பஜாஜ் ஆட்டோ
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவனர்(கள்) | ஜம்னாலால் பஜாஜ் |
தலைமையகம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
முதன்மை நபர்கள் | இராஜீவ் பஜாஜ், தலைவர், நிர்வாக இயக்குநர் & முதன்மை செயல் அலுவலர்) |
தொழில்துறை | தானுந்துத் தொழிற்றுறை |
உற்பத்திகள் | இருசக்கர விசையுந்துகள், மூன்று சக்கர தானிகள் |
உற்பத்தி வெளியீடு | ![]() |
வருமானம் | ▲ ₹46,306 கோடி (ஐஅ$5.3 பில்லியன்) (FY2024)[1] |
இயக்க வருமானம் | ▲ ₹10,040 கோடி (ஐஅ$1.1 பில்லியன்) (FY2024)[1] |
நிகர வருமானம் | ▲ ₹7,708 கோடி (ஐஅ$880 மில்லியன்) (FY2024)[1] |
மொத்தச் சொத்துகள் | ▲ ₹39,344 கோடி (ஐஅ$4.5 பில்லியன்) (FY2024)[1] |
மொத்த பங்குத்தொகை | ▼ ₹28,962 கோடி (ஐஅ$3.3 பில்லியன்) (FY2024)[1] |
பணியாளர் | 8,826 (March 2024)[1] |
தாய் நிறுவனம் | பஜாஜ் குழுமம் |
இணையத்தளம் | bajajauto.com globalbajaj.com |
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (Bajaj Auto Limited) என்பது புனேயைத் தளமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும்.[2] இது இரு சக்கர விசையுந்து (Motorcycles), குதியுந்து (Scooters) மற்றும் மூன்று சக்கர தானிகள் (Autorickshaws) ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது பஜாஜ் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது 1940களில் ராஜஸ்தானில் ஜம்னாலால் பஜாஜ் (1889-1942) என்பவரால் நிறுவப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது உலகின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் மற்றும் இந்தியாவில் இரண்டாவது பெரிய மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியாளர் ஆகும். இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர் ஆகும். 2020 ஆம் ஆண்டு திசம்பரில், பஜாஜ் ஆட்டோ 1 டிரில்லியன் டாலர் (11 அமெரிக்க டாலர்) சந்தை மூலதனத்தைக் கடந்து உலகின் மிக மதிப்புமிக்க இரு சக்கர வாகன நிறுவனமாக மாறியது.
வரலாறு
[தொகு]
பஜாஜ் ஆட்டோ 29 நவம்பர் 1945 அன்று எம்/எஸ் பஜாஜ் டிரேடிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என நிறுவப்பட்டது. இது தொடக்கத்தில் இந்தியாவில் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தது. 1959 ஆம் ஆண்டில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை இந்திய அரசிடமிருந்து பெற்றது. இந்தியாவில் வெஸ்பா குதியுந்துகளை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை பியாஜியோவிடம பெற்றது. இந்நிறுவனம் 1960-ஆம் ஆண்டில் ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாறியது.
1986 ஆம் ஆண்டில் இரு சக்கர விசையுந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நிறுவனம் தனது நிறுவனப் பெயரை ஒரு குதியுந்து நிறுவனத்திடமிருந்து பெற்று உற்பத்தியாளரிடமிருந்து இரு சக்கர வாகன உற்பத்தியாளராக மாற்றியது.[3]
1984 ஆம் ஆண்டில், பஜாஜ் ஆட்டோ கவாசாகி நிறுவனத்துடன் ஒரு தொழில்நுட்ப உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் உள்ளூர் சந்தையில் மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை விரிவுபடுத்த இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற முடிந்தது.[4]
2000களின் முற்பகுதியில், பஜாஜ் ஆட்டோ டெம்போ ஃபிரோடியா நிறுவனத்திடம் ஒரு கட்டுப்பாட்டு பணயத்தொகையை செலுத்தி வாங்கி, அதற்கு "பஜாஜ் டெம்போ" என்று மறுபெயரிட்டது. ஜெர்மனியின் டைம்லர்-பென்ஸ் பஜாஜ் டெம்போவின் 16% பங்குகளை வைத்திருந்தது, ஆனால் டைம்லர் தங்கள் பங்குகளை மீண்டும் ஃபிரோடியா குழுமத்திற்கு விற்றது. பஜாஜ் டெம்போ மெர்சிடிஸ் பென்சுக்குச் சொந்தமானது என்பதால், "டெம்போ" வணிகப் பெயரை பயன்படுத்துவதை படிப்படியாக நிறுத்துவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.[5][6] பஜாஜ் ஆட்டோவின் ஆட்சேபனைகளின் காரணமாக, நிறுவனத்தின் பெயர் 2005 ஆம் ஆண்டில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் என்று மாற்றப்பட்டது, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஒரு நீண்ட வரலாற்றையும் ஒரு சுற்றுச் சுவரையும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்கிறது.[7]
2007 ஆம் ஆண்டில், பஜாஜ் ஆட்டோ, அதன் டச்சு துணை நிறுவனமான பஜாஜ் ஆட்டோ இன்டர்நேஷனல் ஹோல்டிங் பி. வி மூலம், ஆஸ்திரிய போட்டியாளரான கேடிஎம் இன் 14.5% பங்குகளை வாங்கியது, படிப்படியாக அதன் பங்குகளை 2020 ஆம் ஆண்டில் 48% கட்டுப்பாடு அல்லாத பங்காக அதிகரித்தது.[8] டிசம்பர் 2020 இல், பஜாஜ் கேடிஎம்-இல் இருந்து தனது பங்குகளை பியரெர் இண்டஸ்ட்ரியில் துணை நிறுவனமான கேடிஎம் கட்டுப்பாட்டு பங்குதாரர் பியரெர் மொபிலிட்டிக்கு மாற்றுவது குறித்த விவாதங்களைத் தொடங்கியது.[9]
26 மே 2008 அன்று, பஜாஜ் ஆட்டோ லிமிடெட் மூன்று பெருநிறுவன நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. அவை, பஜாஜ் பின்சர்வ் லிமிடெட், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் மற்றும் பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் என்பவை ஆகும்.[10]
2017 ஆம் ஆண்டில், பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் லிமிடெட் ஆகியவை நடுத்தர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை உருவாக்க இணைந்தன.[11]
2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கவாசாகி மோட்டார் சைக்கிள்களின் விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைக்காக பஜாஜ் மற்றும் கவாசாகி இந்தியாவில் விற்பனை மற்றும் சேவை கூட்டாண்மையை 2017 ஆம் ஆண்டில் முடிவுக்குக் கொண்டுவந்தன. இந்த கூட்டணியின் விற்பனையுரிமை பெற்ற நிறுவனங்கள் பின்னர் கேடிஎம் நிறுவனங்களாக மாற்றப்பட்டன. பஜாஜ் மற்றும் கவாசாகி ஆகியவை வெளிநாட்டு சந்தைகளில் தங்கள் உறவைத் தொடர்கின்றன.
26 நவம்பர் 2019 அன்று, பஜாஜ் ஆட்டோ மிதிவண்டி, மின்சார குதியுந்துகளை வாடகைக்கு அளிக்கும் புத்தொழில் நிறுவனமான யுலுவில் சுமார் ₹57 கோடி (₹8 மில்லியன்) முதலீடு செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, பஜாஜ் யுலுவுக்காக தனிப்பயனாக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் குதியுந்துகளை உற்பத்தி செய்யும்.
உக்ரைன் மீது உருசியப் படையெடுப்பு இருந்தபோதிலும் பஜாஜ் ஆட்டோ உருசியாவில் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தது. பல பன்னாட்டு நிறுவனங்கள் உருசியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திய நிலையில், பஜாஜ் உருசியச் சந்தையில் வழக்கம் போல் தனது வணிகத்தைப் பராமரித்து வருகிறது.[12]
உற்பத்தி
[தொகு]இந்நிறுவனத்திற்கு சகன், அவுரங்காபாத் உள்ள வாலுஜ் மற்றும் பந்த்நகரில் ஆலைகள் உள்ளன.[13] புனேவில் உள்ள அகுர்தியில் உள்ள மிகப் பழமையான ஆலையில் 'அஹெட்' என்ற பெயரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உள்ளது.[14]
தயாரிப்புகள்
[தொகு]



விசையுந்துகள், குதியுந்துகள், மூன்று சக்கர தானிகள், மகிழ்வுந்துகளை பஜாஜ் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.[15] 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி, பஜாஜ் ஆட்டோ இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர விசையுந்து ஏற்றுமதியாளராக இருந்தது.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Bajaj Auto Ltd Annual Report 2024" (PDF). Bajaj Auto Ltd. Retrieved 20 August 2024.
- ↑ "Company Profile - Bajaj Auto". Equitylion. 11 June 2017. Retrieved 20 June 2017.
- ↑ "Bajaj Auto - A historical analysis- Business News". www.businesstoday.in. 30 October 2015. Retrieved 8 May 2020.
- ↑ Iyer, Satyanarayan (25 March 2017). "Bajaj Auto ends its partnership with Kawasaki in India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Bajaj Tempo will now be Force Motors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 February 2005. https://timesofindia.indiatimes.com/business/india-business/Bajaj-Tempo-will-now-be-Force-Motors/articleshow/1031213.cms. பார்த்த நாள்: 20 September 2013.
- ↑ M, Sabarinath; Kalesh, Baiju (18 August 2014). "Bajaj group sells three-fourths of its shares in Force Motors". The Economic Times. https://economictimes.indiatimes.com/bajaj-group-sells-three-fourths-of-its-shares-in-force-motors/articleshow/40353118.cms?from=mdr.
- ↑ "Bajaj Tempo will now be Force Motors". The Times of India. 24 February 2005. https://timesofindia.indiatimes.com/business/india-business/Bajaj-Tempo-will-now-be-Force-Motors/articleshow/1031213.cms.
- ↑ Chowdhury, Anirban (31 March 2011). "Bajaj on Track for Low Cost Car Launch". Wall Street Journal. Retrieved 15 January 2021.
- ↑ Panday, Amit (1 December 2020). "Bajaj Auto eyes access to EV tech through KTM share swap". LiveMint. Retrieved 15 January 2021.
- ↑ "Demerger News". Bajaj Auto. Archived from the original on 22 October 2013. Retrieved 27 October 2013.
- ↑ Gupta, Surajeet Das (17 August 2017). "Bikes from Bajaj tie-up will be sold here & exported too: Nick Bloor". Business Standard India. http://www.business-standard.com/article/companies/bikes-from-bajaj-tie-up-will-be-sold-here-exported-too-nick-bloor-117081700070_1.html/.
- ↑ Power, John. "A year into Ukraine war, Asia's big brands sit out Russia boycott". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2024-12-06.
- ↑ "Bajaj Auto at Forbes". Forbes. 31 May 2013. Retrieved 27 October 2013.
- ↑ "Bajaj Auto may set up first electric vehicle plant in Akurdi". Moneycontrol (in ஆங்கிலம்). 8 November 2021. Retrieved 2022-08-31.
- ↑ Vira, Dhanil (22 July 2012). "The History Of Bajaj Auto". Motor Beam. Retrieved 8 May 2020.
- ↑ "Bajaj sales increase by 25 per cent in January - BikeWale". https://www.bikewale.com/news/38323-bajaj-sales-increases-by-25-per-cent-in-january.html.