உள்ளடக்கத்துக்குச் செல்

பகால் கோயில், வடக்கு சுமத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு சுமத்ராவில் உள்ள பகால் கோயில் I

பகால் கோயில் (Candi Bahal) அல்லது Biaro Bahal (biaro பெறப்பட்டவை என அழைக்கப்படும் விகாரை துறவியில்லமாகும்) அல்லது Candi Portibi ( Batak, portibi பெறப்படும்பொது prithivi, "பூமியில்") பகால் கிராமத்தில் உள்ள வஜ்ரயான புத்தக் கோயில் ஆகும். இக்கோயில் இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் படாங் லாவாஸ் ரீஜன்சியில், போர்டிபியில், படாங் போலக் என்னுமிடத்திலுள்ள பகாலில் அமைந்துள்ளது. இது பதாங்சிடெம்புவான் என்னுமிடத்திலிருந்து மூன்று மணி நேர பயணத்தில் மகிழ்வுந்தில் இக்கோயிலை அடையலாம். மேடனில் இருந்து 400 கி.மீ.தொலைவில் இக்கோயில் உள்ளது. இந்த வளாகத்தில் மூன்று கோயில்கள் உள்ளன. அவை பகால் கோயில் I, பகால் கோயில் II, மற்றும் பகால் கோயில் III என்பனவாகும். [1] இந்தக் கோயிலின் இடமானது கி.பி 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை பன்னாய் இராச்சியத்துடன் தொடர்புடையதாகும்.

வரலாறு

[தொகு]
பாருமுன் தெங்கா மாவட்டத்தில் எஸ்.ஐ.பமதுங்கில் கண்டுபிடிக்கப்பட்டஅமிதாப புத்தரின் வெண்கல சிலை

பகால் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட கோயில் பதங் லாவாஸ் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். [2] (பதங் லாவாஸ் என்பதற்கு மினாங்க்கபாவ் அல்லது "பரந்த சமவெளி" என்பது பொருளாகும்). பதங் லாவாஸ் பாரிசன் மலைகள் மற்றும் வடக்கு சுமத்ராவின் மலைப்பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு புல்வெளி தட்டையான சமவெளிப் பகுதியாகும். [1] இரு மலைப்பகுதிகளுக்கிடையேயான இடைவெளியில் நிலவும் வறண்ட காற்று வீசுவதால் சமவெளி உயரமான தாவரங்கள் இங்கு பயிரிடப்படுவதில்லை.[1] பதங் லாவாஸ் பகுதியில் பெரிய குடியேற்றங்கள் எதுவும் காணப்படவில். ஆனால் இந்த பகுதி சுமத்ராவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைக்கு இடையில் நகரும் மக்களுக்கு ஒரு முக்கியமான வழியாக அமைந்திருந்தது. இப்பகுதியில் மக்களின் வாழ்வு காரணமாக 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு காலங்களில் இப்பகுதியில் கோயில்கள் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. பதங் லாவாஸின் சமவெளிப் பகுதியில் 25 செங்கல் கட்டமானக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை புலோ கோயில், பாருமுன் கோயில், சிங்கிலோன் கோயில், சிபமுத்துங் கோயில், அலோபன் கோயில், ரோண்டமன் டோலோக் கோயில், பரா கோயில், மாகலேடங் கோயில், சிட்டோபயன் கோயில் மற்றும் நாகன் கோயில் உள்ளிட்ட கோயில்களாகும். [2] இந்த கோயில்களுக்கும் எந்த ராஜ்யங்களுக்கும் தொடர்பு காணப்படவில்லை. அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின்படி, அங்கு காணப்பட்ட மதம் ஆதித்யவர்மன் [3] பின்பற்றிய மதத்திற்கு ஒத்ததாக இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. [1] பகால் கோயில் மட்டுமே முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட கோயில்களாக அமைந்துள்ளன. மற்றவை இன்னும் இடிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. [2]

பதங் லாவாஸின் கோயில்களின் கட்டுமானம் பொ.ச. 11 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. [2] ஸ்ரீவிஜயன் மண்டலத்தின் கீழ் உள்ள மலாக்கா ஜலசந்தியின் கடற்கரையில் அமைந்துள்ள வர்த்தக துறைமுகங்களில் ஒன்றான பன்னாய் இராச்சியத்துடன் அவை இணைக்கப்பட்டிருக்கலாம்.

பகால் கோயில் I இன் மறுசீரமைப்பு 1977-1978 ஆம் ஆண்டுகளிலும், 1982-1983 ஆம் ஆண்டுகளிலும் நடைபெற்றது.. 1991-1992 ஆம் ஆண்டுக்கு இடையில் பகால் கோயில் II மீட்டெடுக்கப்பட்டது. [4]

கோயில் வளாகம்

[தொகு]

பகாலின் மூன்று கோயில்களும் சுமார் 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன. கோயிலின் வளாகம் உள்நாட்டில் பியாரோ ( விஹாரா அல்லது மடம்) என அழைக்கப்படுகிறது, இது அதன் அசல் பயன்பாட்டிற்கான ஒரு குறிப்பை உணர்த்தும் வகையில் உள்ளது. பகால் கோயில்களின் மூன்று பெயர்கள் நேபாளம் மற்றும் இலங்கையுடன் உள்ள தொடர்புகளைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளன. பகால் என்னும் சொல் இன்னும் நேபாளத்தில் வஜ்ராயனா பிரிவைச் சேர்ந்த இரட்டைத் தள அமைப்பைக் கொண்ட கோயில்களைக் குறிக்கிறது. இந்த மதம் இந்தோனேசியாவில் பௌத்த மதத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. [5] பகால் கோயிலில் காணப்படுகின்ற சிங்க சிற்பங்கள் 11ஆம் நூற்றாண்டில் இலங்கையின் தலைநகராக இருந்த பொலனருவாவில் உள்ள சிற்பங்களை ஒத்த நிலையில் காணப்படுகிறது. இந்த வளாகம் வடக்கு சுமத்ராவில் மிகப்பெரிய வளாகம் ஆகும். பகாலின் மூன்று கோயில்களும் சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டன. அதே நேரத்தில் சிற்பங்கள் மணல் கற்களால் கட்டப்பட்டன. ஒவ்வொரு கோயிலும் 1 மீட்டர் தடிமன் மற்றும் 1 மீட்டர் உயரம் கொண்ட சுற்றளவில், சிவப்பு செங்கல் சுவரால் சூழப்பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்வதற்கு கிழக்கு சுவரில் ஒரு வாயில் உள்ளது. அங்குள்ள கதவு இரு பக்கங்களிலும் 60 செமீ உயரத்தில் உள்ளது. ஒவ்வொரு வளாகத்தில் உள்ள முதன்மைக் கோயிலும் மையப் பகுதியில் அமைந்துள்ளது. [6]

இந்தக் கோயிலின் கட்டிடக்கலை கிழக்கு ஜாவாவில் பிரபோலிங்கோ என்னும் இடத்தில் உள்ள ஜபாங் கோயிலை ஒத்த நிலையில் உள்ளது. .

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Miksic 1996.
  2. 2.0 2.1 2.2 2.3 Kepustakaan Candi 2015.
  3. "Adityawarman", Wikipedia (in ஆங்கிலம்), 2019-09-20, retrieved 2019-12-06
  4. I.G.N. Anom & Tjepi Kusman 1991, ப. 39.
  5. Miksic 1996, ப. 105.
  6. I.G.N. Anom & Tjepi Kusman 1991, ப. 38.

வெளி இணைப்புகள்

[தொகு]