நேத்ரா (தொலைக்காட்சித் தொடர்)
நேத்ரா | |
---|---|
வகை | திகில் கற்பனைப்புனைவு நாடகம் |
எழுத்து | வசனங்கள் விஜய் நாகபைரு |
திரைக்கதை | ஆனந்த் கோராடியா |
கதை | மகேஷ் பாண்டே |
இயக்கம் | ராம்நாராயண் உரகொண்டா |
படைப்பு இயக்குனர் | அமோல் அர்விந்த் சுர்வே சஞ்சய் கோஷ் சோனியா பன்சால் |
நடிப்பு | ஷிவானி தோமர் பிரேம் ஜேக்கப் பரத்வாஜ் |
முகப்பு இசை | சுஷாந்த் பவார் |
முகப்பிசை | "அழகே அழகின் அழகே! கண்கள் மயங்கும் அழகே!" |
பின்னணி இசை | மனோஜ் ஷர்மா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 126 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | நீலேஷ் குன்டெல் |
தயாரிப்பாளர்கள் | சித்தார்த் குமார் தெவாரி காயத்ரி கில் தெவாரி ராகுல் குமார் தெவாரி |
படப்பிடிப்பு தளங்கள் | மும்பை |
ஒளிப்பதிவு | முரளி மோகன் சேகு |
அசைவூட்டம் | ராஜ் ஸ்டுடியோஸ் என் லைஃப் ஸ்டுடியோஸ் |
தொகுப்பு | சதீஷ் குல்கர்னி மேடிசெட்டி சந்தீப் பலடகு மஹிதர் அகாலேஷ் ஆரெதி |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | 40-42 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் ஸ்வஸ்திக் ப்ரோடக்ஷன்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் டிவி |
படவடிவம் | 576i SD 1080i HD |
ஒளிபரப்பான காலம் | திசம்பர் 4, 2022 27 ஆகஸ்ட் 2023 | –
நேத்ரா (Nethra) என்பது சன் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் பின்னர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பான திகில் நாடகத் தொடராகும். 4 டிசம்பர் 2022 அன்று தொடங்கிய இத்தொடரில் ஷிவானி தோமர், பிரேம் ஜேக்கப், பரத்வாஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
கதைச்சுருக்கம்
[தொகு]இச்சாதாரி நாகினியான நேத்ரா, உலக அமைதியைப் பாதுகாக்கும் சக்தி பொருந்திய நாகமணியைப் பெற வேண்டுமென்றால் ஒரு மனிதப்பிறவியைத் திருமணம் செய்ய வேண்டும். இதற்கான சுயம்வரத்தில் அவர் அர்ஜுன் என்ற இளவரசனைத் தேர்ந்தெடுக்கிறார். இதைப்பொறுக்காமல் சுயம்வரத்திற்கு வந்திருந்த கரண் என்ற அசுரன், அர்ஜுனைக் கொன்றான். இவ்வாறு நாகமணியை அடைவதற்கான போராட்டம் 6 ஜென்மங்களாகத் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் கரண் அர்ஜுனைக் கொன்று நாகமணியை அடைய முயற்சித்தான். ஆனால் நேத்ரா தன்னுயிரை மாய்த்துக்கொண்டு அடுத்தடுத்த ஜென்மத்தில் பிறந்துவந்தார்.
தற்போது ஏழாவது மற்றும் கடைசி ஜென்மத்தில் உள்ள நேத்ரா, அர்ஜுன், கரண் ஆகிய மூவரும் தங்கள் முன்ஜென்ம நினைவின்றி வாழ்ந்து வருகின்றனர். ஆறு ஜென்மங்களாய் பரம விரோதிகளாக இருந்த அர்ஜுன் மற்றும் கரண் தற்போது உயிர் நண்பர்களாக உள்ளனர். அர்ஜுனின் அலுவலகத்தில் கரணின் தனிப்பட்ட செயலாளராக நேத்ரா பணியாற்றி வருகிறார்
சிவன்கோவிலில் வசித்துவரும் வயதான பாட்டி ஒருவரின் உதவியால் நேத்ரா தன் முன்ஜென்ம நினைவுகளைப் பெற்று மீண்டும் நாகினியாக மாறுகிறார். கரணின் இடையூறுகளைக் கடந்து அர்ஜுனுடன் இணைந்து நாகமணியைப் பெற்று உலக அமைதியைப் பாதுகாப்பதே நேத்ராவின் நோக்கமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nethra - New Serial Promo | From 4th Dec 2022 | Every Sunday @ 2PM | Tamil Serial | Sun TV, பார்க்கப்பட்ட நாள் 2022-12-14
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2022 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தெலுங்கில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்
- 2023 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்