உள்ளடக்கத்துக்குச் செல்

நோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகுஷிமா புனிதத்தலத்தில் நோ நாடகம் நடந்தேறல்
சப்பானிய புத்தாண்டில் ஓக்கினா ஹோநோ (dedication of Noh play ஓர் வணக்கத்திற்குரிய முது மனிதன் என்ற நோ நாடகத்தை சமர்ப்பித்தல்)

நோ (Noh) ( ?), அல்லது நோகாகு (Nogaku) (能楽 Nōgaku?)[1] - சீன-சப்பானிய மொழியில் திறமை எனப் பொருள்படும் - என்பது சப்பானிய நாட்டிய நாடக வகையாகும்.இது 14வது நூற்றாண்டிலிருந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதன் சிறப்பியல்புகள் பல கதாபாத்திரங்கள் முகமூடியணிந்து வருவதும் ஆண்களே இருபாலர் வேடங்களையும் தரிப்பதும் ஆகும். வழக்கமாக இந்த நாடகங்கள் நாள் முழுவதும் நடக்கும்; தொடர்ந்து ஐந்து நோ நாடகங்கள், இடையில் குறுகிய காலயளவு கொண்ட நகைச்சுவையான கியோகன் நாடகங்களுடன் நடத்தப்படும். இந்நாட்களில் இரண்டு நோ நாடகங்களும் ஊடே ஓர் கியோகன் நாடகத்துணுக்குடன் நடக்கின்றன.

நோ நாடகம் முழுவதுமாக மரபுவழியில் கட்டுப்படுத்தப்பட்டு பழைமையான நாடகங்களே செவ்வியல் இலக்கணம் தவறாது நடத்தப்படுகின்றன. இருப்பினும் இந்த நாடகவகையில் புது நாடகங்களை எழுதியோ அல்லது இதுவரை போடப்படாத தொன்மையான நோ நாடகங்களை கண்டெடுத்தோ சிலர் புதுமையை அறிமுகப்படுத்துகின்றனர். நோ வகை நாடகக்கூறுகளை பிற நாடக வடிவங்களுடன் கலந்தும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nogaku". Dictionary.com.

நூற்தொகுப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோ&oldid=3349894" இலிருந்து மீள்விக்கப்பட்டது