பகுப்பு பேச்சு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
Appearance
தமிழ் மொழியில், நடிகன் என்பது ஆணையும் நடிகை (அல்லது) நடிகைகள் என்பது பெண்ணையும் குறிக்கும். நடிகர் (அல்லது) நடிகர்கள் என்பது இருபாலாருக்கும் பொருந்தும்.
ஆங்கில விக்கிப்பீடியாவில் நடிப்புத் தொழில் செய்யும் ஆண்களை Male Actors என்றும் நடிப்புத் தொழில் செய்யும் பெண்களை Actresses என்றும் குறிப்பிட்டு பகுப்புகளை உருவாக்கியுள்ளனர். இவர்கள் இருவரையும் Actors எனும் பகுப்பினுள் கொண்டுவந்துள்ளனர்.
தமிழ் விக்கிப்பீடியாவிலும் ஆண் நடிகர்கள், நடிகைகள் (அல்லது) பெண் நடிகர்கள், நடிகர்கள் என்பதாக பகுப்புகளை ஒழுங்கமைக்க பரிந்துரை செய்கிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:00, 27 சனவரி 2024 (UTC)