உள்ளடக்கத்துக்குச் செல்

பனை ஓலை விசிறித்தொண்டை ஓணான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனை ஓலை விசிறித்தொண்டை ஓணான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சீ. விசிரி
இருசொற் பெயரீடு
சீதானா விசிரி
தீபக் 2016

பனை ஓலை விசிறித்தொண்டை ஓணான் (Sitana visiri-சீதானா விசிரி) என்பது சீதானா பேரினத்தினைச் சார்ந்த அகாமிடே பல்லி குடும்பச் சிற்றினமாகும். இது இந்தியாவில் தமிழ்நாடு பிராந்தியத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2][3]

சொற்பிறப்பியல்

[தொகு]

சீதானா விசிரியின் சிற்றினப் பெயரானது பனை இலையில் கையால் தயாரிக்கப்படும் விசிறியைக் குறிக்கும். இந்த ஓணான் காணப்படும் பகுதியின் மொழியான தமிழ் மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இந்தச் சிற்றினத்தின் அசைதாடி பனை ஓலை விசிறியை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது.[2]

விளக்கம்

[தொகு]

பரந்த நீல நிறத்தால் சூழப்பட்ட ஒரு பெரிய ஆரஞ்சு புள்ளியுடன் வலுவான அலைவடிவ அசை தாடியினைக் கொண்டு இப்பேரினத்தின் பிற சிற்றினங்களிலிருந்து வேறுபடுகிறது.[4] சீ. விசிரியின் அசைதாடி உடற்பகுதியில் 56% வரை நீண்டுள்ளது. இது சீதானா பாண்டிசெரியானா, சீ. பாகிரி மற்றும் சீ. தேவகை ஆகியவற்றை விட விகிதாசார அளவில் பெரியது.[4] சீ. விசிரி, சீ. பாண்டிசெரியானா உட்கோட்டு இனங்களிலிருந்து நீளத்தின் அடிப்படையில் வேறுபடுகிறது.[4]

சூழலியல்

[தொகு]

இந்தியாவில் தமிழ்நாடு பகுதியில் காணப்படும் சீதானா விசிரி, கடலோர மணல் குன்றுகள், புல்வெளிகள், சமவெளிகள் மற்றும் சீமைக் கருவேலம் காணப்படும் பகுதிகளில் அதிக அளவில் வாழ்கிறது.[2] சீ. விசிரி, யூட்ரோபிசு கரினாட்டா, யூட்ரோபசு பிப்ரோனி மற்றும் கலோட்சு வெர்சிகலர் ஆகியவற்றுடன் ஒத்த பகுதிகளில் காணப்படுகிறது.[2] சி. விரிசி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். இவை இலையுதிர்காலத்தில் (செப்டம்பர் மற்றும் அக்டோபர்) இனப்பெருக்கம் செய்யும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Narayanan, S. (2021). "Sitana visiri". IUCN Red List of Threatened Species 2021: e.T127902091A127935391. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127902091A127935391.en. https://www.iucnredlist.org/species/127902091/127935391. பார்த்த நாள்: 10 June 2024. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Sitana visiri at the Reptarium.cz Reptile Database
  3. Deepak, V.; Khandekar, Akshay; Varma, Sandeep; Chaitanya, R. (20 July 2016). "Description of a new species of Sitana Cuvier, 1829 from southern India". Zootaxa 4139 (2): 167. doi:10.11646/zootaxa.4139.2.2. 
  4. 4.0 4.1 4.2 Deepak, V.; Giri, Varad B.; Asif, Mohammad; Dutta, Sushil Kumar; Vyas, Raju; Zambre, Amod M.; Bhosale, Harshal; Karanth, K. Praveen (9 March 2016). "Systematics and phylogeny of Sitana (Reptilia: Agamidae) of Peninsular India, with the description of one new genus and five new species" (in en). Contributions to Zoology 85 (1): 67–111. doi:10.1163/18759866-08501004. பன்னாட்டுத் தர தொடர் எண்:1875-9866. https://brill.com/view/journals/ctoz/85/1/article-p67_4.xml?language=en.