உள்ளடக்கத்துக்குச் செல்

நேதா பக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேதா பக்கல்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்பிரின்சுடன் பலகலைக்கழகம் (1971-1983,1989-அண்மையில்)

விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் (1983-1989)

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் (1970-1971)
அறியப்படுவதுபால்வெளிக் கொத்துகள், கரும்பொருண்மம்

நேதா ஏ. பக்கல் (Neta A. Bahcall) (பிறப்பு: 1942) ஒரு வனியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் கரும்பொருண்மம் (dark matter), புடவியின் கட்டமைப்பு, குவேசார்கள் எனும் பகுதிக் கதிர்வீச்சுப் பொருள்கள், பால்வெளியின் உருவாக்கம் ஆகிய புலங்களில் சிறப்பு ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். இவர் பிரின்சுடன் பல்கலைக்கழக யூகின் இக்கின்சு பேராசிரியரக இருந்தார்.

கல்வி

[தொகு]

பக்கல் 1963 இல் இசுரவேல், எபிரேயப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் கணிதவியலிலும் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1965 இல் இசுரவேல், வீழ்சும்ன் அறிவியல் நிறுவனத்தில் இயற்பியலில் முதுவர் பட்டம் பெற்றார். இவர் 1970 இல் இசுரவேல், தெல் அவீவு பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[1]

வாழ்க்கைப் பணி

[தொகு]

இவர் 1970 முதல் 1971 வரை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியலில் ஆய்வுறுப்பினராக இருந்தார். அதே ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்; இவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய தொடங்கிரங்கே 1989 முதல் முழுநேரப் பேராசிரியர் ஆனார். இவர் 1971 முதல் 1983 வரை ஒரு முதுநிலை வானியர்பியலாளரிடம் ஆய்வு உதவியாலராக இருந்தார். இவர் 1983 முதல் 1989 வரை பொது நோக்கீட்டாளர் ஆதரவுக் கிளையின் தலைமையேற்றார். மேலும், இவர் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் அறிவியல் திட்டத் தெரிவு அலுவலகத் தலிமையையும் ஏற்றார். இவர் இங்கு எந்த அறிவியல் திட்டம் அபுள் தொலைநோக்கியைப் பயன்படுத்தவேண்டும் எனத் தேர்வு செய்வார். இவர் 2000 முதல் 2008 வரை பிரின்சுடனின் அறிவியல் தொழில்நுட்ப மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார்.[1] மஉள் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இவர் பல்வேறு பால்வெளிகளின் இருப்பையும் கட்டமைப்பையும் படம்பிடித்தார். வானியற்பியல் புலத்துக்கான இவரது அரிய பங்களிப்புகளில் ஒன்றாக புடவியின் பொருண்மையைக் கணகீட்ட்தைக் கூறலாம். இவர் வானியற்பியல் வல்லுனரான தன் கணவருடன் (ஜான் பக்கலுடன்) இணைந்தும் வேறு பிறருடன் இணைந்து நூற்றுக்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் 1997 இல் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் 1998 இல் சுட்டாக்கோல்மில் ஆற்றிய நோபல் கருத்தரங்கு உரை உள்ளிட்ட பல விரிவுரைகளை பல நிறுவனங்களில் நிகழ்த்தியுள்ளார். இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் நெடுநாளைய் உரூப்பினரும் 1995 முதல் 1998 வரை அதன் துணைத்தலைவரும் ஆவார். இவர் 2003 இல் இருந்து அண்மை வரை தேசிய வானியல், வானியற்பியல் அறிவுரைக் குழுவின் உறுப்பினரும் ஆவர்; இவர் 1993 முதல் 1997 வரை விண்வெளித் தொலைநோக்கி நிறுவன மன்றத்தின் உறுப்பினராகவும் 1998 முதல் 2004 வரை பன்னாட்டு வானியல் ஒன்றிய அமெரிக்கத் தேசியக் குழுவின் உறிப்பினரும் 1990 முதல் 1995 வரை சுலோவான் இலக்கவியல் வானளக்கை சார்ந்த அறிவுரைக் குழுவின் உறுப்பினரும் 1990 முதல் 1993 வரை அமெரிக்க இயற்பியல் நிறுவனத்தின் பன்னாட்டு உறவுக்கான குழுவின் உறுப்பினரும் ஆவார். இவர் 1983 இல் வானியலில் மகளிர் நிலை சார்ந்த அமெரிக்க வானியல் கழக்க் குழுவில் தலைமையேற்றார்.ரிவர் 2006 இல் ஓகியோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் தகைமை முனைவர் பட்ட்த்தைப் பெற்றுள்ளார்.ரிவரது மூன்று மக்களும் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.[1]

சமயக் கண்ணோட்டம்

[தொகு]

கடவுள் நம்பிக்கையும் பார்வையும் பற்றி இவரிடம் கேட்டபோது, பக்கல் பின்வருமாறு கூறியுள்ளார்: " நான் மிகவும் சமயவாதியல்ல; ஆனால், மிகவும் யூதப் பண்பாட்டைப் பின்பற்றுவேன்... சமயம் கடவுளைப் பற்றிக் கேள்வி கேட்கும்போது நான் அறிவியலை இணைக்கிறேன். இதன் பொருள் புடவியை உருவாக்கிய அனைத்து இயற்பியல் விதிகளும் புடவியின் அளப்பரிய அழகும் கடவுளுடனான இணைப்பை உருவகிக்கின்றன என்பதாகும்."[2]

விருதுகளும் பரிசுகளும்

[தொகு]
  • சிசிலியா பேய்னே கபோசுச்கின் பரிசு, ஆர்வார்டு பல்கலைக்கழகம் (2013)
  • தகைமை ஆராய்ச்சிக் கட்டில், கோட்பாட்டு இயற்பியலுக்கான பெரிமீட்டர் நிறுவனம், ஒண்டாரியோ, கனடா (2009 -2013)
  • தகைமைப் பட்டம், முதுமுனைவர், ஓகியோ அரசு பல்கலைக்கழகம் (2006)
  • உறுப்பினர், தேசிய அறிவியல் கல்விக்கழகம், ஐக்கிய அமெரிக்கா (1997)

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்

[தொகு]
  • Neta A. Bahcall; Jeremiah P. Ostriker; Saul Perlmutter; Paul J. Steinhardt (1999). "The Cosmic Triangle: Revealing the State of the Universe". Science 284: 1481–1488. doi:10.1126/science.284.5419.1481. http://www.physics.princeton.edu/~steinh/cosmictriangle.pdf. பார்த்த நாள்: 2017-11-01. 
  • Bahcall, N.A; Cen, R. (1992), "Galaxy clusters and cold dark matter-A low-density unbiased universe?", The Astrophysical Journal Letters, vol. 398, p. L81-L84, Bibcode:1992ApJ...398L..81B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/186582
  • Bahcall, N.A; Cen, R. (1993), "The Mass Function of Clusters of Galaxies", The Astrophysical Journal, vol. 407, p. L49-L52, Bibcode:1993ApJ...407L..49B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/18680

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Wayne, Tiffany K. (2011). "Bahcall, Neta". American Women of Science since 1900, Vol. 1. Santa Barbara, CA: ABC-CLIO. pp. 210–212.
  2. Hargittai, Balazs; Hafittaí, István. 2005. Candid Science V: Conversations with Famous Scientists. Imperial College Press, p. 278

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேதா_பக்கல்&oldid=3633132" இலிருந்து மீள்விக்கப்பட்டது