உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பம்பல்கள் (viral phenomena) என்பவை தம்மைத் தாமே போலித்தோ (அதாவது பிரதியாக்கி)  தம்மோடு தொடர்புகொள்ளும் பிறவற்றைத் தம் போலிகளாகவோ ஆக்கி வெகுவிரைவில் பம்பும் (பரவும்) திறன்வாய்ந்த பண்டங்களோ அமைப்புக்களோ ஆகும். அவை அந்தப் போலிப்புத் திறனால் விரைவிலே பம்பக் கூடியவையாதலால் அவை பம்பல்கள் எனப்படுகின்றன. பம்பல் என்பதை  அந்த நிகழ்வுக்கும் வழங்குவர்.

சென்னைப் பேரகராதியின்படி "பம்புதல்" என்பது செறிதல், நிறைதல், பரவுதல், எழுதல், ஒலித்தல் எனவும் "பம்பு" என்பது பரந்த வடிவு, களிப்பு, பொலிவு அறுவடை, துளி எனவும் பொருள்படுகின்றன.[1]

பம்பி

[தொகு]

பம்பி (Viral) என்னும் கிளவி (term) குறுகிய காலத்தில் பல இணையப் பயனாளிகளூடே பம்பும் காணொளி, உருவம் அல்லது எழுத்துரை ஆகியவற்றைக் குறிக்கும்.[2] ஏதேனுமொன்று பம்பலாகிறதென்றால் அதனைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர் என்று பொருள்.

எடுத்துக்காட்டாக “கதறும் சிறுவனின் கலக்கலான காணொளி பம்பலாகிறது", “இன்றைய புதுப் காணொளிப் பம்பிகள்!",  “தமிழ்ப் பம்பிகள்!" போன்ற கவர்ச்சித் தலைப்புக்களைக் காணலாம்.

பம்பலும் பம்பிகளும்:

[தொகு]

பம்பல் என்னும் கருத்து மக்களிடையே எண்ணங்கள் செய்திகள் போக்குகள் ஆகியன பரவுவதை விளக்கும் ஒரு பொது வழிவகையாகிவிட்டது. பம்பலூடகம் (“viral media”)  என்னும் இன்னொரு கிளவியும் சமூகத் தொடர்புத் தளங்களின் மிகுவிரைவான வளர்ச்சியினால் புகழ்பெற்றுள்ளது. பம்பலூடகம்  என்பது பரப்பூடகம் (“spreadable media”) என்பதிலிருந்து வேறுபட்டது; ஏனெனில் பம்பலூடகம் என்பது தொற்றல் தீண்டல் போன்ற பம்பல்முறைகளைப் பின்பற்றுகிறது; அதாவது பரப்பூடகத்தில் உள்ளதுபோல் பம்பலூடகத்தில் பரப்புவதில் மக்கள் முனைப்பாக இல்லாமல் வெறுமனே இணக்கமான கருவிகளாக மட்டும் உள்ளார்கள். சுட்டன்கள் (“meme”) என்பவை செய்திப் பம்பலமைப்புக்களுக்கு நல்லவோர் எடுத்துக்காட்டாகும்.

பம்பி என்னும் கிளவியின் மாற்றுச்சொற்கள் உருச்காப்பு என்பவர் கூறியுள்ள “ஊடகப் பம்பி" ("media virus") அல்லது “பம்பலூடகம்" ("viral media") என்பனவாகும்; அவர் அவற்றை ஊடுருவிகள் (Trojan horses) என்றழைக்கிறார்; ஏனெனில் பாமரமக்கள் அவற்றின் கவர்ச்சியான உள்ளடக்கங்களுக்கு ஏமாந்துபோய் அவற்றின் மறைமுக நோக்கங்களைத் தங்களையறியாமலேயே பரப்பிவிடுகிறார்கள் என்கின்றார்.[3]:75

மேற்கோள்கள்

[தொகு]
  1. {{cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%C2%B9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&searchhws=yesl%7Ctitle=Search for headword: பம்பு¹-தல்
  2. "Technical Terms:Viral Definition". பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
  3. Jenkins, Henry; Ford, Sam; Green, Joshua (2013). Spreadable Media: Creating Value and Meaning in a Networked Culture. New York: NYU Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8147-4350-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பல்&oldid=3585734" இலிருந்து மீள்விக்கப்பட்டது