உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:32 விநாயகர் திருவுருவங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி.எம்.சுப்பிரமணி. அவர்களுக்கு,

  • விநாயகர் திருவுருவங்கள் பல உள்ளன. அவற்றில் 16 கணபதிகள் (சோடச கணபதி), 32 கணபதிகள் என இரு முக்கியமான வகைப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றிற்கான சிறப்பான மந்திரங்கள், அதனை செய்வதால் ஏற்படும் பலன், ஒவ்வொரு கணபதிக்மென சிறப்பான ஓமப் பொருள்கள் என சொல்லப்பட்டுள்ளன. எனவேதான் 32 கணபதிகளின் பெயர்களை தனித்து காட்டவேண்டும் என்பதற்காக அவ்வாறு பகுப்பை உருவாக்கினேன். அத்தோடு விநாயக புராணத்தில் இதில் சொல்லப்படாத பிற விநாயகர் திருவுருவங்களும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக மயூரேச கணபதியை குறிப்பிடலாம். இருப்பினும் தாங்கள் குறிப்பிட்டது போன்று பொதுவாக விநாயகர் திருவுருவங்கள் எனும் தலைப்பை வழங்க வேண்டுமாயின் இங்கு குறிப்பிட்டுள்ள 32 விநாயகர் திருவுருவங்களையும் தனித்து அடையாளப்படுத்துவதற்குரிய வகையில் ஓர் கட்டுரையை உருவாக்கிவிட்டு (32 விநாயகர் திருவுருவங்கள் அல்லது 32 விநாயகர் திருவுருவப் பட்டியல்) பகுப்பிற்கு விநாயகர் திருவுருவங்கள் எனும் தலைப்பை இடலாம்.--Sasitharagurukkal 03:37, 17 மே 2011 (UTC)[பதிலளி]
அப்படியானால் 32 விநாயகர் திருவுருவங்கள் என்பதை “விநாயகரின் 32 திருவுருவங்கள்” என்ற தலைப்புக்கு மாற்றி விடலாம். தலைப்பில் எண்கள் முன்னால் வருவது எனக்கு சரியானதாக இல்லை.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:50, 17 மே 2011 (UTC)[பதிலளி]
பகுப்பு ஆரம்பத்தில் எண்கள் வருவதற்கு ஒரு தடையும் இல்லை. இருந்து விட்டுப் போகட்டும். --சோடாபாட்டில்உரையாடுக 14:49, 19 மே 2011 (UTC)[பதிலளி]


//தலைப்பில் எண்கள் முன்னால் வருவது எனக்கு சரியானதாக இல்லை.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:50, 17 மே 2011 (UTC)//

தலைப்பில் எண்கள் வரக்கூடாது என்று எந்த விதியும் இல்லை. இதனால் எந்தச் சிக்கலும் இல்லை.

எனவே, இப்பகுப்பின் பெயரை மாற்றுவதென்பது தேவையற்ற ஒன்று... --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:56, 19 மே 2011 (UTC)[பதிலளி]

  • தலைப்பில் எண்கள் வரக்கூடாது என்பது விதியில்லாமல் இருக்கலாம். ஆனால் அது பயன்படும் இடத்தைப் பொறுத்து மாற்ற வேண்டியது அவசியமாகிறது. இங்கு 32 விநாயகர் திருவுருவங்கள் என்பது ஒன்று, இரண்டு என முப்பத்திரண்டு விநாயகருடைய திருவுருவங்கள் என்று ஆகி விடுவதாக உள்ளது. விநாயகரின் 32 திருவுருவங்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:26, 19 மே 2011 (UTC)[பதிலளி]

அனைத்தையும் ஒன்றாக்கவும்

[தொகு]

அனைத்தையும் ஒன்றாக்கவும்--Natkeeran (பேச்சு) 18:11, 14 மார்ச் 2012 (UTC)

+1 . நற்கீரன், இது போன்ற பல பகுப்புகளை இனங்கண்டு ஒன்றிணைக்கப் பரிந்துரைத்துத் தமிழ் விக்கியின் தரத்தைக் கூட்ட உதவுங்கள். நன்றி ;) --இரவி (பேச்சு) 18:14, 14 மார்ச் 2012 (UTC)