பந்தனா
பந்தனா | |
---|---|
கோத் பூஜை நடைபெறும் இடத்தில் கால்நடைகளுடன் பாகல் | |
கடைபிடிப்போர் | இந்து & ஆதிவாசி விவசாயி |
வகை | கலாச்சாரம் |
முக்கியத்துவம் | கால்நடைகளை வணங்குதல் |
கொண்டாட்டங்கள் | மதசார்பு நிகழ்வுகள் |
அனுசரிப்புகள் |
|
தொடக்கம் | அக்டோபர் |
முடிவு | நவம்பர் |
நாள் | கார்த்திகை அம்மாவாசை |
நிகழ்வு | வருடந்தோறும் |
பந்த்னா (Bāndnā, இந்தி: बांदना) என்பது விவசாயம் சார்ந்த பண்டிகையாகும். இதில் வீட்டுக் கால்நடைகள் மற்றும் விவசாய உபகரணங்கள் வணங்கப்படுகின்றன.[1] சார்கண்டு, மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பண்டிகை பெரும்பாலும் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்து நாட்காட்டியின்படி ஆண்டுதோறும் கார்த்திகை மாத அமாவாசையில் கொண்டாடப்படுகிறது.
கண்ணோட்டம்
[தொகு]பந்தனா என்பது இப்பகுதியின் விவசாயச் சமூகங்களால் விதைக்கப்பட்ட நெல் விதைகளின் கொண்டாட்டமாகும். பகல், ராஜுார், கும்ஹர், பௌரி, பாக்டி, யாதவர், குர்மி, கல்வார், அஹிர், கொய்ரி, கோரை மற்றும் கிழக்கிந்தியாவின் பல சமூகங்கள் இந்த விழாவைக் கொண்டாடுகின்றன.[2] கால்நடைகளை வழிபடும் பல இந்தியப் பண்டிகைகளில் இதுவும் ஒன்று.[3]
சடங்கு
[தொகு]பந்தனா என்பது ஏழு நாள் திருவிழா ஆகும். திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் சுமான் ஆகும். நான்காம் நாள் கோத் பூஜை நாளாகும். ஐந்தாம் நாள் கோரியா பூஜையும் ஆறாம் நாள் போரோட் குந்தானும் அனுசரிக்கப்படுகிறது. ஏழாவது நாள் புத்தி பந்தனா எனப்படுகிறது. முதல் மூன்று நாட்களின் சடங்குகள் சில சமயங்களில் கோத் பூஜைக்கு முன் ஐந்து நாட்கள் வரை நீட்டிக்கப்படும்.
நம்பிக்கை
[தொகு]சிவன் (புர்ஹா பாபா) மனிதர்களைப் படைத்தார், சிவன் அவர்களுக்கு உணவை வழங்கினார். காலப்போக்கில், கணிசமான மக்கள்தொகையாகப் பெருகினர். நிலத்தில் விவசாயம் செய்து தானே உணவை உற்பத்தி செய்யுமாறு சிவன் அறிவுறுத்தினார். இருப்பினும், விவசாயக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் இல்லாமல், விவசாயிகள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். தீர்வு காணுமாறு இறைவனிடம் மன்றாடினார்கள். சிவன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு கால்நடைகளை வழங்கினார். ஆரம்பத்தில், ஆண்களுக்கும் கால்நடைகளுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இருந்தது, ஆனால் காலப்போக்கில், இது மோசமாகி, கால்நடைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன. கால்நடைகள் சிவனிடம் முறையிட்டன. புகாரில் கடுமையான வேலை, நீட்டிக்கப்பட்ட வேலை நேரம், போதிய உணவின்மை, சுகாதாரமற்ற தங்குமிடங்கள், அடித்தல், பொழுதுபோக்கின்மை மற்றும் பங்களிப்புக்கு நன்றியின்மை ஆகியவை அடங்கும். கார்த்திகை அமாவாசை அன்று இரவு இரகசியமாக ஆய்வு செய்வதாகப் பகவான் உறுதியளித்தார். இந்தப் புகாரினை ஆண்கள் அறிந்தனர். இறைவன் வருவதாகக் கூறிய நாளன்று மக்கள் தங்கள் வீடுகளையும் மாட்டுத் தொழுவங்களையும் சுத்தம் செய்தனர். மேலும் அமாவாசை நாளில் கால்நடைகளை நன்றாகக் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகள் மற்றும் நெற்றியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் தடவினர். கால்நடைகளுக்குத் தீவனம் வழங்கினர். கோகால் (மாட்டுக்கொட்டகை) அகல் விளக்கு (மண் விளக்குகள்) ஏற்றினர். மாட்டுத் தொழுவத்தின் நுழைவாயிலின் இருபுறமும் புல் மூட்டைகளும் போடப்பட்டனர். கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதைக் குறிக்கும் வகையில் கூரையின் மீது சொஹ்ராய் புல் வைக்கப்பட்டது. இரண்டாவது நாளில், சிவன் மக்கள் கரையாவை வணங்குவதைக் கண்டார். அவர்களின் மரியாதைக்குரிய பலி உட்பட. மூன்றாவது நாள், கால்நடைகள் மக்களுடன் நடனமாடுவதைக் கவனித்தார். பாடல்களும் இசையும் காற்றை அரவணைப்பு, உற்சாகம் மற்றும் இணக்கத்துடன் நிரப்பின. திரும்பி வரும் வழியில், மேய்ச்சல் நிலத்தில் கால்நடைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். இதனால் புகாரினை இறைவன் கருத்தில் கொள்ளவில்லை. மீண்டும் கொடுமைகள் தொடர்ந்ததால் அடுத்த பருவத்தில், கால்நடைகள் கஷ்டங்களைப் பற்றி மீண்டும் புகார் செய்தன. அதே நாளில் இதனைப் பரிசோதிக்கச் சிவன் நினைத்தார். கால்நடைகள் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருப்பதைக் காண இறைவன் ரகசியமாக வரத் தீர்மானித்தார். எனவே அப்போதிருந்து, இந்தப் பாரம்பரியம் தொடர்ந்தது பந்த்னா பராப் என்று கொண்டாடப்படுகிறது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumar, Shaktipada (1 January 2019). "Tracing the Cultural Tradition of Jangalmahal through Bandna Parab and Jawa-Karam Parab" (in en). Mahatma Gandhi Central University Journal of Social Sciences. https://www.academia.edu/48918700.
- ↑ . 1956.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - ↑ . 26 October 2019.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help)
மேலும் படிக்க
[தொகு]- Kumar, Shaktipada. "Tracing the Cultural Tradition of Jangalmahal through Bandna Parab and Jawa-Karam Parab" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
- Behera, Dr. Lipika (2017). "Major Festivals of Mayurbhanj". The Researchers' International Research Journal 3: 37–38. பன்னாட்டுத் தர தொடர் எண்:2455-1503. https://theresearchers.asia/Papers/Vol-III,%20Issue-II-2017/Major%20Festivals%20of%20Mayurbhanj.pdf.
- General, India Office of the Registrar (1967). Census of India, 1961 (in ஆங்கிலம்). Manager of Publications.