உள்ளடக்கத்துக்குச் செல்

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (இந்திய அரசியலமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி 3ல்[1], பிரிவு 29 மற்றும் 30ன் படி 6 அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 29 மற்றும் 30 சமயச் சிறுபான்மை மக்களும் மற்றும் மொழிவாரிச் சிறுபான்மை மக்களும் தங்களது பண்பாடு மற்றும் கல்வியைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்கு உத்தரவாதம் வழங்குகிறது.[2][3]

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 29

[தொகு]

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 29, மக்களின் பண்பாடு மற்றும் கல்வி குறித்தான அடிப்படை உரிமைகள் குறித்து பேசுகிறது.

  • அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 29 (1):, இந்தியாவின் சிறுபான்மை மக்கள் பின்பற்றும் சமயம், பண்பாடு, மொழி மற்றும் எழுத்து முறையை பாதுகாக்கும் உரிமையை வழங்குகிறது.
  • சட்டப் பிரிவு 29 (2): இனம், மதம், சாதி, மொழி அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நபருக்கும் தன்னால் பராமரிக்கப்படும் அல்லது அதிலிருந்து உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கையை அரசு மறுக்கக் கூடாது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 30

[தொகு]

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 30, சமயம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பதற்கான உரிமையை வழங்குகிறது.

  • சட்டப் பிரிவு 30 (1): அனைத்து மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கும் அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் உரிமை வழங்குகிறது.

சட்டப் பிரிவு 30(2): கல்வி நிறுவனங்களுக்கு உதவி வழங்கும் போது, மதம் அல்லது மொழி அடிப்படையில் சிறுபான்மையினரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்ற அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்திற்கும் அரசு பாகுபாடு காட்டக் கூடாது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]