உள்ளடக்கத்துக்குச் செல்

ந. சிறீகாந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தர் நல்லதம்பி சிறீகாந்தா
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2006–2010
முன்னையவர்நடராஜா ரவிராஜ், ததேகூ
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதமிழீழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (2004-2010, 2011-)
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (2010-2011)
வாழிடம்(s)பம்பலப்பிட்டி, கொழும்பு, இலங்கை
தொழில்வழக்கறிஞர்

கந்தர் நல்லதம்பி சிறீகாந்தா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குற்றவியல் சட்டத்தரணியும் ஆவார்.

அரசியலில்

[தொகு]

2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிறீகாந்தா யாழ்ப்பாண மாவட்டத்தில் டெலோ இயக்கத்தின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 33,210 விருப்பு வாக்குகளைப் பெற்றார். ஆனாலும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவில்லை.[1] பின்னர், 2006 நவம்பரில் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு சிறீகாந்தா நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2]

2010 இல் சிறீகாந்தா டெலோ இயக்கத்தை விட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டும் வெளியேறினார். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.[3] 2010 தேர்தலில் இக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவடத்தில் போட்டியிட்டார். இவரது கட்சியின் எந்த உறுப்பினரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை. 2011 சூனில் சிறீகாந்தா தனது புதிய கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் டெலோவில் சேர்ந்தார்.[4]

சிறீகாந்தா 2015 தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் டெலோ சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனாலும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.
  2. "New TNA parliamentarian takes oath". தமிழ்நெட். 30 November 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20447. 
  3. "New Tamil alliance in Sri Lanka says TNA betrayed Tamils". Colombo Page. 23 பெப்ரவரி 2010 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303170139/http://www.colombopage.com/archive_10/Feb1266911405CH.html. 
  4. "Sivajilingam, Sri Kantha decide to join TNA, restructure TELO". தமிழ்நெட். 25 June 2011. http://tamilnet.com/art.html?catid=13&artid=34110. 
  5. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  6. "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._சிறீகாந்தா&oldid=3559804" இலிருந்து மீள்விக்கப்பட்டது