நெடுங்குன்றம் இராமச்சந்திர பெருமாள் கோயில்
நெடுங்குன்றம் இராமச்சந்திர பெருமாள் கோயில் என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு இராமர் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயிலானது சேத்துப்பட்டு - வந்தவாசி நெடுஞ்சாலையில் சேத்துப்பட்டிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தொன்மம்
[தொகு]இத்தலம் குறித்த தொன்மக் கதை பின்வறுமாறு: இலங்கையில் இராவணனை அழித்து சீதையை மீட்ட இராமர் திரும்பும்போது நெடுங்குன்றம் பகுதிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. அப்போது மலையில் இருந்த சகப்பிரம்ம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். இராமனைக் கண்டு மகிழ்ந்த அந்தத் துறவி, இராமருக்கு அரிய சாத்திரங்கள் அடங்கிய ஓலைச் சுவடியை அளித்து ஆசிரமத்தில் ஒரு நாள் தங்கிச் செல்லுமாறு கேட்டுள்ளார். அதன்படி இராமர் இங்கு தங்கியதாக நம்பப்படுகிறது.
கோயில்
[தொகு]இக்கோயில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராமர் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய கை மார்புக்கு அருகே வைக்கபட்டுள்ளது. அது ஞான முத்திரை என்று கருதப்படுகிறது. சீதை வலக் கையில் தாமரையை ஏந்தியும், இடக்கை அபய அஸ்த முத்திரையைக் காட்டியபடியும் உள்ளார். இலக்குவன் கைகூப்பியபடி உள்ளார். கருவறைக்கு மேலுள்ள விமானம் கனக விமானம் என்று கூறப்படுகிறது. கருவறையைச் சுற்றி குகை போன்ற பிரகாரம் அமைந்துள்ளது.
செங்கமலவல்லி தாயார் திருமுன் அமைந்துள்ள முகமண்டபத்தில் இராமாயண, தசாவதார, கிருஷ்ண லீலை, கிருஷ்ணதவேவராயர் சிற்பங்கள் அமைந்துள்ளன.
விழாக்கள்
[தொகு]இக்கோயிலில் இராம நவமியை ஒட்டி பங்குனி மாதம் பத்து நாள் விழா கொண்டாடப்படுகிறது ஏழாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் இந்திர விமானத் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மன அமைதி அருளும் நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள்". Hindu Tamil Thisai. 2025-04-03. Retrieved 2025-04-05.