பஞ்சாக்கர மாலை
Appearance
பஞ்சாக்கர மாலை [1] என்பது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் என்பவர் இயற்றிய நூல்களில் ஒன்று. இது 60 வெண்பாக்களால் ஆன ஒரு சிறு நூல். [2]
இந்த நூல் தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், சீவன்-முத்தர் பூசைக்-கிரமம் - என்று மூன்று பகுப்புகளைக் கொண்டுள்ளது.
நல்ல நடை
- கல்லேன் பிற நூல்கள் காழியர்-கோன் பாடல் அல்லால்
- சொல்லேன் சுரரைத் தொழ நினையேன் - நல்ல சிறு
- செஞ் சதங்கை கொஞ்சு தண்டைச் சிற்றடிகள் பாக எழுத்
- தஞ் சதங்கை ஆம் அலகம் ஆம். [4]
கண்ணுடைய வள்ளலைத் துதிக்கும் பாடல்
- காழி-நகர் வாழி கவுணியர்-கோன் தாள் வாழி
- வாழி அருள் கண்ணுடைய வள்ளல் தான் - ஏழிசையின்
- தெய்வத் தமிழ்ப் பாடல் வாழி திருநெறியாம்
- சைவத்தவர் வாழி தான். [5]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 144.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ 1932-ல் இந்த நூல் உரையுடன் 'சித்தாந்தம்' என்னும் இதழில் 47 முதல் 64 வரை உள்ள பக்கங்களில் சோமசுந்தர தேசிகர் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது.
- ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
- ↑ விநாயகர் வணக்கப் பாடல்
- ↑ உரை முடிவில் உள்ள பாடல்