உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டான், பாரமுல்லா

ஆள்கூறுகள்: 34°09′36″N 74°33′22″E / 34.160°N 74.556°E / 34.160; 74.556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டான்
பட்டான் is located in ஜம்மு காஷ்மீர்
பட்டான்
பட்டான்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பட்டான் நகரத்தின் அமைவிடம்
பட்டான் is located in இந்தியா
பட்டான்
பட்டான்
பட்டான் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°09′36″N 74°33′22″E / 34.160°N 74.556°E / 34.160; 74.556
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்பாரமுல்லா
வருவாய் வட்டம்பட்டான்
பரப்பளவு
 • மொத்தம்0.8 km2 (0.3 sq mi)
ஏற்றம்
1,553 m (5,095 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்19,538
 • அடர்த்தி24,000/km2 (63,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகாசுமீரி மொழி, உருது, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
193121
சங்கர கௌரீசுவரர் கோயில், பட்டான்

பட்டான் (Pattan), இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1553 மீட்டர் உயரத்தில் அமைந்த இவ்வூரின் மக்கள் தொகை 16,409. இந்நகரத்தில் காசுமீரி மொழி, உருது, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது. பட்டான் நகரம் ஒரு வரலாற்றுக் கால தலைமையிடமாக விளங்கியது. இங்கு பண்டைய சங்கர கௌரீசுவரர் கோயில் உள்ளது.

வரலாறு

[தொகு]

உத்பால வம்சத்தின் காஷ்மீர் மன்னர் அவந்தி வர்மனின் மகன் சங்கரவர்மன் 9ஆம் நூற்றாண்டில், பாரஸ்பூர் நகரத்தின் கட்டிடப் பொருட்களைக் கொண்டு பட்டான் நகரத்தை நிறுவினார் என கல்கணர் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமஸ்கிருத நூல் கூறுகிறது. மேலும் மன்னர் சங்கரவர்மன் பட்டானில் சங்கர கௌரீஸ்வர கோயிலை நிறுவினார்.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 13 வார்டுகளும் 2,087 வீடுகளும் கொண்ட பட்டான் நகராட்சியின் மக்கள் தொகை 19,538 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 853 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.28% ஆகும். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையெ 2.22% மற்றும் 1.38% ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகயில் இசுலாமியர் 77.67%, இந்துக்கள் 19.14%, சீக்கியர்கள் 2.34% மற்றும் பிறர் 0.86% ஆக உள்ளனர்.[1]

பட்டான் தொடருந்து நிலையம்

[தொகு]

பட்டான் தொடருந்து நிலையம், பாரமுல்லா மற்றும் சிறீநகருடன் இணைக்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டான்,_பாரமுல்லா&oldid=4046062" இலிருந்து மீள்விக்கப்பட்டது