உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சிரி
Panjiri
Panjeeri
பரிமாறப்படும் வெப்பநிலைபாலைவனம்
தொடங்கிய இடம்பாக்கித்தானின் பஞ்சாப்
முக்கிய சேர்பொருட்கள்சுத்தமான கோதுமை மாவு , சர்க்கரை, நெய், உலர் பழங்கள், மூலிகை பசை

பஞ்சிரி ( Panjiri ) என்பது பாக்கித்தான், இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள பஞ்சாப் மாநிலங்களின் பாரம்பரிய பருவகால உணவு வகையாகும்.[1] இந்த உணவு ஊட்டச்சத்து மிக்கது. இது சுத்தமான கோதுமைமாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றோடு மிகுதியான உலர்பழங்கள், மூலிகைப் பொருட்கள் ஆகியவற்றைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் குளிரில் இருந்து காக்கும்விதத்தில் தயாரித்து உண்ணப்படுகிறது. பஞ்சிரி இது குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. இதை உண்பதால் தாய்மார்களுக்கு பால் நன்கு சுரக்கும் என கருதப்பட்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பண்டைய காலத்தில் இருந்து இந்து மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்வந்த பல நூற்றாண்டு காலங்களில் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பொருளுள்ள சடங்காக சீக்கியர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

தேவையான பொருட்கள்

[தொகு]
  • கோதுமை மாவு
  • நெய்
  • சார் மகாஜ்
  • சர்க்கரை
  • வாதுமை
  • தூளாக்கப்பட்ட சமையல் பசை படிகங்கள் (கோண்டா)
  • காட்டுச் சுடர் (கமர்காஸ்)
  • சவுன்ஃ
  • பொரிந்த தாமரை விதைகள் (மாகானி)
  • காரம் விதைகள் (அஜ்வய்ன்)
  • ஏலக்காய் விதைப்பொடி (எலாய்சி)
  • பொடியாக்கப்பட்ட சுக்கு (சாவுந்த்)
  • வாதுமை கொட்டை (அக்கோர்ட்)
  • பிஸ்தா பருப்பு (பிஸ்தா)
  • சர்க்கரை தூள் (பூரா)

சமையல் முறை

[தொகு]
  • கனமான அடிபாகமுள்ள கடாயில் 500 கிராம் நெய்யைக் காய்ச்சவேண்டும்.
  • அதில் பொன்நிறமாகும்வரை உலர்பழங்களை வறுக்கவேண்டும், முதலில் வாதுமை, பின் முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்புகள், பிஸ்தா பருப்புகள், தாமரை விதைகள் ஆகியவற்றை வறுத்து இறுதியாக முலாம்பழ விதைகளை வறுத்து இறுதியில் மிகையான எண்ணெய் வடியுமாறு காகித்த்தில் வறுத்தவற்றை எடுத்துப் போடவேண்டும்.
  • கடாயில் மீதமான நெய்யில் கமர்காசை வறுத்து ஒதுக்கி வைக்கவேண்டும்.
  • அடுத்து மீதமுள்ள நெய்யில் தேங்காய் துண்டுகளை வறுத்து எடுத்து வைக்கவேண்டும்.
  • இப்போது, முலாம்பழ விதைகள் தவிர, மற்ற அனைத்து வறுத்த உலர் பழங்களை அரைக்க வசதியாக ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக உலர் பழங்களை, வறுத்த தேங்காயுடன் கலந்து வைத்து இவைகளை. நன்றாக பொடிசெய்து எட்த்துவைக்கவேண்டும்.
  • மீதமுள்ள நெய்யை காய்ச்சி, அரைத்துவைத்துள்ள உலர்பழப் பொடிகளை கொட்டி பொன்நினிறமாக ஆகும்வரை மிதமான வெப்பத்தில் வறுத்து எடுத்து வைக்கவேண்டும்.
  • தீயை குறைத்து, தூள் பசை படிகங்களை பொறியுமளவு கிளறி வறுக்கவேண்டும்
  • பின் அதில் சாவுந்த் பொடி மற்றும் அஜ்வான் ஆகியவற்றை அனைத்தையும்வறுத்த மாவுடன் நன்கு கலக்கவேண்டும்.
  • தீயை அணைத்து கலவையை 5–10 நிமிடங்கள் அதில்புழுங்கவக்கவேண்டும்.
  • இப்போது இதில் உலர்பழங்கள், மகாஜ், சர்கரை, கமர்காஸ் ஆகியவற்றை இவற்றுடன்கலந்து ஒரு தா்பாளத்தில் கொட்டி குளிர்விக்கவேண்டும்.
  • குளிர்வித்த இந்த உணவை காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் இட்டு சேமிக்கவேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சிரி&oldid=2743426" இலிருந்து மீள்விக்கப்பட்டது