உள்ளடக்கத்துக்குச் செல்

படஞ்சாற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏசர் படஞ்சாற்றி, 2012

படஞ்சாற்றி (projector) என்பது ஓர் ஒளியியல் சாதனமாகும், இது ஒரு படத்தை (அல்லது நகரும் படங்களை) ஒரு மேற்பரப்பில், பொதுவாக ஒரு படங்காட்டும் திரையில் வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான படங்காட்டிகள் ஒரு சிறிய வில்லை வழியாக ஒளியைப் பிரகாசிப்பதன் மூலம் ஒரு படத்தை உருவாக்குகின்றன, ஆனால் சில புதிய வகைக் கருவியில் சீரொளிகளைப் பயன்படுத்தி படத்தை நேரடியாக வெளிப்படுத்தலாம். மெய்நிகர் விழித்திரை காட்சி அல்லது விழித்திரைப் படங்காட்டி என்பது வெளிப்புறப் படத்தினைக் காட்டும் திரையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக விழித்திரையில் நேரடியாக ஒரு படத்தைக் காண்பிக்கும்.

இன்று பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான வகைப் படங்காட்டிகள் நிகழ்படப் படங்காட்டிகள் என்று அழைக்கப்படுகிறது. நிகழ்படப் படஞ்சாற்றிகள் என்பது படவில்லைப் படஞ்சாற்றிகள், தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தி போன்றவற்றின் நவீன வடிவமாகும். [1] ஆனால் பழைய அலைமருவிப் படஞ்சாற்றிகள் இன்னும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. புதிய வகைக் கருவிகள், படங்களைக் காட்ட சீரொளி அல்லது ஒளி உமிழ் இருமுனையங்களைப் பயன்படுத்தும் கையடக்கப் படஞ்சாற்றிகள் ஆகும்.

வரலாறு

[தொகு]

படஞ்சாற்றிகள் குறித்தான தெளிவான விளக்கங்களும் ஆதாரங்களும் இல்லை. ஜோசப் நீதம் தனது 1962 ஆம் ஆண்டு "சயன்ஸ் அண்ட் சிவிலைசேசன்" என்ற புத்தகத் தொடரில் சீனாவில் படஞ்சாற்றுதல் இருந்ததாகச் சில உதாரணங்களைக் கூறுகிறார் [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "THE ULTIMATE PROJECTOR BUYING GUIDE". ProjectorScreen.com. Retrieved 27 April 2022.
  2. Needham, Joseph. Science and Civilization in China, vol. IV, part 1: Physics and Physical Technology (PDF). pp. 122–124. Archived from the original (PDF) on 2017-07-03. Retrieved 2016-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படஞ்சாற்றி&oldid=4212959" இலிருந்து மீள்விக்கப்பட்டது