உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னி புல்வெளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னி புல்வெளிகள் (Banni Grasslands Reserve or Banni grasslands), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் கட்ச் பாலைவனத்தின் தெற்கில் அமைந்த உவர் சதுப்பு நிலத்தில் 3,847 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது. இந்தி மொழியில் பன்னி என்பதற்கு சிறு காடு என்று பொருளாகும். பன்னி புல்வெளிகளை பாதுகாக்கப்பட்ட நிலமாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. [1][2]இப்பன்னி புல்வெளிகளில் முன்னர் சிந்தி மொழி பேசும் நாடோடி மக்களான மல்தாரி, ஹிங்கோரா, ஜாட் மற்றும் மூத்தாவா மக்கள் கால்நடைகள் மேய்த்தனர். தற்போது பன்னி புல்வெளி நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாவரங்கள்

[தொகு]
1819 நிலநடுக்கத்தால் உருவான பன்னி பிரதேசம்

மழைப் பொழிவைப் பொறுத்து பன்னி பிரதேசத்தின் வளரும் தாவரங்களின் வகைகள் மாறுபடுகிறது. இருப்பினும் குட்டைப் புல்வெளிகள் மற்றும் புதர்கள் ஆண்டுதோறும் காணப்படுகிறது.

காட்டுயிர்கள்

[தொகு]

பன்னி புல்வெளிகளில் மான் இனங்கள்,[3]காட்டுப் பன்றிகள், தங்க நிற நரி, ஆசிய காட்டுப் பூனை, பாலைவன சிவப்பு நரிகள் அதிகம் காணப்படுகிறது. இதனருகில் உள்ள கட்ச் பாலைவனத்தில் காட்டுக் கழுதை சரணாலயம் உள்ளது.[4][5][6]நல்ல மழைக்காலங்களில் பன்னி புல்வெளிகளில் நாரைகள் மற்றும் கொக்குகள் போன்ற வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Centre approves working plan for Banni grassland; by Shubhlakshmi Shukla; 22 October 2009; The Indian Express Newspaper
  2. State takes 54 years to prepare working plan for Banni grasslands; by Shubhlakshmi Shukla; 21 September 2009; The Indian Express Newspaper
  3. Kutch to have chinkara conservation centre; 6 May 2009; Times of India
  4. Bounties of a bleak landscape – The Little Rann of Kutch is hot, dry and salty, but it has rich biodiversity.[usurped!] by DIONNE BUNSHA; Volume 23 – Issue 08 :: 22 Apr – 5 May 2006; Frontline Magazine; India's National Magazine from the publishers of THE HINDU
  5. Wild asses population rises by 4% (2009);TNN; 11 April 2009; Times of India
  6. Wild Ass sighted in Rajasthan villages along Gujarat; by Sunny Sebastian; 13 September 2009; The Hindu, India's National Newspaper
  7. "Ecorestoration of Banni Grassland; First Annual Technical Report; December, 1998; Published by Gujarat Ecology Commission; GERI Campus, Race Course Road, Vadodara – 390 007. INDIA" (PDF). Archived from the original (PDF) on 6 October 2011. பார்க்கப்பட்ட நாள் 23 December 2009.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னி_புல்வெளிகள்&oldid=4090256" இலிருந்து மீள்விக்கப்பட்டது