பன்றிக்களை
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பன்றிக்களை[சான்று தேவை] (Amaranthus), திரளாக அமரந்த் (amaranth) எனப்படுகிறது.[1] பன்றிக்களை என்பது உலகெலாம் பரவிய ஆண்டுத் தாவரமாகவோ பருவத் தாவரமாகவோ அமைகிறது. சில பன்றிக்களை இனங்கள் கீரையாகவோ போலிக் கூலங்களாகவோ அழகு தாவரங்களாகவோ பயிரிடப்படுகின்றன. பெரும்பாலான பன்றிக்களை இனங்கள் கோடைப் பருவக் களைகளாக அமைகின்றன.[2] கோடையில் அல்லது இலையுதிர் காலத்தில் பூனை மென்மயிர் போன்ற அடர் இதழ்கள் அமைந்த மஞ்சரிகள் பூக்கின்றன.[3] பன்றிக்களை இனங்களின் பூக்களும் இலைகளும் தண்டும் கடல்நீலம் முதல் செஞ்சிவப்பு வரையிலான பல மிளிரும் வேறுபடுகின்றன, இவை கிடைநிலையில் 3 அடி முதல் வண்ணங்களில் 8 அடிவரை வளர்கின்றன. இதன் உருளையான நாரிழை கொண்ட சதைப்பற்றுள்ள தண்டு போலானது (உள்ளீடற்றது). காடிகள் (வரிப்பள்ளங்கள்) அமைந்தது. முதிர்ந்ததும் அதில் சிற்றிலைகள் அமைகின்றன.[4]
அமரந்தசு பேரினத்தில் 75 இனங்கள் அமைகின்றன. இவற்றில் பத்து இனங்கள் இருபாலின வாகும்.ஐவை பத்தும் வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டன. எஞ்சிய 65 இனங்கள் ஒருபாலின வாகும். இவை தாவரவகை இனப்பெருக்கம் உடையனவாகும். இவைனானைத்துக் கண்டங்களிலும் வெப்பத் தாழ்நிலங்களில் இருந்து இமயமலைக் குளிர்வரை எங்கும் பரவி வளர்கின்றன.[5] இந்தப் பேரினத் தாவரங்கள் இதற்கு மிகவும் நெருங்கிய செலோசியா பேரினத்துடன் பல பான்மைகளையும் பயன்பாடுகளையும் பகிர்கின்றன.
விவரிப்பு
[தொகு]பன்றிக்களைப் பேரினத்தில் உள்ள இனங்கள் ஆண்டு அல்லது பருவச் செடிகளாக அமைகின்றன.[4] பூக்கள் மூன்று முதல் ஐந்து புறவிதழ்களும் சூலகங்களும் கொண்டுள்ளன. ஆனால், இதன் குடும்பத்தில் 7 பொலன்மணி கட்டமைப்பு பெரும்பாலும் பரவலாக அமைகிறது.[4] இப்பேரினத்தின் இனங்களில் குழல்கற்றைகள் ஒருமைய வலயங்களைப் பெற்றுள்ளதால் கரிம 4 ஒளிச்சேர்கை வழித்தடக் கரிம நிலைப்படுத்தலைக் கொண்டுள்ளன.[4] இலைகள் முட்டை அல்லது நீள்வட்ட வடிவில் 6.5 செமீ முதல்15 செமீ நீளத்தில் ஈரிணை இலை வரிசையிலோ ஒன்றுவிட்ட இலை வரிசையிலோ அமைகின்றன. என்றாலும் இலைகள் விளிம்பு முழுவதும் சீராகவுள்ள எளிய இலைகளாகும்.[4]
பன்றிக்களை மூல முதன்மை வேருடன் ஆழத்தில் பல நாரிழைத் தூவிகளால் ஆகிய துணை வேர்த்தொகுதியைக் கொண்டுள்ளது.[6] மஞ்சரிகள் பெரிய கதிர் வடிவத்தில் அமைகின்றன; கதிரின் முனையில் இருந்து அச்சுக்குச் செல்லும்போது வண்ணத்திலும் பாலின இயல்பிலும் மாறுபவை. மஞ்சரியின் குஞ்சம் நிமிர்ந்தோ வளைந்தோ ஒவ்வொரு இனத்துக்கும் அகலத்திலும் நீளத்திலும் வேறுபடுகின்றன. பூக்கள் சிறு கூரான புல்லிகளுடனும் முள்வகைப் பூவடிச் சிற்றிலைகளுடனும் ஆரச் சீரொருமை வாய்ந்தனவாக உள்ளன; இவை ஒருபாலினம் அல்லது இருபாலினம் கொண்டமையலாம்].[6] இப்பேரினத்தின் இனங்கள் ஒருபாலினம் உள்ளதாகவோ ( A. hybridus, L. போல) அல்லது இருபாலினம் உள்ளதாகவோ ( A. arenicola, L. போல) அமையலாம்.[6] பழங்கள் குளிகை வடிவத்தில் அமைகின்றன. இவை unilocular pixdio எனப்படுகின்றன. முதிர்ந்ததும் இவை வெடிக்கின்றன.[6] வெடிக்கும்போது இவை விதைகள் அமைந்த கலன்களை சிதறவிடுகின்றன.[6] விதைக்கலனில் உள்ள விதைகள் 1-1.5 மிமீ விட்டமுள்ள வட்ட வடிவானவை. மிளிரும் வழுவழுப்பான விதையுறை உள்ளவை.[6] பூக்குஞ்சங்கள் நட்டு 200 நாட்களில் அறுவடை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு கிராமுக்கு 2000 முதல் 3000 விதைகள் அமைகின்றன.[7]
வகைபாட்டியல்
[தொகு]பன்றிக்களைகள் பேரின மட்டத்திலும் சில இனங்களிலும் கூட, பல்வகைமைப் புறவடிவப் பான்மைகளைக் கொண்டுள்ளன. இது அமரந்தேசியே குடும்படுத்தையும் அக்குடும்பம் காரோபில்லேல்சு தாவரப் பகுப்பையும் சேர்ந்தது.[4] அமரந்தேசியே குடும்பம் தனித்தன்மையானது என்றாலும், ஏழு கண்டங்களிலும் பரவியுள்ள அமரந்த் (பன்றிக்க்களைப்) பேரினத்தின் 75 இனங்கள் தமக்குள்ளே சில தனித்த பான்மைகளைக் கொண்டுள்ளன.[8] இது இப்பேரினத்தின் வகைபாட்டியலைச் சிக்கலானதாக ஆக்குகிறது. வகைபாட்டு அறிஞர்கள் இப்பேரினம் வகைப்படுத்த அரியது எனவும் கலப்பினமான த்ன்மை கொண்டது எனவும் கருதுகின்றனர்.[9]
இனங்கள்
[தொகு]பன்றிக்களைப் பேரினத்தில் பின்வரும் இனங்கள் அமைகின்றன:[10][11]
- Amaranthus acanthochiton – பச்சைக் காடியின
- Amaranthus acutilobus – a synonym of Amaranthus viridis[10]
- Amaranthus albus – வெண்பன்றிக்களை, கவிழ் பன்றிக்களை
- Amaranthus anderssonii
- Amaranthus arenicola – சந்தில் பன்றிக்களை
- Amaranthus australis – தென்புலப் பன்றிக்களை
- Amaranthus bigelovii – பிகிலோ பன்றிக்களை
- Amaranthus blitoides – பாய் பன்றிக்களை, முந்துருத்தும் பன்றிக்களை
- Amaranthus blitum – ஊதாநிற பன்றிக்களை
- Amaranthus brownii – பிரவுன் பன்றிக்களை
- Amaranthus californicus – கலிபோர்னியா பன்றிக்களை
- Amaranthus cannabinus – ஓதச் சதுப்புப் பன்றிக்களை
- Amaranthus caudatus – love-lies-bleeding, pendant amaranth, tassel flower, quilete
- Amaranthus chihuahuensis – சில்குவாகுவான் பன்றிக்களை
- Amaranthus crassipes – விரவும் பன்றிக்களை
- Amaranthus crispus – முறுமுறுப்பிலை பன்றிக்களை
- Amaranthus cruentus – ஊதா பன்றிக்களை, rசெம்பன்றிக்களை மெக்சிகோ கூலமணி பன்றிக்களை
- Amaranthus deflexus – பெரிய பழப் பன்றிக்களை
- Amaranthus dubius – ஈரல் பன்றிக்களை, காதாப்பை
- Amaranthus fimbriatus – முனைக்குஞ்ச பன்றிக்களை
- Amaranthus floridanus – புளோரிடா பன்றிக்களை
- Amaranthus furcatus
- Amaranthus graecizans
- Amaranthus grandiflorus
- Amaranthus greggii – கிரெகு பன்றிக்களை
- Amaranthus hybridus – மென் பன்றிக்களை, செம்பன்றிக்களை
- Amaranthus hypochondriacus – வேல்சு இளவரசர் இறகு
- Amaranthus interruptus – ஆத்திரேலியப் பன்றிக்களை
- Amaranthus minimus
- Amaranthus mitchellii
- Amaranthus muricatus – ஆப்பிரிக்கப் பன்றிக்களை
- Amaranthus obcordatus – பெக்கோசு பெயர் பன்றிக்களை
- Amaranthus palmeri – பல்மர் பன்றிக்களை
- Amaranthus polygonoides –வெப்ப மண்டலப் பன்றிக்களை
- Amaranthus powellii – பச்சைப் பன்றிக்களை, போவெல் பன்றிக்களை
- Amaranthus pringlei – பிரிங்கிள் பன்றிக்களை
- Amaranthus pumilus – நெய்தற் பன்றிக்களை
- Amaranthus retroflexus – செவ்வேர் பன்றிக்களை, இயல்பு பன்றிக்களை
- Amaranthus saradhiana
- Amaranthus scleranthoides – மாறாக, Amaranthus sclerantoides
- Amaranthus scleropoides – என்பு பூவடி சிற்றிலை பன்றிக்களை
- Amaranthus spinosus – முட் பன்றிக்களை, ஊசிப் பன்றிக்களை, கூர்முள் பன்றிக்களை
- Amaranthus standleyanus
- Amaranthus thunbergii – துங்பெர்கு பன்றிக்களை
- Amaranthus torreyi – தாரி பன்றிக்களை
- Amaranthus tricolorயோசாப்பு மேலுறை
- Amaranthus tuberculatus – முருட்டுப் பழ பன்றிக்களை, உயர நீர்ச்சணல்
- Amaranthus viridis – மென்பன்றிக்களை, பசும்பன்றிக்களை
- Amaranthus watsonii – வாட்சன் பன்றிக்களை
- Amaranthus wrightii – உரைட் பன்றிக்களை
ஊட்டச்சத்து
[தொகு]உணவாற்றல் | 1554 கிசூ (371 கலோரி) |
---|---|
65.25 g | |
மாப்பொருள் | 57.27 g |
சீனி | 1.69 g |
நார்ப்பொருள் | 6.7 g |
7.02 g | |
நிறைவுற்றது | 1.459 g |
ஒற்றைநிறைவுறாதது | 1.685 g |
பல்நிறைவுறாதது | 2.778 g |
13.56 g | |
டிரிப்டோபான் | 0.181 g |
திரியோனின் | 0.558 g |
ஐசோலியூசின் | 0.582 g |
லியூசின் | 0.879 g |
லைசின் | 0.747 g |
மெத்தியோனின் | 0.226 g |
சிஸ்டைன் | 0.191 g |
பினைல்அலனின் | 0.542 g |
டைரோசின் | 0.329 g |
வாலின் | 0.679 g |
ஆர்ஜினின் | 1.060 g |
ஹிஸ்டிடின் | 0.389 g |
அலனைன் | 0.799 g |
அஸ்பார்டிக் அமிலம் | 1.261 g |
குளூட்டாமிக் காடி | 2.259 g |
கிளைசின் | 1.636 g |
புரோலின் | 0.698 g |
செரைன் | 1.148 g |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (10%) 0.116 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (17%) 0.2 மிகி |
நியாசின் (B3) | (6%) 0.923 மிகி |
(29%) 1.457 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (45%) 0.591 மிகி |
இலைக்காடி (B9) | (21%) 82 மைகி |
உயிர்ச்சத்து சி | (5%) 4.2 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (8%) 1.19 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (16%) 159 மிகி |
இரும்பு | (59%) 7.61 மிகி |
மக்னீசியம் | (70%) 248 மிகி |
மாங்கனீசு | (159%) 3.333 மிகி |
பாசுபரசு | (80%) 557 மிகி |
பொட்டாசியம் | (11%) 508 மிகி |
சோடியம் | (0%) 4 மிகி |
துத்தநாகம் | (30%) 2.87 மிகி |
நீர் | 11.3 g |
Selenium | 18.7 mcg |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
மேலும் காண்க
[தொகு]- பண்டைய கூலங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amaranthaceae | plant family". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2015-06-02.
- ↑ Bensch (2003). "Interference of redroot pigweed (Amaranthus retroflexus), Palmer amaranth (A. palmeri), and common waterhemp (A. rudis) in soybean". Weed Science 51: 37–43. doi:10.1614/0043-1745(2003)051[0037:IORPAR]2.0.CO;2.
- ↑ RHS A–Z encyclopedia of garden plants. Dorling Kindersley. 2008. p. 1136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405332965.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Schmid, Rudolf; Judd, Walter S.; Campbell, Christopher S.; Kellogg, Elizabeth A.; Stevens, Peter F.; Donoghue, Michael J.; Judd, Walter S.; Nickrent, Daniel L.; Robertson, Kenneth R.; Abbott, J. Richard; Campbell, Christopher S.; Carlsward, Barbara S.; Donoghue, Michael J.; Kellogg, Elizabeth A. (1 October 2007). Plant Systematics: A Phylogenetic Approach. Vol. 56. Wiley. p. 1316. எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/25065934. பன்னாட்டுத் தர தொடர் எண் 0040-0262.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ Steckel, Lawrence E. (April 2007). "The Dioecious Amaranthus spp.: Here to Stay" (in en). Weed Technology 21 (2): 567–570. doi:10.1614/WT-06-045.1.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 Arreguez, Guillermo A.; Martínez, Jorge G.; Ponessa, Graciela (September 2013). "Amaranthus hybridus L. ssp. hybridus in an archaeological site from the initial mid-Holocene in the Southern Argentinian Puna". Quaternary International 307: 81–85. doi:10.1016/j.quaint.2013.02.035.
- ↑ Tucker, Jonathan B. (January 1986). "Amaranth: The Once and Future Crop". BioScience 36 (1): 9–13. doi:10.2307/1309789. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-3568. https://archive.org/details/sim_bioscience_1986-01_36_1/page/9.
- ↑ Stetter, Markus G.; Schmid, Karl J (2016-11-03). Analysis of phylogenetic relationships and genome size evolution of the Amaranthus genus using GBS indicates the ancestors of an ancient crop. doi:10.1101/085472.
- ↑ Costea, Mihai; DeMason, Darleen A. (2001). "Stem Morphology and Anatomy in Amaranthus L. (Amaranthaceae), Taxonomic Significance". Journal of the Torrey Botanical Society 128 (3): 254. doi:10.2307/3088717. பன்னாட்டுத் தர தொடர் எண்:1095-5674.
- ↑ 10.0 10.1 "Search results — The Plant List". theplantlist.org.
- ↑ Kumar, Thaliyangal Rajesh; Vishnu, Walsan Kalarikkal; Kumar, Venugopalan Nair Saradamma Anil; Arya, Sindu (2019-05-13). "Amaranthus saradhiana (Amaranthaceae)—a new species from southern Western Ghats of Kerala, India" (in en). Phytotaxa 403 (3): 230–238. doi:10.11646/phytotaxa.403.3.7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1179-3163.
மேலும் படிக்க
[தொகு]- Howard, Brian Clark. "Amaranth: Another Ancient Wonder Food, But Who Will Eat It?". National Geographic Online, August 12, 2013.
- Fanton M., Fanton J. Amaranth The Seed Savers' Handbook. (1993)