்கில இலக்கியத்தின் குழுக் கருத்துக்களில் ஒன்றாகும். இவர்கள் பம்பாய் (இப்போது, மும்பை ) புவியியல் பகுதியினைச் சேர்ந்தவர்கள். இந்திய ஆங்கிலக் கவிதைகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியக் கவிஞர்களின் பார்வையை மறுவரையறை செய்த பெருமைக்குரிய பல உறுப்பினர்கள் உள்ளனர். இக்கருத்துக் குழுவில் 1960களில் நிசீம் எசேக்கியேல், ஆர். பார்த்தசாரதி, தாம் மோரேசு, அடில் ஜுஸ்ஸவல்லா போன்ற முக்கியக் கவிஞர்களுடன் தொடங்கப்பட்டது. மேலும் பலர் காலா கோடாவில் ஒன்றுகூடி, இலக்கியம் பற்றி விவாதிப்பார்கள். தங்கள் கவிதைப் படைப்புகளை வழங்குவார்கள். பிற கவிஞர்களின் படைப்புகளை விமர்சன ரீதியாகப் பகுப்பாய்வு செய்வார்கள். இவர்களின் பன்னாட்டுப் பாராட்டு காரணமாக, இவர்கள் சோஹோ (லண்டனில்), நியூயார்க் போன்ற கலாச்சார தலைநகரங்களிலும், மேலும் இதுபோன்ற பல இடங்களிலும் தங்கள் படைப்பு உரைகளை நிகழ்த்தியுள்ளனர். இவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் கார்னெல் பல்கலைக்கழக நூலகத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[1]

இவர்களின் படைப்புகள் இந்தியாவில் இன்றுவரை பெரும் செல்வாக்கு பெற்றுள்ளன. மேலும் பல தலைமுறை எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் ஊக்கப்படுத்தியுள்ளன.[2][3][4][5]

பம்பாய் கவிஞர்களின் பட்டியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bombay Poets Archive | DCAPS". dcaps.library.cornell.edu. Archived from the original on 2022-05-17. Retrieved 2022-03-15.
  2. Silgardo, Dustin (2015-03-14). "In Mumbai, the poetry never ends". mint (in ஆங்கிலம்). Retrieved 2022-03-15.
  3. lindsaypereira (2020-01-08). "The Poets of Bombay That Time Forgot". Medium (in ஆங்கிலம்). Retrieved 2022-03-15.
  4. Kumar, Anu. "This book unpacks the enigma of Arun Kolatkar and the many passions of the 'Bombay poets'". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-03-15.
  5. "Bombay Poets | Jaya's blog" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-03-15.
  6. Hasan, Anjum. "The forgotten story of a poetry publishing collective". The Caravan (in ஆங்கிலம்). Retrieved 2022-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாய்_கவிஞர்கள்&oldid=4110453" இலிருந்து மீள்விக்கப்பட்டது