பகடைப்பாம்பு
பகடைப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | நேட்ரிக்சு
|
இனம்: | நே. தெசெலெட்டா
|
இருசொற் பெயரீடு | |
நேட்ரிக்சு தெசெலெட்டா (லாரெண்டி, 1768) | |
நேட்ரிக்சு தெசெலெட்டா பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
கொரோனெல்லா தெசெலெட்டா லாரெண்டி, 1768 |
பகடைப் பாம்பு (Dice snake) என்பது ஐரவேசிய நஞ்சற்ற பாம்பு ஆகும், இது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்ததும், நாட்ரிசினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்த பாம்பும் ஆகும். இது நீர் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.[3]
விளக்கம்
[தொகு]பகடைப் பாம்புகள் பொதுவாக ஆண் பாம்புகளை விட பெண் பாம்புகள் பெரியன. இவை வழக்கமாக 1.0–1.3 m (39–51 அங்) நீண்டவை. இவற்றின் நிறம் சாம்பல் பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு அல்லது கிட்டத்தட்ட கருப்பு வரை மாறுபடும், முதுகில் கருமையான புள்ளிகள் இருக்கும். வயிறு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் தெளிவாக இருக்கும், இதன் உடலில் உள்ள கருப்பு புள்ளிகள், பகடையை மிகவும் ஒத்துள்ளதால், இந்தப் பாம்பு இப்பெயரைப் பெற்றது.
உயிரியல்
[தொகு]இந்தப் பாம்பானது முக்கியமாக ஆறுகள், நீரோடைகள், ஏரிகள் போன்றவற்றிற்கு அருகில் வாழும் தன்மைக் கொண்டது. இது பொதுவாக மீன்களை உணவாக கொள்கிறது. சில நேரங்களில், இது தவளை, தேரை, தலைப்பிரட்டை போன்ற நீர்நில வாழ்வனவற்றையும் உணவாகக் கொள்கிறது.
பகடைப்பாம்புகள் நச்சுத்தன்மையற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஊனீரில் சக்திவாய்ந்த குருதி ஒழுக்கு நிறுத்தி உற்பத்தி ஆகிறது.[4] மேலும் இதன் வாயில் உள்ள ஒரு சுரப்பியில் நரம்பு நஞ்சு உற்பத்தி செய்ய கூறப்படுகிறது.[5] எதிராளியைக் கண்டால் தன் பாதுகாப்புக்காக, தன் எச்சத் துவாரத்திலிருந்து மிகவும் மோசமான வாசனையை வெளியிகிறது. மேலும் ஆடாமல் அசையாமல் வாயைப் பிளந்து இறந்தது போல நடித்து ஏமாற்றுகிறது.
இனச்சேர்க்கை காலத்தில் (மார்ச்-மே), இவை பெரிய குழுக்களாக கூடுகின்றன. பொதுவாக யூலை மாதத்தில் முட்டை இடுகின்றன ஒரு பருவத்தில் 10-30 முட்டைகளை இடுகின்றன. இளம் பாம்புகள் செப்டம்பர் தொடக்கத்தில் குஞ்சு பொரிக்கின்றன.
பகடைப் பாம்புகள் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை தண்ணீருக்கு அருகிலுள்ள உலர்ந்த வளைகளில் நீள் உறங்கும் கொள்ளும்.
பரவல்
[தொகு]பகடைப் பாம்புகள் ஆப்கானித்தான், அல்பேனியா, ஆர்மீனியா, ஆஸ்திரியா, அசர்பைஜான், பொசுனியா எர்செகோவினா, பல்காரியா, சீனா, குரோவாசியா, சைப்பிரசு, செக் குடியரசு, பிரான்சு, சியார்சியா, ஜெர்மனி, கிரேக்கம், அங்கேரி, இந்தியா, ஈரான், ஈராக்கு, இஸ்ரேல்,[6] இத்தாலி, ஜோர்தான், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், லெபனான், மொண்டெனேகுரோ, வடக்கு மக்கெதோனியா, பாக்கித்தான், போலந்து,[7] உருமேனியா, உருசியா, செர்பியா, சிலோவாக்கியா, சுலோவீனியா, சுவிட்சர்லாந்து, சிரியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், துருக்கி, உக்ரைன், உசுபெக்கிசுத்தான், யெமன் என ஐரவேசியாவின் பெரும்பகுதி முழுவதும் காணப்படுகின்றன. இவை எகிப்திலும் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mebert, K.; Amr, Z.S.S.; Al Johany, A.M.H.; Aloufi, A.A.H.; Jiang, J.; Meyer, A.; Sterijovski, B.; Baha El Din, S. et al. (2021). "Natrix tessellata". IUCN Red List of Threatened Species 2021: e.T157256A745071. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T157256A745071.en. https://www.iucnredlist.org/species/157256/745071. பார்த்த நாள்: 21 February 2022.
- ↑ Boulenger, G.A. 1893. Catalogue of the Snakes in the British Museum (Natural History), Volume I. London. pp. 233-234
- ↑ Guicking, Daniela; Joger, Ulrich; Wink, Michael (25 August 2009). "Cryptic diversity in a Eurasian water snake (Natrix tessellata, Serpentes: Colubridae): Evidence from mitochondrial sequence data and nuclear ISSR-PCR fingerprinting". Organisms Diversity & Evolution 9 (3): 201–214. doi:10.1016/j.ode.2009.03.001. Bibcode: 2009ODivE...9..201G.
- ↑ Borkow, Gadi; Gutierrez, Jose Maria; Ovadia, Michael (December 1994). "A potent antihemorrhagin in the serum of the non-poisonous water snake Natrix tessellata: isolation, characterization and mechanism of neutralization". Biochimica et Biophysica Acta (BBA) - General Subjects 1201 (3): 482–490. doi:10.1016/0304-4165(94)90080-9. பப்மெட்:7803481.
- ↑ "Wildest Europe - Swimming Snake". www.facebook.com (in ஆங்கிலம்). Discovery Channel UK. பார்க்கப்பட்ட நாள் 2018-03-17.
- ↑ Academy, Reptile (2024-04-06). "Natrix tessellata: A Comprehensive Review". לוכד נחשים - מוקד מחוז ירושלים (in ஹீப்ரூ). பார்க்கப்பட்ட நாள் 2024-04-06.
- ↑ Vlcek, Petr; Bartlomiej Najbar and Daniel Jablonski.