பகுப்பு பேச்சு:உறையுள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறையுள் வீடு எது கூடிய பொருத்தம்? --Natkeeran 15:01, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

வீடு என்பது பொருந்தாது என நினைக்கிறேன். உறையுள் எனக்குத் தெரிந்த வரையில் புழக்கத்தில் இல்லை. வசிப்பிடங்கள் அல்லது வாழிடங்கள் என்று கூறலாம் என்பது என் கருத்து. --Sivakumar \பேச்சு 15:37, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
உறைவிடங்கள் பொருந்தலாம்--ரவி 15:57, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

உறையுள் நல்ல தமிழ்ச் சொல். மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறையுள் என்று கற்றேன். உள் உறையும் இடம் என்பதால் உறையுள் என வந்திருக்கலாம். இலங்கையில் தமிழ்மொழிகற்ற அனைவருக்கும் உறையுள் மிகப் பரிச்சயமானது. ஏனெனில் மிக ஆரம்ப வகுப்பில் கற்பிக்கப்படுகிறது. --கோபி 16:49, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டிலும் அடிப்படைத் தேவைகள் உண்டி,உறையுள்,உடை (ஊனாவுக்கு ஊனா ;)) என்று அறிவர்..ஆனால், உறையுள் என்பது பேச்சுவழக்கில் இல்லை அவ்வளவுதான்--ரவி 17:29, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

உறையுள் என்பது நல்ல வழக்கில் இருந்து ஆனால் இன்று அருகி வரும் சொற்களில் ஒன்று. நான் சிறுவனாய் இருக்கையில் (40-50 ஆண்டுகளுக்கு முன்), விடுமுறைக்கு எங்கள் தாத்தா-பாட்டி ஊருக்குப் போவோம். நாள் முழுவதும் விளையாடுவோம். எங்கள் தாத்தா பாட்டி எங்களைப் பார்த்து, 'என்னடா தம்பி உங்கறதில்ல, உடுக்கறதில்ல, எப்பவும் இப்படி விள்யாடிக்கிட்டே இருந்தா எப்படி? என்று கேட்பார்கள். இன்று உடுத்து, உடுத்தல் என்னும் வினையும், (உண்ணுதல்)) உண்கிறது என்னும் வினையுமே அருகிவிட்ட பொழுது உறையுள் என்னும் சொல்லும் அருகி வருவதில் வியப்பு இல்லை. ஆனால் நானறிய உணவு, உடை, உறையுள் என்பது பெரு வழக்காக சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வந்த அடிப்படைத் தொடர்களின் ஒன்று.. மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்று பேசும் பொழுது இப்படித்தான் சொல்லுவது வழக்கம். --C.R.Selvakumar 03:11, 22 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

தேவைக்கேற்ப உறைவிடங்கள், இல்லங்கள், மனைகள், குடில்கள் என்று பயன்படுத்தலாம்.--C.R.Selvakumar 03:13, 22 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

விக்சனரியில் "shelter" என்பதன் அர்த்தங்களுள் ஒன்றாக "உறையுள்" எனக் கொடுக்கப்பட்டுள்ளது . மற்றொரு பக்கத்தில் "உறையுள்" என்பதற்கு பொருள் நிலவியலில் "காலத்தின் ஒரு உள்ளலகு" என்றும் இணையாக "Epoch" என்ற ஆங்கிலச்சொல்லும் தரப்பட்டுள்ளது. (en:Epoch)

எனவே இப்பகுப்பின் தலைப்பு "வாழிடங்கள்" என்பது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே என்ற பகுப்பு ஒன்று உள்ளதால் இப்பகுப்பில் உள்ள கட்டுரைகளை அப்பகுப்பில் இணைத்திருக்கிறேன். பிற பயனர்களுக்கு உடன்பாடு என்றால் இப்பகுப்பினை நீக்கி விடலாம். கருத்தினைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:39, 25 ஏப்ரல் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:உறையுள்&oldid=2959000" இலிருந்து மீள்விக்கப்பட்டது