உள்ளடக்கத்துக்குச் செல்

நோசன் அச்சகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோசன் அச்சகம்
Notion Press
வகைதனியார்
நிறுவுகை2012
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்பார்கவா ஏ
நவீன் வலசகுமார்
ஜனா பிள்ளை
தொழில்துறைசுய வெளியீடு
உற்பத்திகள்புத்தகம்
இணையத்தளம்notionpress.com

நோசன் அச்சகம் (Notion Press) என்பது இந்தியாவின் சென்னையினை மையமாகக் கொண்ட ஒரு இந்திய சுய வெளியீட்டு நிறுவனம். இந்த நிறுவனம் உலகளவில் புத்தகங்களை வெளியிடுதல், அச்சிடுதல் மற்றும் விநியோகப் பணிகளை மேற்கொள்கிறது. ஆரம்பத்திலிருந்தே இது 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் படைப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தகங்களை விற்பனைச் செய்கின்றது. நவம்பர் 2018இன் பிற்பகுதியில், நிறுவனம் வருங்கால ஆசிரியர்களுக்காக விரைவுச் சேவையை அறிமுகப்படுத்தியது.[1]

வரலாறு[தொகு]

நோசன் அச்சகத்தினை பிரசினை நவீன் வலசகுமார் என்பவர் அவரது பள்ளி தோழர்கள் ஜனார்த்தனன் மற்றும் பார்கவா ஆகியோருடன் இணைந்து நிறுவினர்.[2] ஜனவரி 1, 2012 அன்று இது நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் ஆரம்ப முதலீடு 3.67 லட்சம் ஆகும். 2016ஆம் ஆண்டில், இது எச் என் ஐ யிடமிருந்து (HNI) 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியைப் பெற்றது.[3]

சேவைகள்[தொகு]

வெளியீட்டாளர் 2013இல் இலவச வெளியீட்டைத் தொடங்கினார்.[4]

புத்தகங்கள் மற்றும் விமர்சனங்கள்[தொகு]

விருது பெற்ற புனைகதை மற்றும் புனைகதை அல்லாத பல்வேறு வகையான புத்தகங்கள் நோஷன் பிரஸ்ஸில் வெளியிடப்பட்டுள்ளன. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் விமர்சனத்தின் படி "இந்தியாவில் முதல் சுய வெளியீட்டு நிறுவனம்" என்பது இதுதான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Have a story? This DIY publishing platform now allows aspiring authors to publish their book in 30 m- The New Indian Express". www.edexlive.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-05.
  2. . 
  3. . Chennai. 
  4. "Notion Press introduces India's first free publishing platform". chennai online. Chennai Online Website. பார்க்கப்பட்ட நாள் 7 November 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோசன்_அச்சகம்&oldid=3160195" இலிருந்து மீள்விக்கப்பட்டது