பன்னீர்க்குளம் (விளையாட்டு)
Appearance
பன்னீர்க்குளம் என்பது பனிநீர் பெய்யும் குளம். காலை வேளையில் பனி பொழிந்துகொண்டிருக்கும். அப்போது குளத்திலுள்ள நீர் வெதுவெதுப்பாக இருக்கும். அதில் நீராடினால் உடலுக்கு நல்லது. இதனை உணர்த்தும் கருத்துக்கொண்ட பாடலோடு விளையாடப்படும் விளையாட்டு இது.
ஆடும் முறை
[தொகு]பட்டவர் நிற்பார். பழமேறியவர்கள் ஒளிந்துகொள்வர். பட்டவர் அவர்களில் ஒருவரின் பெயரைச் சொல்லி அழைப்பார். அவர் வந்ததும் பின்வரும் உரையாடல் நிகழும்.
- எந்தக் குளத்தில் மூழ்கினாய்
- தயிர்க்குளத்தில்
- வீடெல்லாம் வெண்ணெயாய்ப் போச்சு போ போ
அடுத்தவரை அழைப்பார். பின்வரும் உரையாடல் நிகழும்.
- எந்தக் குளத்தில் மூழ்கினாய்
- பருப்புக் குளத்தில்
- வீடெல்லாம் மஞ்சளாய்ப் போச்சு போ போ
அடுத்தவரை அழைப்பார். உரையாடல் நிகழும்.
- எந்தக் குளத்தில் மூழ்கினாய்
- பன்னீர்க் குளத்தில்
- வா வா
இவற்றையும் பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954