நோர்சு தொன்மவியல்
நோர்சு தொன்மவியல் (Norse mythology) அல்லது இசுகான்டனேவியன் தொன்மவியல் கதைகள் கிரேக்க-ரோமன் தொன்மவியல் கதைகளுடன் ஒப்பிடத்தக்கது, ஆனால் பல்வேறு வழிகளில் வேறுபட்டது, தனுத்துவமானது. நோர்ஸ் தொன்மவியல் நோர்டீக் அல்லது ஸ்கான்டனேவியன் நாடுகள் என்று கூறப்படும் டென்மார்க், ஐஸ்லான்ட், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் வழங்கிய தொன்மவியல் கதைகளையே குறித்து நிற்கின்றது. (பொதுவாக பின்லாந்தும் மொத்த ஐந்து நோர்டீக் நாடுகளில் ஒன்று, ஆனால் தொன்மவியல் கதையாடிலில் பின்லாந்து தனித்துவமான மரபை கொண்டுள்ளது, குறிப்பாக கலேவலா இலக்கியம்.)[1][2][3]
நோர்ஸ் தொன்மவியல் மூன்று தளங்களில் ஒன்பது உலகங்களை கொண்டுள்ளது. இவ்வுலகங்கள் எக்டிர்சல் (Yggdrasil) எனப்படும் உலக மரத்தில் பிணைந்திருக்கின்றன. இவ்வுலகங்கள் அம்மரத்தில் தங்கியிருக்கும் தட்டையான வட்டு போன்று வருணிக்கப்படுகின்றன. இவை தவிர அம்மரத்தில் வேறு அம்சங்களும் உண்டு. உலக மரத்தின் உலகங்களும் அவற்றின் வாசிகளும் பின்வருமாறு:
மேல் உலகம்
- அஸ்கார்ட் (Asgard) - ஐசீர் (Aesir) அல்லது கடவுள்கள் உலகம்
- அல்வ்கேய்ம் (Alfheim) - எல்வ்ஸ் (Elves) உலகம்
- வனகேய்ம் (Vanaheim) - வானியர் (Vanir)
நடு உலகம்
- மிட்கார்ட் (Midgard) - மனிதர்கள் (Humans)
- யோருண்கைம் (Jotunheim) - யையன்ற்ஸ் (Giants)
- Svartalfheim - கருமை எல்ஃவ்ஸ் (dark-elves)
- Nidavellir - டுவோர்வ்ஸ் (dwarves)
கீழ் உலகம்
- Muspelheim
- நிவில்கேய்ம் (Niflheim) - இறந்தவர் பூமி
இவ் உலக மரம் என்றும் இருந்ததில்லை, அதற்கு ஒரு தோற்ற கதை உண்டு.
நோர்ஸ் தொன்மவிய்ல் கதைகளின் கூறுகள் பல பிரபல ஆங்கில நாவல் மற்றும் திரைப்படமான த லோட் ஒவ் த ரிங்ஸ் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rooth, Anna Birgitta (1961). Loki in Scandinavian Mythology. C. W. K. Gleerup. Archived from the original on 19 April 2023. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
- ↑ Lindow, John (1997). Murder and vengeance among the gods: Baldr in Scandinavian mythology, Edition 262. Suomalainen tiedeakatemia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9514108094. Archived from the original on 19 April 2023. பார்க்கப்பட்ட நாள் 3 October 2020.
- ↑ Lindow, John (1988). Scandinavian Mythology: An Annotated Bibliography. Garland Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0824091736. Archived from the original on 19 April 2023. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.