பந்து விளையாட்டு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பந்து விளையாட்டுக்கள், (Ball games, ball sports) பந்தை மையப்படுத்தி விளையாடப்படும் ஆட்டம் அல்லது உடல் திறன் விளையாட்டு ஆகும். இவற்றில் சங்கக் கால்பந்து (சாக்கர்), அடிப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், அமெரிக்கக் காற்பந்தாட்டம் போன்றவை அடங்கும். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற துவக்கங்களை உடைய இந்த விளையாட்டுக்கள் பல்வேறுபட்ட வரலாறுகள், சட்டங்கள் கொண்டுள்ளன. இவற்றை பல விரிவான விதங்களில் வகைப்படுத்தலாம்:
- மட்டை - பந்து விளையாட்டுக்கள் : அடிப்பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்றவை.
- பின்னல்வலை மட்டை - பந்து விளையாட்டுக்கள் : டென்னிசு, சுவர்ப்பந்து, இறகுப்பந்தாட்டம் போன்றவை.
- கையால் பந்தடிக்கும் விளையாட்டுக்கள்: பல்வேறு எறிபந்தாட்டங்கள், தெறிப்பு எறிபந்தாட்டம் மற்றும் நான்கு சதுக்கங்கள் போன்றவை.
- இலக்கு விளையாட்டுக்கள் : கூடைப்பந்தாட்டம், அனைத்து வகையான காற்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம் போன்றவை.
- வலை விளையாட்டுக்கள்: கைப்பந்தாட்டம், செபாக் டக்ரோ போன்றவை.
- துல்லிய விளையாட்டுக்கள் : பௌலிங், புற்றரை பௌலிங், குரோக்கெட்டு, குழிப்பந்தாட்டம், மற்றும் தடி விளையாட்டுக்களான மேடைக் கோற்பந்தாட்டம், பில்லியர்ட்சு போன்றவை.