பகுப்பு பேச்சு:கனேடியத் தமிழ் இதழ்கள்
இப்பகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகளில் பொருத்தமானவற்றை கனேடியத் தமிழ் இதழ்களின் பட்டியல் என்ற கட்டுரையில் ஒன்றிணைக்குமாறு கோருகிறேன்.
காரணங்கள்:
- தனிக்கட்டுரையாக இருக்கும் அளவுக்கும் குறிப்பிடத்தக்கமையைச் சுட்டும் வகையிலும் போதிய உள்ளடக்கம் இல்லை.
- பெரும்பாலான கட்டுரைகள் ஒரே ஆதாரத்தைக் கொண்டு எழுதப்பட்டுளன அல்லது ஆதாரமே இல்லை.
எடுத்துக்காட்டுகள்:
மேற்கண்ட காரணங்களினால், கட்டுரைகள் வளராமல் தொடர்ந்து குறுங்கட்டுரைகளாகவே தேங்கி இருக்கவே கூடுதல் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான கட்டுரைகளின் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை கேள்விக்குரியது. ஆனால், இந்த கேள்விக்குள் இப்போது நான் புக விரும்பவில்லை. தற்போதைக்கு, விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு கொள்கை அடிப்படையில் இவற்றை ஒன்றிணைக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:11, 13 ஏப்ரல் 2014 (UTC)
- நீங்கள் சுட்டிய மூன்று இதழ்களுக்குப் பின்னும் மிகப் பெரிய வரலாறு உண்டு. மஞ்சரிப் பத்திரிகை ஒரு அரசியல் பத்திரிகை. அதன் வெளியீடு, அதன் நிறுத்தம் குறித்து ஒரு அரசியல் பின்புலம் உண்டு. இதே போன்று பொதுகை மிகவும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாக இருந்தது. தமிழர் செந்தாமரை இன்றும் வெளிவரும், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தையும் நடத்தும் ஒரு பத்திரிகை. இது போன்ற காரணங்களாலேயே மைய நீரோட்டப் பார்வைக்கு அப்பாலான வெளியீடுகளின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்க கொள்கையினால் குறையும் என்று கூறினே. உங்கள் எடுத்துக்காட்டுக்கள் எனது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளன. --Natkeeran (பேச்சு) 18:32, 13 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், கட்டுரைகளின் குறிப்பிடத்தக்கமை குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை என்று தெளிவாகவே கூறியுள்ளேன்.
//நீங்கள் சுட்டிய மூன்று இதழ்களுக்குப் பின்னும் மிகப் பெரிய வரலாறு உண்டு. மஞ்சரிப் பத்திரிகை ஒரு அரசியல் பத்திரிகை. அதன் வெளியீடு, அதன் நிறுத்தம் குறித்து ஒரு அரசியல் பின்புலம் உண்டு. இதே போன்று பொதுகை மிகவும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாக இருந்தது. தமிழர் செந்தாமரை இன்றும் வெளிவரும், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தையும் நடத்தும் ஒரு பத்திரிகை. //
2008ல் தொடங்கிய இக்குறுங்கட்டுரைகளில் இது போன்ற தகவல்களை நம்பகமான ஆதாரங்களுடன் சேர்த்து யாரேனும் எழுதியிருக்கும் பட்சத்தில் இந்த ஒன்றிணைப்பு வேண்டுகோளுக்கே தேவையிருந்திருக்காது. இதே பகுப்பில் வேறு சில கட்டுரைகள் கூடிய தகவலுடன், அட்டைப்படம், தகவல் பெட்டியுடன் இருப்பதைக் காண முடிந்தது. எனவே தான் பொருத்தமான கட்டுரைகளை மட்டும் ஒன்றிணைக்க வேண்டினேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:02, 13 ஏப்ரல் 2014 (UTC)
//விக்கியில் குறுங்கட்டுரைகளுக்கு deadline போடும் பணி எப்பொழுது தொடங்கியது. //
போதிய உள்ளடக்கம் இல்லாத கட்டுரைகளை ஒரு மாதத்துக்குள் விரிவாக்காவிட்டால் நீக்க நேரிடும் என்ற வழமை 2006 முதலே இருக்கிறது.
கட்டுரை ஒன்றிணைப்புக் கொள்கை மே 2012ல் உருவானது.
// எந்தக் கட்டுரைக்கு எந்த deadline.//
எல்லா கட்டுரைகளுக்கும் ஒரு மாத காலக் கெடு என்று கட்டுரை ஒன்றிணைப்புக் கொள்கை பரிந்துரைக்கிறது.
//மூன்றுவரி விதிக்கு அப்பால், இது போன்ற தொல்லைகள் மிகவும் மோசம். //
மேலே உள்ள மூன்று எடுத்துக் காட்டுக் கட்டுரைகளையும் என்னால் ஒரே சொற்றொடராக எழுதிக் காட்ட முடியும். போதிய உள்ளடக்கம் இல்லா பல கட்டுரைகளுக்கு இந்த மூன்று வரி விதி தவறாக பயன்படுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் துப்புரவுப் பணியாற்றுவோர் மிகவும் குறைவு. அவர்களைத் தொல்லையாக கருதாமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 21:20, 13 ஏப்ரல் 2014 (UTC)
"போதிய உள்ளடக்கம் " என்பதற்கான வரையறை என்ன? அது எங்கே உள்ளது. அதை எப்பொழுது முடிவு செய்யப்பட்டது? --Natkeeran (பேச்சு) 21:48, 13 ஏப்ரல் 2014 (UTC)
Start a discussion about பகுப்பு:கனேடியத் தமிழ் இதழ்கள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பகுப்பு:கனேடியத் தமிழ் இதழ்கள்.