உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாளத்தில் பாலின சமத்துவமின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தையுடன் தனது வீட்டில் நேபாள இல்லத்தரசி.

நேபாளத்தில் பாலின சமத்துவமின்மை (Gender inequality in Nepal) என்பது தெற்கு ஆசியா நாடான நேபாளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளையும், சமத்துவமினையையும் குறிக்கிறது. பாலின சமத்துவமின்மை என்பது சமத்துவமற்ற வகையில் நடத்துவது எனவும், வாய்ப்புகள் எனவும் வரையறுக்கப்படுகிறது.[1] பாலின சமத்துவமின்மை உலகளாவிய மனித வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக உள்ளது. ஏனெனில் பாலினமானது, ஆரோக்கியம், கல்வி, அரசியல் பிரதிநிதித்துவம், தொழிலாளர் சந்தைகள் போன்ற பல்வேறு துறைகளில் பாகுபாட்டின் அடிப்படையை தீர்மானிக்கிறது.[2] நேபாளம் நவீனமயமாக்கப்பட்டு, பாலினப் பாத்திரங்கள் மாறினாலும், பாரம்பரியமாக ஆணாதிக்க சமூகம் பாலின சமத்துவத்திற்கு முறையான தடைகளை உருவாக்குகிறது.[3]

உலக தரவரிசை

[தொகு]

உலக பொருளாதார மன்றத்தின் படி, பாலின சமத்துவத்தில் 144 நாடுகளில் நேபாளம் 110வது இடத்தில் உள்ளது என்று 2016 உலகளாவிய பாலின குறியீடு வெளிப்படுத்துகிறது. இந்த குறியீட்டுக்கான நேபாளத்தின் மதிப்பெண் 0.661 ஆகும். 1 பாலின சமத்துவத்தைக் குறிக்கிறது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பாலின சமத்துவமின்மைக் குறியீடு நேபாளத்திற்கு 0,497 மதிப்பெண்ணைக் கொடுத்தது. 0 சமத்துவத்தைக் குறிக்கிறது.[4] இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் , பொருளாதார நிலையை அளவிடும் இந்த குறியீட்டில், பாலின சமத்துவத்திற்காக 188 நாடுகளில் நேபாளம் 115 வது இடத்தில் உள்ளது.[4] கூடுதலாக, உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் 145 நாடுகளில் நேபாளம் 110வது இடத்தில் இருப்பதை ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு கண்டறிந்தனர்.[5]

சமீபத்திய வரலாறு

[தொகு]

மக்கள் போர்

[தொகு]

நேபாளத்தில் சமீபத்திய அரசியல் மோதல், 1996 முதல் 2006 வரை நேபாள மக்கள் புரட்சி என அழைக்கப்படுகிறது. இது முடியாட்சியை எதிர்த்து நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிசம்) முன்னெடுத்தது.[6] இந்த நேரத்தில் அரசியல் மோதல்களுக்கு பங்களிக்கும் கூடுதல் காரணிகளாக, பொருளாதார தேக்கம், அதிக வேலையின்மை, மோசமான கல்வி, வறுமையின்மை, தொடரும் பாகுபாடும் உயரடுக்கும், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இடையே அதிகரித்து வரும் இடைவெளி போன்றவை பார்க்கபடுகிறது.[6] நேபாள கம்யுனிஸ்ட் கட்சி நிலப்பிரபுத்துவ முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், மாநிலத்தின் வளங்களை தேசியமயமாக்குவதாகவும் , செல்வத்தை மறுபகிர்வு செய்வதாகவும் வாக்குறுதியளித்ததால், அரசியல் உள்போக்கு, ஊழல் மற்றும் மெதுவான முன்னேற்றம் ஆகியவை பெண்கள் உட்பட தகுதியற்ற குழுக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றன.[6] நேபாள கம்யுனிஸ்ட் கட்சி 1996-ல் 40 அம்ச கோரிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்தது. ஒரு கோரிக்கை குறிப்பாக பெண்களின் சமத்துவத்தை வலியுறுத்துகிறது: "ஆணாதிக்க சுரண்டலும், பெண்களுக்கு எதிரான பாகுபாடும் நிறுத்தப்பட வேண்டும். மகள்களுக்கு தந்தைவழி சொத்துக்களை அணுக அனுமதிக்க வேண்டும்"[7]

எதிர்க்கட்சி ஒரு கிளர்ச்சி இயக்கமாக மாறியது. இது ஒரு ஆயுத மோதலை ஏற்படுத்தியது.[7] அனைத்து நேபாள மகளிர் சங்கம் (புரட்சிகரம்) நேபாள கம்யுனிஸ்ட் கட்சி மூலம் உருவாக்கப்பட்டது , போர் முழுவதும் சாதிக்கும் , பாலின பாகுபாட்டிற்கும் எதிராக அடிமட்ட பிரச்சாரங்களை ஏற்பாடு செய்து, பெண்கள் நடவடிக்கை சார்ந்த மற்றும் கிளர்ச்சியில் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தது.[7] பல பெண்கள் மக்களாட்சி உரிமைகளுக்கான போராட்டம் சட்டரீதியான சமத்துவம், அரசியல் பங்கேற்பு, சமூக பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கோரி, பெண்களின் உரிமைகளுக்கான போராட்டமாகவும் இருக்க வேண்டும் என்று நம்பினர். நேபாள மக்கள் புரட்சி முழுவதும், பெண்கள் அரசியல் ஆர்வலர்கள் , கொரில்லா வீரர்கள், போராளிகளின் 40 சதவிகிதம், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என இருந்தனர்.[7] ஒரு தசாப்த மோதலுக்குப் பிறகு, 13,000க்கும் அதிகமானோர் இறந்தனர். மேலும், 200,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.[7] [8]

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Parziale, Amy (2008). "Gender Inequality and Discrimination". Encyclopedia of Business Ethics and Society. SAGE Publications, Inc. pp. 978–981. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4135/9781412956260.n365. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781412916523.
  2. "Gender Inequality Index (GII) | Human Development Reports". hdr.undp.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-23.
  3. Aguirre, D.; Pietropaoli, I. (1 December 2008). "Gender Equality, Development and Transitional Justice: The Case of Nepal" (in en). International Journal of Transitional Justice 2 (3): 356–377. doi:10.1093/ijtj/ijn027. பன்னாட்டுத் தர தொடர் எண்:1752-7716. 
  4. 4.0 4.1 "| Human Development Reports". hdr.undp.org (in ஆங்கிலம்). Archived from the original on 2018-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-03-23.
  5. "Nepal". evaw-global-database.unwomen.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-07.
  6. 6.0 6.1 6.2 "Transitional Justice in Nepal: A Look at the International Experience of Truth Commissions". United States Institute of Peace (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 Lohani-Chase, Rama S. (1 September 2014). "Protesting Women in the People's War Movement in Nepal". Signs: Journal of Women in Culture and Society 40 (1): 29–36. doi:10.1086/676891. பன்னாட்டுத் தர தொடர் எண்:0097-9740. 
  8. Singh, Sonal (7 December 2004). "Impact of long-term political conflict on population health in Nepal". CMAJ : Canadian Medical Association Journal 171 (12): 1499–1501. doi:10.1503/cmaj.1040777. பன்னாட்டுத் தர தொடர் எண்:0820-3946. பப்மெட்:15583204.