உள்ளடக்கத்துக்குச் செல்

பகவதி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவதி தேவி
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிகயா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 நவம்பர் 1936 ( 1936-11-06) (அகவை 88)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்பிஃபாய் தாஸ்
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்

பகவதி தேவி (Bhagwati devi) (பிறப்பு: 6 நவம்பர் 1936) ஓர் அரசியல்வாதியும் சமூக சேவகருமாவார். இந்திய மாநிலமான பீகாரின் கயா மாவட்டத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பகவதி தேவி 1936 நவம்பர் 6ஆம் தேதி பீகாரில் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள மிதையா கிராமத்தில் முசாஹர் எனப்படும் ஒரு தலித் சமூகத்தில் பிறந்தார்.[2]

தொழில்

[தொகு]

இவர் 1969இல் பீகார் சட்டமன்றத்தில் உறுப்பினரானார்.[1] 1995-96 வரை இவர் பணியாற்றினார்.

  • பல்வேறு குழுக்களின் உறுப்பினர், பீகார் சட்டமன்றம்
  • உறுப்பினர், மின்சார வாரியக் குழு, பீகார்

இவர் 1996இல் 11வது லோக் சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சிறப்பு ஆர்வங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள்

[தொகு]

இவர், சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளார். இவர் பெண்களின் நலன் மற்றும் சமூக நீதிக்கான போராட்டங்களிலும் பங்களித்துள்ளார். இவர் தனது தனிப்பட்ட நேரத்தை சத்சங்க கூடுகைக்காக செலவழித்துள்ளார்.[1]

பிற தகவல்

[தொகு]

பகவதி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். மேலும், அரசியல் போராட்டங்களில் பங்கேற்றதற்காக பல முறை சிறையிலும் அடைக்கப்பட்டார். இவர் சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் ராம் மனோகர் லோகியா, ஜெயபிரகாஷ் நாராயண், கர்பூரி தாக்கூர் ஆகியோருடன் தொடர்பிலிருந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை ராம் பியாரே சிங் என்பவர் "தாரதி கி பேட்டி" என்ற பெயரில் எழுதியுள்ளார்.[1][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Biographical Sketch Member of Parliament 11th Lok Sabha". Archived from the original on 8 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
  2. Jengcham, Subhash. "Mushahar". Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
  3. "Bhagwati Devi, Brinda Karat spar over Women's Reservation Bill : INDIASCOPE - India Today". Indiatoday.intoday.in. 1997-06-09. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவதி_தேவி&oldid=3481142" இலிருந்து மீள்விக்கப்பட்டது