பனியாற்று ஏரி
Appearance
பனியாற்று ஏரி (glacial lake) என்பது பனியாறு (glacier) உருகியதால் ஏற்பட்ட ஏரியைக் குறிக்கும். இதன் தளத்தில் காணப்படும் உடைந்த கனிமங்கள் அதிக அளவிலான அல்காக்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவதால், சில சமயங்களில், பனியாற்று ஏரிகள் பச்சை நிறம் கொண்டனவாகக் காணப்படுகின்றன. பின் நோக்கிச் செல்லும் பனியாறுகள் பெரும்பாலும் குன்றுகளுக்கு இடையில் அமைந்துள்ள பள்ளமான பகுதிகளில் பெருமளவு பனிக்கட்டிப் படிவுகளை விட்டுச் செல்கின்றன. உறைபனிக்கால முடிவில் இவை உருகி ஏரிகளாயின. இவ்வேரிகள் பொதுவாக அரைமுட்டை வடிவக் குன்றுகளால் (drumlins) சூழப்பட்டு இருப்பதுடன், பனியாறு இருந்தமைக்கான சான்றுகளான பனியாற்றுப் படிவுகள் (moraines), பள்ளத்தாக்கு வரப்புகள் (eskers), கீறல்கள் (striations) போன்ற அரிப்புக்குறிகள் (erosional features) என்பனவும் காணப்படுகின்றன.