பகுரைன் நகர மையம்
Appearance
இருப்பிடம்: | மனாமா, பகுரைன் |
---|---|
அமைவிடம் | 26°13′59.85″N 50°33′14.10″E / 26.2332917°N 50.5539167°E |
திறப்பு நாள் | 1 செப்டம்பர் 2008 |
உருவாக்குநர் | மசீத் அல் புட்டெயிம் குழுமம் |
உரிமையாளர் | மசீத் அல் புட்டெயிம் குழுமம் |
கடைகள் எண்ணிக்கை | 350 |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 450,000 m2 (4,800,000 sq ft) |
தள எண்ணிக்கை | 3 |
வலைத்தளம் | citycentrebahrain.com |
பகுரைன் நகர மையம் (City Centre Bahrain) பகுரைன் நாட்டின் மனாமா நகரிலுள்ள ஒரு பேரங்காடி ஆகும்[1].
பகுரைனில் மிகப்பெரிய பேராங்காடி[2] என்ற பெருமையுடன் 2008 ஆம் ஆண்டில் இம்மையம் திறக்கப்பட்டது. இங்கு கேர்ஃபோர் மீமிகை நிறுவனம் உட்பட 340 சில்லறை விற்பனை நிலையங்களும், 60 உணவு மையங்களும் உள்ளன[3][4]. மத்திய கிழக்கு முழுவதும் பல வணிக வளாகங்களை சொந்தமாகக் கொண்டுள்ள மசீத் அல் புட்டெயிம் குழும நிறுவனம் இப்பேரங்காடியை நிர்வகிக்கிறது[2][5]
பொழுதுபோக்கு அம்சங்கள்
[தொகு]- மந்திரக் கிரகம் என்ற குடும்பத்தினர் பொழுது போக்கு மையம்[5]
- வாகூ நீர்பூங்கா என்ற காலநிலை கட்டுப்பாட்டு உள்ளரங்க/வெளிப்புற நீர்ப்பூங்கா[5].
- ஏ 20- திரை 8000 சதுரமீட்டர் திரையரங்கு போன்றவைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இப்பேரங்காடியில் இடம்பெற்றுள்ளன[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bahrain City Centre". TripAdvisor. Retrieved 24 August 2014.
- ↑ 2.0 2.1 http://www.worldpropertyjournal.com/middle-east-africa-commercial-news/bahrains-retail-sector-top-commercial-market-performer-8385.php
- ↑ "Carrefour to open in Bahrain". ArabianBusiness.com. Retrieved 13 May 2016.
- ↑ "About us". Majid Al Futtaim Shopping Malls. Retrieved 13 May 2016.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-31. Retrieved 2016-12-01.